Just In
- 2 hrs ago
ஸ்கோடா ஆக்டேவியாவில் புதிய ஸ்போர்ட்லைன் வேரியண்ட்!! புதுமையான தோற்றத்தில் கொண்டுவரப்பட்டது...
- 9 hrs ago
மொத்தமாக மின்சார வாகனங்களின் பக்கம் சாயும் சீனர்கள்!! இவி விற்பனை ஒரேடியாக 279% அதிகரிப்பு!
- 11 hrs ago
சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவரும் பஜாஜ்!! விலை உயரவுள்ளதா?
- 14 hrs ago
டோல்கேட் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க தனியாக சாலை அமைத்த மக்கள்!
Don't Miss!
- News
ஆக்சிஜன் பெட் தட்டுப்பாடு.. ரெம்டிசிவிர் மருந்து இல்லை.. டாக்டர்கள் போராட்டம்.. எங்க தெரியுமா?
- Sports
எவ்வளவு திமிர்.. அவரை ஓரம்கட்டிட்டு இப்ப போய் புலம்பினா எப்படி? வார்னரை வறுத்தெடுக்கும் பேன்ஸ்!
- Finance
தொலைந்து போன ஏடிஎம்மினை எப்படி பிளாக் செய்வது.. கனரா வங்கியில் மிக எளிது..!
- Movies
'மாநாடு' சிம்பு, வெங்கட் பிரபுவுக்கு பெரிய மைக் கல்லா இருக்கும்...சொல்றது இவர் தான்
- Lifestyle
தமிழ் புத்தாண்டைப் பற்றிய வியப்பூட்டும் தகவல்கள்!
- Education
ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அந்தக்கால இனிமையான நினைவுகளால் பெரும் வரவேற்பு... புதிய டாடா சஃபாரி காரை வாங்க போட்டி போடும் இந்தியர்கள்...
இந்தியாவில் புதிய டாடா சஃபாரி காருக்கு உற்சாக வரவேற்பு கிடைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2021 டாடா சஃபாரி காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த பிப்ரவரி 22ம் தேதி இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. புதிய டாடா சஃபாரி கார், 14.69 லட்ச ரூபாய் முதல் 21.45 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் கிடைக்கிறது. இது புது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும். டாடா சஃபாரி காருக்கு இந்தியாவில் தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அறிமுக மாதத்திலேயே இந்திய சந்தையில் 1,707 சஃபாரி கார்களை விற்பனை செய்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அசத்தியுள்ளது. இது உண்மையிலேயே மிகப்பெரிய விஷயமாகும். டாடா சஃபாரியை பற்றிய கடந்த கால இனிமையான நினைவுகள் இந்த வரவேற்பிற்கு மிகவும் முக்கியமான ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தை தொடர்ச்சியாக வாசித்து கொண்டிருப்பவர்களுக்கு, முதலில் இந்த கார் கிராவிட்டாஸ் என்ற பெயரில்தான் விற்பனைக்கு வரவிருந்தது என்பது தெரியும். ஆனால் அதன்பின் காரின் பெயரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சஃபாரி என மாற்றியது. இந்திய சந்தையில் டாடா சஃபாரி தனித்துவமான ஒரு வாகனம் என்பது நம் அனைவருக்குமே தெரியும்.

அப்படிப்பட்ட ஒரு வாகனம் திரும்ப வந்திருப்பது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. ஏற்கனவே விற்பனையில் உள்ள டாடா ஹாரியர் எஸ்யூவியின் மூன்று வரிசை வெர்ஷன்தான் புதிய டாடா சஃபாரி. டாடா ஹாரியர் கட்டமைக்கப்பட்டுள்ள அதே ஒமேகா பிளாட்பார்ம் அடிப்படையில்தான் புதிய சஃபாரியும் உருவாக்கப்பட்டுள்ளது.

அத்துடன் டாடா ஹாரியரில் உள்ள அதே 2.0 லிட்டர் டீசல் இன்ஜின்தான் டாடா சஃபாரியிலும் வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 170 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடிய இந்த இன்ஜின் 2 டிரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் கிடைக்கிறது. அவை 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆகும்.

6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் புதிய டாடா சஃபாரி கிடைக்கிறது. அத்துடன் 8.8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், 7 இன்ச் எம்ஐடி உடன் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், பனரோமிக் சன்ரூஃப், டிரைவிங் மோடுகள் (ஈக்கோ, சிட்டி, ஸ்போர்ட்), டெர்ரெயின் ரெஸ்பான்ஸ் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளை புதிய டாடா சஃபாரி பெற்றுள்ளது.

அத்துடன் எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ஐரா கனெக்டட் கார் தொழில்நுட்பம் ஆகிய வசதிகளும் புதிய டாடா சஃபாரியில் வழங்கப்பட்டுள்ளன. இந்திய சந்தையில் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் உள்ளிட்ட கார்களுடன் புதிய டாடா சஃபாரி போட்டியிட்டு வருகிறது. அத்துடன் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ஹூண்டாய் கிரெட்டாவின் 7 சீட்டர் மாடலுக்கும் புதிய டாடா சஃபாரி விற்பனையில் கடுமையான சவாலை வழங்கும்.

இந்தியாவில் சமீப காலமாக டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களின் விற்பனை உயர்ந்து கொண்டே வருகிறது. டியாகோ, நெக்ஸான் மற்றும் அல்ட்ராஸ் ஆகிய கார்கள் டாடா நிறுவனத்திற்கு மிக சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தந்து கொண்டுள்ளன. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயர சஃபாரியும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.