மஹிந்திரா தாருக்கு போட்டியாக பிஎஸ்6 குர்கா வாகனத்தை கொண்டுவரும் ஃபோர்ஸ்!! உட்பக்க சிறப்பம்சங்கள் வெளியீடு

2021 ஃபோர்ஸ் குர்கா காரின் உட்புறத்தில் வழங்கப்படவுள்ள வசதிகள் மற்றும் ஆக்ஸஸரீகள் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. இது தொடர்பான ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மஹிந்திரா தாருக்கு போட்டியாக பிஎஸ்6 குர்கா வாகனத்தை கொண்டுவரும் ஃபோர்ஸ்!! உட்பக்க சிறப்பம்சங்கள் வெளியீடு

புதிய தலைமுறை ஃபோர்ஸ் குர்கா முதன்முறையாக 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது. அதன்பின் 2020 தீபாவளி காலத்தில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதிய குர்காவின் அறிமுகம் கொரோனா வைரஸினால் தள்ளிப்போனது.

மஹிந்திரா தாருக்கு போட்டியாக பிஎஸ்6 குர்கா வாகனத்தை கொண்டுவரும் ஃபோர்ஸ்!! உட்பக்க சிறப்பம்சங்கள் வெளியீடு

தற்போது கொரோனாவினால் கொண்டுவரப்பட்ட ஊரடங்குகளில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுவிட்டதால் இதன் அறிமுகம் வரும் மாதங்களில் இருக்கலாம். இதற்கிடையில் தற்போது எந்தவொரு மறைப்பும் இல்லாமல் 2021 ஃபோர்ஸ் குர்கா வாகனம் ஒன்று பொது சாலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

டூடியோஸ் வாண்டெரர் என்ற யூடியுப் பக்கத்தின் மூலமாக கிடைத்துள்ள இது தொடர்பான வீடியோவின் மூலம் வாகனத்தின் உட்புறத்தில் வழங்கப்பட்டுள்ள அம்சங்களை பற்றியும், கூடுதல் ஆக்ஸ்ஸரீகளாக வழங்கப்படவுள்ளவை பற்றியும் ஓரளவிற்கு தெரிய வந்துள்ளது.

மஹிந்திரா தாருக்கு போட்டியாக பிஎஸ்6 குர்கா வாகனத்தை கொண்டுவரும் ஃபோர்ஸ்!! உட்பக்க சிறப்பம்சங்கள் வெளியீடு

மொத்த தோற்றத்தை பொறுத்தவரையில் 2021 ஃபோர்ஸ் குர்கா அதன் முந்தைய வெர்சனை காட்டிலும் முரட்டுத்தனமான தோற்றத்தை ஏற்றுள்ளது. குறிப்பாக புதிய டிசைனிலான க்ரில் அமைப்பு, அப்டேட்டான பம்பர் மற்றும் புதிய டிசைனிலான விளக்குகளுக்கான குழிகளினால் முன்பக்கம் கரடுமுரடான தோற்றத்தை பெற்றுள்ளது.

மஹிந்திரா தாருக்கு போட்டியாக பிஎஸ்6 குர்கா வாகனத்தை கொண்டுவரும் ஃபோர்ஸ்!! உட்பக்க சிறப்பம்சங்கள் வெளியீடு

இந்த படங்களின் மூலம் இரட்டை-நிற அலாய் சக்கரங்கள், சக்கரங்களுக்கு மேற்புறத்தில் வளைவுகள் மற்றும் க்ளாடிங், ஃபோர்ஸ் மோட்டார்ஸின் அடையாள ஸ்னோர்கில் மற்றும் பெரிய பின் கதவு கண்ணாடி உள்ளிட்டவற்றையும் புதிய குர்கா கொண்டுள்ளதை பார்க்க முடிகிறது.

மஹிந்திரா தாருக்கு போட்டியாக பிஎஸ்6 குர்கா வாகனத்தை கொண்டுவரும் ஃபோர்ஸ்!! உட்பக்க சிறப்பம்சங்கள் வெளியீடு

2021 ஃபோர்ஸ் குர்கா வாகனம் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தயாரிப்பு நிறுவத்தில் இருந்து வெளிவரவில்லை. நமக்கு தெரிந்தவரை இந்த ஆஃப்-ரோடு எஸ்யூவி காருக்கு புதிய நிறங்கள் தேர்வுகளாக வழங்கப்படலாம்.

மஹிந்திரா தாருக்கு போட்டியாக பிஎஸ்6 குர்கா வாகனத்தை கொண்டுவரும் ஃபோர்ஸ்!! உட்பக்க சிறப்பம்சங்கள் வெளியீடு

இந்த ஸ்பை படங்களில் குர்காவின் உட்புற கேபின் சில மாற்றங்களை ஏற்றுள்ளது. இதில் முக்கியமான மாற்றங்கள் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் அடங்கிய டேஸ்போர்டு மற்றும் மைய கன்சோலில்தான் கொண்டுவரப்பட்டுள்ளன.

மஹிந்திரா தாருக்கு போட்டியாக பிஎஸ்6 குர்கா வாகனத்தை கொண்டுவரும் ஃபோர்ஸ்!! உட்பக்க சிறப்பம்சங்கள் வெளியீடு

2021 ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி கார் உட்புறத்தில் ஓட்டுனருக்கு தேவையான தகவல்களை வழங்கக்கூடிய டிஜிட்டல் திரை உடன் புதிய இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் இன்ஃபோடெயின்மெண்ட் யூனிட்டிற்கு மேலே வட்ட வடிவிலான ஏசி துளைகளையும் பெற்றுள்ளது.

மஹிந்திரா தாருக்கு போட்டியாக பிஎஸ்6 குர்கா வாகனத்தை கொண்டுவரும் ஃபோர்ஸ்!! உட்பக்க சிறப்பம்சங்கள் வெளியீடு

இரண்டாவது இருக்கை வரிசையில் வழக்கம்போல் வாகனத்தின் இயங்கு தளத்திற்கு ஏற்ற முன்னோக்கி பார்க்கப்பட்ட இருக்கைகளும் கடைசி மூன்றாவது வரிசையில் அதிகளவில் குதிக்கக்கூடிய இருக்கைகளும் வழங்கப்பட்டுள்ளன.

மஹிந்திரா தாருக்கு போட்டியாக பிஎஸ்6 குர்கா வாகனத்தை கொண்டுவரும் ஃபோர்ஸ்!! உட்பக்க சிறப்பம்சங்கள் வெளியீடு

மற்றப்படி ஃபோர்ஸ் குர்காவின் தற்போதைய 2.6 லிட்டர் டீசல் என்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை. தற்போதைய குர்காவில் இந்த டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 90 பிஎச்பி மற்றும் 280 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக வழங்கப்படுகிறது.

மஹிந்திரா தாருக்கு போட்டியாக பிஎஸ்6 குர்கா வாகனத்தை கொண்டுவரும் ஃபோர்ஸ்!! உட்பக்க சிறப்பம்சங்கள் வெளியீடு

இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனுக்கு 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தொடர்ந்து இணைக்கப்படவுள்ளது. 2021 குர்காவின் டாப் வேரியண்ட்களில் பிரத்யேகமான 4X4 ட்ரைவ் சிஸ்டம் ஆனது குறைந்த-விகித ட்ரான்ஸ்ஃபர் கேஸ் உடன் வழங்கப்படவுள்ளது. ஃபோர்ஸ் குர்கா பிஎஸ்6 வாகனத்திற்கு மஹிந்திரா தார் மிக முக்கிய போட்டி மாடலாக விளங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Most Read Articles

English summary
2021 Force Gurkha Interior, Accessories Revealed
Story first published: Sunday, January 24, 2021, 13:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X