இந்தியா வரும் முதல் ஜாகுவார் முழு-பேட்டரி கார்!! விற்பனை மையங்களின் எண்ணிக் அதிகரிப்பு!

ஐ-பேஸின் வருகிற மார்ச் 23 அறிமுகத்திற்கு முன்னதாக ஜாகுவார் இதுவரையில் 22 அவுட்லெட்களை இந்தியாவில் தயார்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியா வரும் முதல் ஜாகுவார் முழு-பேட்டரி கார்!! விற்பனை மையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனம் ஐ-பேஸ் எலக்ட்ரிக் காரின் மார்ச் 9ல் இருந்து மார்ச் 23-க்கு தள்ளிப்போகியுள்ளது. அதற்கு முன்னதாக வணிகத்தை விரிவுப்படுத்தும் நோக்கில் சில்லறை அவுட்லெட்களை 22 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியா வரும் முதல் ஜாகுவார் முழு-பேட்டரி கார்!! விற்பனை மையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஜாகுவாரின் இந்த 22 சில்லறை டீலர்ஷிப் மையங்கள் இந்தியாவில் 19 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ளன. மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி காரை தொடர்ந்து இந்தியாவில் அறிமுகமாகும் இரண்டாவது முழு-பேட்டரி காராக விளங்கவுள்ள ஜாகுவார் ஐ-பேஸ் உலகளவில் ஏகப்பட்ட விருதுகளை அள்ளியுள்ளது.

இந்தியா வரும் முதல் ஜாகுவார் முழு-பேட்டரி கார்!! விற்பனை மையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இப்படிப்பட்ட காரை இந்தியாவில் விற்பனை செய்யவே ஜாகுவார் நிறுவனம் இவ்வாறு டீலர்ஷிப் மையங்களை விரிவுப்படுத்துவதில் எந்த தவறும் இல்லை. புதிய அவுட்லெட்களை உருவாக்குவது மட்டுமில்லாமல், பெரும்பான்மையான அவுட்லெட்கள் கட்டமைப்பில் மேம்படுத்தவும் பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா வரும் முதல் ஜாகுவார் முழு-பேட்டரி கார்!! விற்பனை மையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கூடுதலாக, இந்த விற்பனை நிலையங்களில் உள்ள ஊழியர்களுக்கு பிரத்யேகமாக இவி படிப்புகளுடன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களால் ஐ-பேஸின் அம்சங்களை சிறப்பாக விளக்க முடியும் மற்றும் வாங்கும் வாடிக்கையாளர்களின் கவலைகளை நிவர்த்தி செய்யவும் முடியும்.

இந்தியா வரும் முதல் ஜாகுவார் முழு-பேட்டரி கார்!! விற்பனை மையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

"எலக்ட்ரிக் வாகனங்கள் ஒரு புதிய இயக்கத்திற்கான தீர்வாக மட்டும் இல்லாமல் ஒன்றை சொந்தமாக வைத்திருப்பது ஒரு புதிய உரிமையாளர் அனுபவமாகவும் இருக்கும் என்படையும் உணர்த்தும். இதை நாங்கள் அங்கீகரித்து, இவி.யை வைத்திருப்பது உண்மையிலேயே எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொந்தரவில்லாத அனுபவமாக இருப்பதை உறுதிசெய்ய எங்கள் சில்லறை விற்பனையாளர்களுடன் இடைவிடாமல் பணியாற்றியுள்ளோம், " என்று ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியாவின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ரோஹித் சூரி கூறியுள்ளார்.

இந்தியா வரும் முதல் ஜாகுவார் முழு-பேட்டரி கார்!! விற்பனை மையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்த சில்லறை விற்பனை மையங்களில் 35 இவி சார்ஜர்களை பொருத்தியுள்ளதாக கூறியுள்ள ஜாகுவார் நிறுவனம் ஐ-பேஸ் எலக்ட்ரிக் காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் டாடா பவரின் இஎசட் சார்ஜ் நெட்வொர்க்கில் இந்தியா முழுவதும் உள்ள 200 சார்ஜிங் மையங்களையும் பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது.

இந்தியா வரும் முதல் ஜாகுவார் முழு-பேட்டரி கார்!! விற்பனை மையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இவ்வாறு விரைவு சார்ஜிங் மையங்கள் மட்டுமில்லாமல் இந்த இவி காருடன் 7.4 கிலோவாட்ஸ் ஏசி சார்ஜரும் சார்ஜிங் கேபிள் உடன் வழங்கப்படவுள்ளது. எஸ், எஸ்இ, எச்எஸ்இ என்ற மூன்று விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படவுள்ள ஐ-பேஸ் காரில் 90kWh லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு பொருத்தப்படவுள்ளது.

இந்தியா வரும் முதல் ஜாகுவார் முழு-பேட்டரி கார்!! விற்பனை மையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

அதிகப்பட்சமாக 294 கிலோவாட்ஸ் பவர் மற்றும் 696 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த பேட்டரியின் உதவியுடன் 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 4.8 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய ஜாகுவார் ஐ-பேஸ் அறிமுகத்திற்கு பிறகு விற்பனையில் மெர்சிடிஸ் இக்யூசி மட்டுமில்லாமல் ஆடி இ-ட்ரானின் போட்டியினையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

Most Read Articles

மேலும்... #ஜாகுவார் #jaguar
English summary
JAGUAR LAND ROVER RETAILER NETWORK GEARS UP FOR LAUNCH OF THE ALL-ELECTRIC JAGUAR I-PACE IN INDIA
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X