இந்தியாவில் புதிய ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

இந்திய சந்தையில் புதிய ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் புதிய ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த 2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் இன்று (ஜனவரி 27) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக நடப்பு ஜனவரி மாத தொடக்கத்திலேயே புதிய ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் அதிகாரப்பூர்வமாக பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டு விட்டது.

இந்தியாவில் புதிய ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

இதனை தொடர்ந்து இன்று முறைப்படி விலை அறிவிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய மாடலுக்கு ஏற்கனவே முன்பதிவுகள் தொடங்கப்பட்டு விட்டன. ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், ரீ-டிசைன் செய்யப்பட்ட 7-ஸ்லாட் க்ரில் அமைப்பு, எல்இடி பகல் நேர விளக்குகளுடன் ஒருங்கிணைந்த புதிய எல்இடி புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், புதிய எல்இடி பனி விளக்குகள் மற்றும் ரீ-டிசைன் செய்யப்பட்ட முரட்டுத்தனமான முன் பக்க பம்பர் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் புதிய ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

அத்துடன் இந்த காரில் வழங்கப்பட்டுள்ள அலாய் வீல்களும் புதியதுதான். முழுமையான கருப்பு வண்ண அல்லது ட்யூயல்-டோன் இன்டீரியர்களை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் இந்த காரின் கேபின், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன் 10.1 இன்ச் ஹெச்டி டச் ஸ்க்ரீன் யுகனெக்ட்-5 இன்போடெயின்மெண்ட் சிஸ்டமை பெற்றுள்ளது.

இந்தியாவில் புதிய ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

இதுதவிர புதிய ஸ்டியரிங் வீல், புதிய 10.2 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வென்டிலேட்டர் வசதியுடன் கூடிய முன் பக்க இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜிங், 360 டிகிரி கேமரா, 9 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் ட்யூயல்-பேன் பனரோமிக் சன்ரூஃப் வசதியையும் இந்த கார் பெற்றுள்ளது.

இந்தியாவில் புதிய ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

அதே சமயம் பழைய மாடலில் உள்ள பிஎஸ்-6 விதிகளுக்கு இணக்கமான அதே இரண்டு இன்ஜின் தேர்வுகள் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் தக்க வைக்கப்பட்டுள்ளன. இதன்படி ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.4 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 160 ஹெச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

இந்தியாவில் புதிய ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதுதவிர 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வையும், புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல் பெற்றுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 170 ஹெச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் உடன், 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்டர் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

இந்தியாவில் புதிய ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டபோதே புதிய ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலை பற்றிய பல்வேறு தகவல்கள் அறிவிக்கப்பட்டு விட்டன. விலை மட்டும்தான் தெரியாமல் இருந்தது. அதுவும் இன்று அறிவிக்கப்பட்டது. இதன்படி 16.99 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில், புதிய ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் புதிய ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

முந்தைய மாடலை காட்டிலும் 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே விலை உயர்ந்துள்ளது. ஆனால் அதற்கு ஏற்ப டிசைனில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதுடன், மேம்படுத்தப்பட்ட இன்டீரியர் மற்றும் கூடுதல் வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. அதே சமயம் ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் டாப் வேரியண்ட்டின் விலை 24.49 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

Most Read Articles
மேலும்... #ஜீப் #jeep
English summary
2021 Jeep Compass Facelift Launched In India - Design, Features, Price And More Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X