வைரஸ், பாக்டீரியாவை அழிப்பது உள்பட பல்வேறு வசதிகள்... புதிய செல்டோஸ், சொனெட் எஸ்யூவிகள் அறிமுகம்!

2021 கியா செல்டோஸ் மற்றும் 2021 கியா சொனெட் எஸ்யூவிகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வைரஸ், பாக்டீரியாவை அழிப்பது உள்பட பல்வேறு வசதிகள்... புதிய செல்டோஸ், சொனெட் எஸ்யூவிகள் அறிமுகம்!

கியா நிறுவனத்தின் செல்டோஸ் மற்றும் சொனெட் ஆகிய இரண்டு எஸ்யூவிகளும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளன. இந்த இரண்டு எஸ்யூவிகளின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் இந்திய சந்தையில் தற்போது விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 2021 செல்டோஸ் மற்றும் 2021 சொனெட் ஆகிய இரண்டு எஸ்யூவிகளிலும் பல்வேறு புதிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

வைரஸ், பாக்டீரியாவை அழிப்பது உள்பட பல்வேறு வசதிகள்... புதிய செல்டோஸ், சொனெட் எஸ்யூவிகள் அறிமுகம்!

இந்த இரண்டு கார்களிலும் விலை உயர்ந்த டாப் வேரியண்ட்களில் உள்ள பல்வேறு வசதிகள் தற்போது விலை குறைவான வேரியண்ட்களுக்கும் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்திய சந்தையில் 2021 செல்டோஸ் மற்றும் 2021 சொனெட் ஆகிய இரண்டு எஸ்யூவிக்களுக்கும் தற்போது அதிகாரப்பூர்வமாக முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

வைரஸ், பாக்டீரியாவை அழிப்பது உள்பட பல்வேறு வசதிகள்... புதிய செல்டோஸ், சொனெட் எஸ்யூவிகள் அறிமுகம்!

2021 செல்டோஸ் எஸ்யூவியின் விலை 9,95,000 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. அதே சமயம் 2021 சொனெட் எஸ்யூவியின் விலை 6,79,000 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இவை இரண்டுமே இந்தியா முழுமைக்குமான எக்ஸ் ஷோரூம் விலையாகும். செல்டோஸ் மற்றும் சொனெட் ஆகிய இரண்டு எஸ்யூவிகளிலும் கியா நிறுவனம் பேடில் ஷிஃப்டர்களை அறிமுகம் செய்துள்ளது.

வைரஸ், பாக்டீரியாவை அழிப்பது உள்பட பல்வேறு வசதிகள்... புதிய செல்டோஸ், சொனெட் எஸ்யூவிகள் அறிமுகம்!

அத்துடன் சொனெட் எஸ்யூவிக்கு பிறகு, ஐஎம்டி தொழில்நுட்பம் தற்போது செல்டோஸ் எஸ்யூவியிலும் வழங்கப்பட்டுள்ளது. செல்டோஸ் எஸ்யூவியின் 1.5 லிட்டர் பெட்ரோல் ஹெச்டிகே+ப்ளஸ் வேரியண்ட்டில் ஐஎம்டி தொழில்நுட்பம் கிடைக்கிறது. இதன் மூலம் இந்த செக்மெண்ட்டில் ஐஎம்டி தொழில்நுட்பத்தை பெறும் முதல் கார் என்ற பெருமை கியா செல்டோஸ் எஸ்யூவிக்கு கிடைத்துள்ளது.

வைரஸ், பாக்டீரியாவை அழிப்பது உள்பட பல்வேறு வசதிகள்... புதிய செல்டோஸ், சொனெட் எஸ்யூவிகள் அறிமுகம்!

ஏனெனில் ஹூண்டாய் நிறுவனம் கிரெட்டா எஸ்யூவியில் ஐஎம்டி தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யவில்லை. எனினும் கியா சொனெட் எஸ்யூவியின் போட்டியாளரான ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியில் ஐஎம்டி தொழில்நுட்பம் கிடைக்கிறது. அத்துடன் மேம்படுத்தப்பட்ட செல்டோஸ் எஸ்யூவியில் 1.4டி-ஜிடிஐ பெட்ரோல் ஜிடிஎக்ஸ் (ஆப்ஷனல்) என்ற பிரீமியம் வேரியண்ட்டையும் கியா அறிமுகம் செய்துள்ளது.

வைரஸ், பாக்டீரியாவை அழிப்பது உள்பட பல்வேறு வசதிகள்... புதிய செல்டோஸ், சொனெட் எஸ்யூவிகள் அறிமுகம்!

2021 செல்டோஸ் எஸ்யூவியில் வைரஸ் மற்றும் பாக்டீரியாவிற்கு எதிரான பாதுகாப்புடன் ஸ்மார்ட் ப்யூர் ஏர் ப்யூரிஃபையர் உள்பட 17 புதிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. பாக்டீரியா, வைரஸை அழித்து இது காற்றை சுத்தப்படுத்தும் என கியா தெரிவித்துள்ளது. மேலும் யுவோ கனெக்டட் கார் தொழில்நுட்பத்தில், சன்ரூஃப்பை இயக்குவதற்கான குரல் கட்டளை உள்பட கூடுதல் குரல் கட்டளை வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

வைரஸ், பாக்டீரியாவை அழிப்பது உள்பட பல்வேறு வசதிகள்... புதிய செல்டோஸ், சொனெட் எஸ்யூவிகள் அறிமுகம்!

அத்துடன் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், வெய்கில் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மெண்ட், பிரேக் அஸிஸ்ட், ஹில் அஸிஸ்ட் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் தற்போது செல்டோஸ் எஸ்யூவியின் விலை குறைவான வேரியண்ட்களிலும் கொடுக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் 2021 சொனெட் எஸ்யூவியில் 10 புதிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

வைரஸ், பாக்டீரியாவை அழிப்பது உள்பட பல்வேறு வசதிகள்... புதிய செல்டோஸ், சொனெட் எஸ்யூவிகள் அறிமுகம்!

சொனெட் எஸ்யூவியிலும் சன்ரூஃப்பை இயக்குவதற்கு குரல் கட்டளை வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் செல்டோஸ் எஸ்யூவியின் விலை குறைவான வேரியண்ட்களை போல், சொனெட் எஸ்யூவியின் விலை குறைவான வேரியண்ட்களிலும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், வெய்கில் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மெண்ட், பிரேக் அஸிஸ்ட், ஹில் அஸிஸ்ட் கண்ட்ரோல் ஆகிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர இந்த இரண்டு எஸ்யூவிகளிலும் கியா நிறுவனத்தின் புதிய லோகோவும் கொடுக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
2021 Kia Seltos And Sonet SUVs Launched In India: Price, Features, Specifications And More. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X