Maruti Celerio vs Tata Tiago: இரண்டில் எது பெஸ்ட்? இதோ உங்களுக்காக பிரத்யேக ஒப்பீட்டு தகவல்!

இந்தியாவின் இரு பிரபலமான ஹேட்ச்பேக் ரக கார்களாக காட்சியளிக்கும் மாருதி சுசுகி செலிரியோ மற்றும் டாடா டியாகோ ஆகிய இரு கார்களுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசங்கள் மற்றும் சிறப்புகள் பற்றிய தகவலை இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த தகவலைக் காணலாம்.

Maruti Celerio vs Tata Tiago: இரண்டில் எது பெஸ்ட்? இதோ உங்களுக்காக பிரத்யேக ஒப்பீட்டு தகவல்!

மாருதி சுசுகி நிறுவனம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட செலிரியோ ஹேட்ச்பேக் ரக காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. பன்முக புதுப்பிக்கப்பட்ட அம்சங்கள் உடன் இக்கார் சந்தையில் அறிமுகமாகியுள்ளது. ஏற்கனவே ஹேட்ச்பேக் பிரிவில் விற்பனையில் இருக்கும் கார்களுக்கு போட்டியாக புதிய அதிக மைலேஜ் திறனுடன் புதிய செலிரியோ வந்திருக்கின்றது.

Maruti Celerio vs Tata Tiago: இரண்டில் எது பெஸ்ட்? இதோ உங்களுக்காக பிரத்யேக ஒப்பீட்டு தகவல்!

இருப்பினும், இந்த கார் டாடா டியாகோவிற்கே கடும் சவாலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. எனவே, இதில் எது பெஸ்டானது மற்றும் சிறந்த அம்சங்களைக் கொண்டிருக்கின்றன என்பதை அறிவது கட்டாயமாகியுள்ளது. இதுகுறித்த தவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

Maruti Celerio vs Tata Tiago: இரண்டில் எது பெஸ்ட்? இதோ உங்களுக்காக பிரத்யேக ஒப்பீட்டு தகவல்!

மாருதி சுசுகி செலிரியோ மற்றும் டாடா டியாகோ இடையில் காணப்படும் உருவ அளவு வித்தியாசம்:

செலிரியோ உயரம், வீல் பேஸ் மற்றும் பூட் ஸ்பேஸ் ஆகியவற்றில் டாடா டியாகோவை தேற்கடிக்கும் வகையில் பெரிய அளவைக் கொண்டதாக் காட்சியளிக்கின்றது. அதே நேரத்தில் நீளம் மற்றும் அகலம் ஆகியவற்றில் டியாகவே சிறந்ததாகக் காட்சியளிக்கின்றது. ஆம், செலிரியோவைக் காட்டிலும் டியாக இது இரண்டில் பெரிய அளவைக் கொண்டதாக உள்ளது.

Maruti Celerio vs Tata Tiago: இரண்டில் எது பெஸ்ட்? இதோ உங்களுக்காக பிரத்யேக ஒப்பீட்டு தகவல்!

இதுகுறித்த விரிவான தகவலை பட்டியலாகக் கீழே காணலாம்:

Celerio Tiago
Length 3,695 mm 3,765 mm
Width 1,655 mm 1,677 mm
Height 1,555 mm 1,535 mm
Wheelbase 2,435 mm 2,400 mm
Boot Space 313-litres 242-litres
Maruti Celerio vs Tata Tiago: இரண்டில் எது பெஸ்ட்? இதோ உங்களுக்காக பிரத்யேக ஒப்பீட்டு தகவல்!

மாருதி சுசுகி செலிரியோ மற்றும் டாடா டியாகோ இடையில் உள்ள சிறப்பம்சங்களின் வித்தியாசம்:

முன்னதாக விற்பனையில் இருந்த மாருதி சுசுகி செலிரியோ காரைக் காட்டிலும் புதிய தலைமுறை செலிரியோ பன்முக சிறப்பம்சங்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இக்காரில் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதிக் கொண்ட 7 இன்சிலான தொடுதிரை, நடு நிலையான டிஜிட்டல் வசதிக் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஏசி, புஷ் பட்டன் ஸ்டார்ட்-ஸ்டாப் வசதி, சாவியில்லா நுழைவை வழங்கும் வசதி, அனைத்து ஜன்னல்களையும் பொத்தானில் கட்டுப்படுத்தும் வசதி, ஸ்டியரிங் வீலில் பன்முக கன்ட்ரோல்கள் என பன்முக அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Maruti Celerio vs Tata Tiago: இரண்டில் எது பெஸ்ட்? இதோ உங்களுக்காக பிரத்யேக ஒப்பீட்டு தகவல்!

இத்துடன், காரின் கவர்ச்சியான தோற்றத்தை மெலும் மெருகேற்றும் வகையில் 15 இன்சிலான அலாய் வீல், பனி மின் விளக்கு, ரிமோட் வசதிக் கொண்ட கண்ணாடிகள், ஓட்டுநரின் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி உள்ளிட்டவையும் புதிய செலிரியோவில் வழங்கப்பட்டிருக்கின்றன.

Maruti Celerio vs Tata Tiago: இரண்டில் எது பெஸ்ட்? இதோ உங்களுக்காக பிரத்யேக ஒப்பீட்டு தகவல்!

டாடா டியாகோவிலும் செலிரியோவிற்கு இணையான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. 7 இன்சிலான தொடுதிரை ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதி உடன், தானியங்கி ஏசி, 8 ஸ்பீக்கர்கள் ஹர்மன் சவுண்ட் சிஸ்டம் வசதி உடன், ஸ்டியரிங் வீலில் பன்முக கன்ட்ரோல்கள், ஓட்டுநரின் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, சாவியில்லா நுழைவு, முழு டிஜிட்டல் திறன் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், தானாகவே மூடிக் கொள்ளும் ரியர் வியூ கண்ணாடிகள், பஞ்சரை சரி செய்யும் கிட் மற்றும் கூல்டு க்ளோவ் பாக்ஸ் ஆகிய பன்முக சிறப்பு வசதிகள் டியாகோவில் வழங்கப்பட்டுள்ளன.

Maruti Celerio vs Tata Tiago: இரண்டில் எது பெஸ்ட்? இதோ உங்களுக்காக பிரத்யேக ஒப்பீட்டு தகவல்!

இரண்டில் டாடா டியாகோவில் சற்று கூடுதல் சிறப்பம்சங்கள் இடம் பெற்றிருப்பதை நம்மால் காண முடிகின்றது. முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், தானியங்கி ஏசி மற்றும் கூல்டு க்ளோவ் பாக்ஸ் ஆகியவை சுசுகி செலிரியோவில் இடம் பெறாதவை ஆகும்.

Maruti Celerio vs Tata Tiago: இரண்டில் எது பெஸ்ட்? இதோ உங்களுக்காக பிரத்யேக ஒப்பீட்டு தகவல்!

மாருதி சுசுகி செலிரியோ மற்றும் டாடா டியாகோ கார்களில் இடம் பெற்றிருக்கும் பாதுகாப்பு அம்சங்கள்

செலிரியோவில் இரட்டை ஏர்பேக்குகள் (முன் பக்கத்தில்), ஏபிஎஸ், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், ஹில் ஹோல்டு அசிஸ்ட், ஸ்பீடு அலர்ட் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுவே டாடா டியாகோவில் இரு ஏர் பேக்குகள், கார்னர் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் வசதிக் கொண்ட இபிடி, ஏபிஎஸ், ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா, ஸ்பீடு அலர்ட் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Maruti Celerio vs Tata Tiago: இரண்டில் எது பெஸ்ட்? இதோ உங்களுக்காக பிரத்யேக ஒப்பீட்டு தகவல்!

இத்துடன், குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய மோதல் ஆய்வில் இக்கார் ஐந்திற்கு நான்கு நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது. இந்த ரேட்டிங்கை மாருதி சுசுகி செலிரியோ தொடுமா என்பது தெரியவில்லை. இன்னும் இக்கார் விபத்து பரிதோசனைக்கு உட்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

Maruti Celerio vs Tata Tiago: இரண்டில் எது பெஸ்ட்? இதோ உங்களுக்காக பிரத்யேக ஒப்பீட்டு தகவல்!

எஞ்ஜின் மற்றும் விவரக்குறிப்புகள்

புதிய செலிரியோ காரில் புத்தம் புதிய கே10சி 1.0 லிட்டர் 3 சிலிண்டர் ட்யூவல் ஜெட் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில், வேரியபிள் வால்வு டைமிங் (variable valve timing) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 66 பிஎச்பியையும், 89 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் இதில் வழங்கப்படுகின்றது.

Maruti Celerio vs Tata Tiago: இரண்டில் எது பெஸ்ட்? இதோ உங்களுக்காக பிரத்யேக ஒப்பீட்டு தகவல்!

இத்துடன், இந்த காரில் முதன் முறையாக ஐடில் ஸ்டாப்-ஸ்டார்ட் தொழில்நுட்பத்தை மாருதி அறிமுகப்படுத்தியுள்ளது. இது எரிபொருள் சிக்கனத்திற்கு வழி வகுக்கும். டியாகோ, காரில் 1.2 லிட்டர், 3 சிலிண்டர் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 85 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டுள்ளது. இது செலிரியோவைக் காட்டிலும் மிக அதிக திறன் என்பது குறிப்பிடத்தகுந்தது. 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆகிய டிரான்ஸ்மிஷன் வசதி இதில் வழங்கப்படுகின்றது.

Maruti Celerio vs Tata Tiago: இரண்டில் எது பெஸ்ட்? இதோ உங்களுக்காக பிரத்யேக ஒப்பீட்டு தகவல்!

எஞ்ஜின் மற்றும் திறன் வெளிப்பாடு பற்றிய பட்டியல் இதோ:

Engine Gearbox Power Torque
Celerio 1.0-litre 5-Speed MT / AMT 66 bhp 89 Nm
Tiago 1.2-litre 5-Speed MT / AMT 85 bhp 113 Nm
Maruti Celerio vs Tata Tiago: இரண்டில் எது பெஸ்ட்? இதோ உங்களுக்காக பிரத்யேக ஒப்பீட்டு தகவல்!

மாருதி சுசுகி செலிரியோ மற்றும் டாடா டியாகோ மைலேஜ் விபரம்

மாருதி சுசுகி செலிரியோ ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 24.97 கிமீ முதல் 26.68 கிமீ வரை மைலேஜ் தரும்.

டாடா டியாகோ ஒரு லிட்டருக்கு 19.8 கிமீ வரை மட்டுமே மைலேஜ் வழங்குகின்றது.

Maruti Celerio vs Tata Tiago: இரண்டில் எது பெஸ்ட்? இதோ உங்களுக்காக பிரத்யேக ஒப்பீட்டு தகவல்!

டியாகோவைக் காட்டிலும் பல மடங்கு அதிக மைலேஜை வழங்கும் காராக செலிரியோ இருக்கின்றது. இதுவே, தற்போது இந்தியர்களைக் கவரும் ஓர் விஷயமாக அமைந்திருக்கின்றது. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால், தற்போது உச்சபட்ச விலையில் பெட்ரோல், டீசல் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இதில் இருந்து தப்பிக்க உதவும் வகையில் இந்த காரின் வருகை உள்ளது.

Maruti Celerio vs Tata Tiago: இரண்டில் எது பெஸ்ட்? இதோ உங்களுக்காக பிரத்யேக ஒப்பீட்டு தகவல்!

விலை விபரம்:

டாடா டியாகோ மற்றும் மாருதி சுசுகி செலிரியோ ஆகிய இரு ஹேட்ச்பேக் ரக கார் மாடல்களும் ரூ. 4.99 லட்சம் என்ற ஆரம்ப விலையிலேயே விற்பனைக்குக் கிடைக்கின்றன. அதேநேரத்தில், செலிரியோவின் உச்சபட்ச விலை ரூ. 6.94 லட்சமாகவும், டியாகோவின் உச்சபட்ச விலை ரூ. 7.05 லட்சமாக இருக்கின்றது.

Maruti Celerio vs Tata Tiago: இரண்டில் எது பெஸ்ட்? இதோ உங்களுக்காக பிரத்யேக ஒப்பீட்டு தகவல்!

இதோ முழு விலை விபரப் பட்டியல்:

Price (ex-showroom)
2021 Celerio MT ₹4.99 lakh - ₹6.40 lakh
2021 Celerio AMT ₹6.13 lakh - ₹6.94 lakh
Tiago MT ₹4.99 lakh - ₹6.50 lakh
Tiago AMT ₹6.25 lakh - ₹7.05 lakh
Most Read Articles
English summary
2021 maruti suzuki celerio vs tata tiago comparison details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X