கண்ணை கவரும் தோற்றத்தில் 2021 மாருதி ஸ்விஃப்ட்டின் விலைமிக்க வேரியண்ட்!! ஷோரூமில் நின்றிருக்கும் அழகே தனி...

புதிய மாருதி ஸ்விஃப்ட் டாப் இசட்எக்ஸ்ஐ வேரியண்ட்டை விளக்கும் வீடியோ ஒன்று டீலர்ஷிப் ஷோரூமில் இருந்து வெளியாகியுள்ளது. அதனை இந்த செய்தியில் பார்ப்போம்.

கண்ணை கவரும் தோற்றத்தில் 2021 மாருதி ஸ்விஃப்ட்டின் விலைமிக்க வேரியண்ட்!! ஷோரூமில் நின்றிருக்கும் அழகே தனி...

இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் ஹேட்ச்பேக் காரான மாருதி ஸ்விஃப்ட்டின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் சமீபத்தில் ரூ.5.73 லட்சம் என்ற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

கண்ணை கவரும் தோற்றத்தில் 2021 மாருதி ஸ்விஃப்ட்டின் விலைமிக்க வேரியண்ட்!! ஷோரூமில் நின்றிருக்கும் அழகே தனி...

இந்த ஆரம்ப விலையில் ஆரம்ப நிலை எல்எக்ஸ்ஐ வேரியண்ட் கிடைக்கிறது. அதுவே இரு-நிற பெயிண்ட்டில் ஏஜிஎஸ் ட்ரான்ஸ்மிஷன் உடன் விற்பனை செய்யப்படும் டாப் இசட்எக்ஸ்ஐ வேரியண்ட்டின் விலை ரூ.8.41 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கண்ணை கவரும் தோற்றத்தில் 2021 மாருதி ஸ்விஃப்ட்டின் விலைமிக்க வேரியண்ட்!! ஷோரூமில் நின்றிருக்கும் அழகே தனி...

இந்த விலைகள் முந்தைய ஸ்விஃப்ட்டின் விலைகளை காட்டிலும் ரூ.15,000-ல் இருந்து ரூ.24,000 வரையில் அதிகமாகும். டாப் இசட்எக்ஸ்ஐ வேரியண்ட் இரு-நிற பெயிண்ட்டில் கிடைத்தாலும், உஜ்வால் சக்ஸெனா என்ற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில் நாம் பார்ப்பது ஒற்றை-நிறத்தில் இருக்கும் ஸ்விஃப்ட்டின் டாப் வேரியண்ட்டை ஆகும்.

புதிய ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் கார் மெட்டாலிக் லூசண்ட் ஆரஞ்சு, மெட்டாலிக் சில்கி சில்வர், மெட்டாலிக் மேக்மா கிரே, சாலிட் ஃபயர் ரெட், முத்து மெட்டாலிக் மிட்நைட் ப்ளூ மற்றும் முத்தின் ஆர்க்டிக் வெள்ளை என்ற ஒற்றை-நிற தேர்வுகளில் விற்பனை செய்யப்படுகிறது.

கண்ணை கவரும் தோற்றத்தில் 2021 மாருதி ஸ்விஃப்ட்டின் விலைமிக்க வேரியண்ட்!! ஷோரூமில் நின்றிருக்கும் அழகே தனி...

அதேநேரம் இந்த மாருதி ஹேட்ச்பேக் காரை மிட்நைட் கருப்பு நிற கூரையுடன் முத்து ஆர்க்டிக் வெள்ளை, முத்து ஆர்க்டிக் வெள்ளை நிற கூரையுடன் முத்தின் உலோக மிட்நைட் நீலம் மற்றும் மிட்நைட் கருப்பு கூரையுடன் நெருப்பின் சிவப்பு என்ற இரு-நிற பெயிண்ட் தேர்வுகளிலும் பெறலாம்.

கண்ணை கவரும் தோற்றத்தில் 2021 மாருதி ஸ்விஃப்ட்டின் விலைமிக்க வேரியண்ட்!! ஷோரூமில் நின்றிருக்கும் அழகே தனி...

ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் என்பதால் முக்கியமான மாற்றங்கள் அனைத்தும் காரின் முன்பக்கத்தில்தான் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த அப்கிரேட்களில் க்ராஸ் மெஷ் டிசைனில் புதிய முன்பக்க க்ரில், ரேடியேட்டர் க்ரில்லை இரண்டாக பிரிக்கும் விதத்தில் மத்தியில் தடிமனான க்ரோம் ஸ்ட்ரிப் உள்ளிட்டவை அடங்குகின்றன.

கண்ணை கவரும் தோற்றத்தில் 2021 மாருதி ஸ்விஃப்ட்டின் விலைமிக்க வேரியண்ட்!! ஷோரூமில் நின்றிருக்கும் அழகே தனி...

முன்பக்க மற்றும் பின்பக்க ஹெட்லைட்கள் மற்றும் டிஆர்எல்கள் அனைத்து எல்இடி தரத்தில் வழங்கப்பட்டுள்ளன. உட்புறத்தில் 17.78 இன்ச்சில் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், சாவியில்லா நுழைவு, காரை ஸ்டார்ட் & ஸ்டாப் செய்ய பொத்தான், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்டவற்றுடன் ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட்டின் உட்புற கேபின் புதிய துணி உள்ளமைவை ஏற்றுள்ளது.

கண்ணை கவரும் தோற்றத்தில் 2021 மாருதி ஸ்விஃப்ட்டின் விலைமிக்க வேரியண்ட்!! ஷோரூமில் நின்றிருக்கும் அழகே தனி...

இவை எல்லாவற்றையும் விட சிறப்பம்சமாக மாருதி பலேனோ மற்றும் டிசைரில் வழங்கப்படும் 1.2 லிட்டர், 4-சிலிண்டர், கே சீரிஸ், ட்யுல் ஜெட் பெட்ரோல் என்ஜினை 2021 ஸ்விஃப்ட்டில் மாருதி நிறுவனம் வழங்கியுள்ளது. இது கிட்டத்தட்ட 23kmpl மைலேஜை வழங்கக்கூடியதாக உள்ளது.

Most Read Articles

English summary
New Maruti Swift ZXi+ Top Variant Facelift, First Look Walkaround.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X