மெர்சிடிஸ்-பென்ஸ் உருவாக்கியதிலேயே சொகுசான எஸ்-க்ளாஸ் கார் இதுதான்... 17ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!

2021 மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸ் கார் இந்திய சந்தையில் வரும் 17ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மெர்சிடிஸ்-பென்ஸ் உருவாக்கியதிலேயே சொகுசான எஸ்-க்ளாஸ் கார் இதுதான்... 17ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!

புதிய எஸ்-க்ளாஸ் கார் இந்திய சந்தையில் வரும் ஜூன் 17ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்பதை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் செடான் லைன்-அப்பில் முக்கியமான மாடலாக எஸ்-க்ளாஸ் உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இன்ஜின் தேர்வுகளுடனும் மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸ் கிடைக்கும்.

மெர்சிடிஸ்-பென்ஸ் உருவாக்கியதிலேயே சொகுசான எஸ்-க்ளாஸ் கார் இதுதான்... 17ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸ் செடான் சர்வதேச சந்தைகளில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் தயாரித்த எஸ்-க்ளாஸ் கார்களிலேயே இந்த புதிய மாடல்தான் மிகவும் சொகுசானது என தெரிவிக்கப்படுகிறது. எனவே இந்திய வாடிக்கையாளர்களின் ஆவலை இந்த புதிய எஸ்-க்ளாஸ் தூண்டியுள்ளது.

மெர்சிடிஸ்-பென்ஸ் உருவாக்கியதிலேயே சொகுசான எஸ்-க்ளாஸ் கார் இதுதான்... 17ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!

புதிய எஸ்-க்ளாஸ் செடான் காரில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை வழங்கியுள்ளது. அத்துடன் சந்தையை விட்டு வெளியேறும் மாடலுடன் ஒப்பிடுகையில், பெரிதாகவும் இருக்கிறது. 2021 மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸ் காரின் நீளம் 5,289 மிமீ ஆகும். முந்தைய மாடலுடன் ஒப்பிடுகையில் இது 34 மிமீ அதிகமாகும்.

மெர்சிடிஸ்-பென்ஸ் உருவாக்கியதிலேயே சொகுசான எஸ்-க்ளாஸ் கார் இதுதான்... 17ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!

அதே நேரத்தில் இந்த புதிய மாடலின் அகலம் 22 மிமீ அதிகரிக்கப்பட்டு தற்போது 1,921 மிமீ ஆக உள்ளது. இதேபோல் உயரமும் 12 மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய மாடலின் உயரம் 1,503 மிமீ ஆகும். இந்த வரிசையில் வீல் பேஸ் நீளமும் 51 மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளது. 2021 எஸ்-க்ளாஸ் செடானின் வீல் பேஸ் நீளம் 3,216 மிமீ ஆகும்.

மெர்சிடிஸ்-பென்ஸ் உருவாக்கியதிலேயே சொகுசான எஸ்-க்ளாஸ் கார் இதுதான்... 17ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!

சந்தையை விட்டு வெளியேறும் மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸ் செடான் 530 லிட்டர் பூட் ஸ்பேஸை மட்டுமே கொண்டிருந்தது. ஆனால் புதிய மாடலின் பூட் ஸ்பேஸ் 550 லிட்டர்கள் ஆகும். அதேபோல் புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸ் காரின் முன் பகுதி முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரீ-டிசைன் செய்யப்பட்டுள்ள க்ரில் கவனம் ஈர்க்கிறது.

மெர்சிடிஸ்-பென்ஸ் உருவாக்கியதிலேயே சொகுசான எஸ்-க்ளாஸ் கார் இதுதான்... 17ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!

அதே நேரத்தில் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸ் செடான் காரின் கேபின் மிகவும் சொகுசாக உள்ளது. இங்கே டேஷ்போர்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டின் மைய பகுதியில் செவ்வக வடிவத்தில் நான்கு ஏசி வெண்ட்களை இந்த புதிய கார் பெற்றுள்ளது.

மெர்சிடிஸ்-பென்ஸ் உருவாக்கியதிலேயே சொகுசான எஸ்-க்ளாஸ் கார் இதுதான்... 17ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!

அதே நேரத்தில் டேஷ்போர்டின் இரு புறமும் செங்குத்தாக இரண்டு ஏசி வெண்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் புதிய எஸ்-க்ளாஸ் காரில் 10 வகைகளில் மசாஜ் செய்யும் வசதியும் இடம்பெற்றுள்ளது. இந்த காரின் ஸ்டியரிங் வீலும் கூட புதியதுதான். இந்த காரின் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் முழு டிஜிட்டல் 12.3 இன்ச் யூனிட் ஆகும்.

மெர்சிடிஸ்-பென்ஸ் உருவாக்கியதிலேயே சொகுசான எஸ்-க்ளாஸ் கார் இதுதான்... 17ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!

மேலும் புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸ் காரில் பெரிய டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டமும் வழங்கப்பட்டுள்ளது (11.9 இன்ச் ஸ்டாண்டர்டு, 12.8 இன்ச் ஆப்ஷனல்). எஸ் 450 4மேட்டிக் மற்றும் எஸ் 400டி 4மேட்டிக் ஆகிய வேரியண்ட்களில் இந்த கார் இந்திய சந்தையில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதில், எஸ் 450 4மேட்டிக் வேரியண்ட்டில், 6-சிலிண்டர், 3.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ்-பென்ஸ் உருவாக்கியதிலேயே சொகுசான எஸ்-க்ளாஸ் கார் இதுதான்... 17ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!

இந்த இன்ஜின் 367 ஹெச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. அதே நேரத்தில் எஸ் 400டி 4மேட்டிக் வேரியண்ட்டில், 6-சிலிண்டர், 3.0 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 330 ஹெச்பி பவரையும், 700 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த 2 இன்ஜின்களுடனும், 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு வழங்கப்படுகிறது.

Most Read Articles
English summary
2021 Mercedes-Benz S-Class India Launch Date Announced: Check Details Here. Read in Tamil
Story first published: Saturday, June 12, 2021, 12:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X