அப்பப்பா... கப்பல்ல போற மாதிரி சொகுசாக இருக்கு... புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் விற்பனைக்கு அறிமுகம்...

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அப்பப்பா... கப்பல்ல போற மாதிரி சொகுசாக இருக்கு... புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் விற்பனைக்கு அறிமுகம்...

சொகுசு செடான் பிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த 2021 எஸ்-க்ளாஸ் காரை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் இன்று (ஜூன் 17) விற்பனைக்கு அறிமுகம் செய்தது. சிபியூ வழியில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் புதிய எஸ்-க்ளாஸ் செடான் காரை இந்தியாவிற்கு கொண்டு வருகிறது.

அப்பப்பா... கப்பல்ல போற மாதிரி சொகுசாக இருக்கு... புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் விற்பனைக்கு அறிமுகம்...

அதாவது முழுவதும் கட்டமைக்கப்பட்ட நிலையில், இந்திய சந்தைக்கு இறக்குமதி செய்யப்பட்டு புதிய எஸ்-க்ளாஸ் கார் விற்பனை செய்யப்படும். இந்திய சந்தையில் எஸ் 400டி மற்றும் எஸ் 450 என இரண்டு வேரியண்ட்களில், புதிய எஸ்-க்ளாஸ் கிடைக்கும். வெள்ளை, கருப்பு, நீலம், சிகப்பு மற்றும் பச்சை என மொத்தம் 5 வண்ண தேர்வுகள் இந்த காரில் வழங்கப்படுகின்றன.

அப்பப்பா... கப்பல்ல போற மாதிரி சொகுசாக இருக்கு... புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் விற்பனைக்கு அறிமுகம்...

அதே நேரத்தில் முந்தைய மாடலுடன் ஒப்பிடுகையில், புதிய எஸ்-க்ளாஸ் 34 மிமீ நீளமானது. மேலும் புதிய மாடலின் அகலம் 22 மில்லி மீட்டரும், உயரம் 12 மில்லி மீட்டரும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் வீல்பேஸ் நீளமும் 51 மில்லி மீட்டர் அதிகரிக்கப்பட்டுள்ளது. முந்தைய மாடலுடன் பெரியது என்பதால், கேபினில் நல்ல இடவசதி கிடைக்கும்.

அப்பப்பா... கப்பல்ல போற மாதிரி சொகுசாக இருக்கு... புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் விற்பனைக்கு அறிமுகம்...

அதே சமயம் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் செடானில், பர்ம்ஸ்டர் 4டி சர்ரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், ஆம்பியண்ட் லைட்டிங், முன் மற்றும் பின் பகுதி இருக்கைகளில் மசாஜ் வசதி, பின் பக்க பயணிகளுக்கு லெக்-ரெஸ்ட் என பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர 12.8 இன்ச் இன்போடெயின்மெண்ட் யூனிட், 12.3 இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே ஆகிய வசதிகளும் கவனம் ஈர்க்கின்றன.

அப்பப்பா... கப்பல்ல போற மாதிரி சொகுசாக இருக்கு... புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் விற்பனைக்கு அறிமுகம்...

நாங்கள் ஏற்கனவே கூறியபடி எஸ் 400டி மற்றும் எஸ் 450 என இரண்டு வேரியண்ட்களில், புதிய எஸ்-க்ளாஸ் செடான் கிடைக்கும். இதில், எஸ் 450 வேரியண்ட்டில் பெட்ரோல் இன்ஜினும், எஸ் 400டி வேரியண்ட்டில் டீசல் இன்ஜினும் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 362 ஹெச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும்.

அப்பப்பா... கப்பல்ல போற மாதிரி சொகுசாக இருக்கு... புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் விற்பனைக்கு அறிமுகம்...

அதே நேரத்தில் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 326 ஹெச்பி பவரையும், 720 என்எம் டார்க் திறனையும் வழங்க கூடியது. இந்த இரண்டு இன்ஜின்களுமே 3 லிட்டர் யூனிட்கள்தான். இந்த இரண்டு இன்ஜின்களுடனும் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் ஆடி ஏ8 மற்றும் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் உள்ளிட்ட கார்களுடன், புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் போட்டியிடும்.

அப்பப்பா... கப்பல்ல போற மாதிரி சொகுசாக இருக்கு... புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் விற்பனைக்கு அறிமுகம்...

புதிய மெர்சிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் சர்வதேச அளவில் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது இந்திய சந்தையிலும் இந்த புதிய எஸ்-க்ளாஸ் கார் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் உருவாக்கியதிலேயே மிகவும் சொகுசான எஸ்-க்ளாஸ் கார் இதுதான் என இந்த புதிய மாடல் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.

அப்பப்பா... கப்பல்ல போற மாதிரி சொகுசாக இருக்கு... புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் விற்பனைக்கு அறிமுகம்...

பாதுகாப்பை பொறுத்தவரை ஏராளமான ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், முன் மற்றும் பின் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள், 360 டிகிரி கேமரா உள்பட ஏராளமான வசதிகளை புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் பெற்றுள்ளது. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் செடானின் விலை விபரத்தை கீழே காணலாம்.

எஸ் 400டி 4மேட்டிக் - 2.17 கோடி ரூபாய்

எஸ் 450 4மேட்டிக் - 2.19 கோடி ரூபாய்

இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

Most Read Articles
English summary
2021 Mercedes-Benz S-Class Luxury Sedan Launched In India: Here's Everything You Need To Know. Read in Tamil
Story first published: Thursday, June 17, 2021, 13:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X