மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் 600 சொகுசு எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் 600 சொகுசு எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் 600 சொகுசு எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் 600 சொகுசு எஸ்யூவி இந்தியாவில் இன்று (ஜூன் 8) முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்திய சந்தையில் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் மற்றும் பென்ட்லீ பென்டைகா உள்ளிட்ட கார்களுடன், மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் 600 சொகுசு எஸ்யூவி போட்டியிடவுள்ளது. மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்எஸ் அடிப்படையில் இந்த எஸ்யூவி உருவாக்கப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் 600 சொகுசு எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

இந்த எஸ்யூவி காரின் முன் பகுதியில் பெரிய க்ரில் அமைப்பு, 22 இன்ச் அல்லது 23 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் உட்புறத்தை பொறுத்த வரையில், ஸ்டாண்டர்டு ஜிஎல்எஸ் உடன் ஒப்பிடும்போது நிறைய வித்தியாசங்களை காண முடிகிறது. ஸ்டாண்டர்டு ஜிஎல்எஸ் 7 சீட்டர் எஸ்யூவி என்பது குறிப்பிடத்தக்கது.

மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் 600 சொகுசு எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

ஆனால் மேபக் ஜிஎல்எஸ் 600 எஸ்யூவி கார், 4 அல்லது 5 சீட்டர் தேர்வுகளில் கிடைக்கும். இந்த சொகுசு எஸ்யூவி காரில், மேபக் ஸ்டியரிங் வீல், பனரோமிக் சன்ரூஃப், மசாஜ் வசதியுடன் இருக்கைகள், 12.3 இன்ச் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் 12.3 இன்ச் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், நப்பா லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி ஆகிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் 600 சொகுசு எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் 600 சொகுசு எஸ்யூவி காரில், 4.0 லிட்டர் டர்பேசார்ஜ்டு வி8 பெட்ரோல் இன்ஜின் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 550 பிஎச்பி பவரையும், 730 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் உடன் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் 600 சொகுசு எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

இந்த சொகுசு எஸ்யூவி காரில், 48V ஹைப்ரிட் சிஸ்டமும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கூடுதலாக 21 பிஎச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் கிடைக்கும். இந்த சொகுசு எஸ்யூவியில் டீசல் இன்ஜின் தேர்வு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் இந்த எஸ்யூவி காரின் வீல்பேஸ் நீளம் 3135 மிமீ ஆகும்.

மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் 600 சொகுசு எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

இந்த எஸ்யூவி காரின் நீளம் 5,205 மிமீ ஆகவும், அகலம் 2,030 மிமீ ஆகவும், உயரம் 1,838 மிமீ ஆகவும் உள்ளது. அதே சமயத்தில் மேபக் பிராண்டின் கீழ் வெளிவந்துள்ள முதல் எஸ்யூவி ரக கார் இதுதான் என்பது இதன் முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்றாகும். பொதுவாக மெர்சிடிஸ்-பென்ஸ் செடான்கள்தான் மேபக் பிராண்டில் அதிகமாக விற்பனைக்கு வந்து கொண்டிருந்தன.

மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் 600 சொகுசு எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

ஆனால் உலகம் முழுவதும் எஸ்யூவி ரக கார்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருவதால், புதிய தலைமுறை ஜிஎல்எஸ் எஸ்யூவியின் மேபக் வெர்சனை மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. செல்வந்தர்கள் மத்தியில் இந்த புதிய சொகுசு எஸ்யூவி காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் 600 சொகுசு எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

இந்திய சந்தையில் 2.43 கோடி ரூபாய் என்ற ஆரம்ப விலையில் மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் 600 எஸ்யூவி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த காரின் விலை இன்றுதான் அறிவிக்கப்பட்டது. ஆனால் விலை தெரிவதற்கு முன்பாகவே 50க்கும் மேற்பட்டோர் மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் 600 சொகுசு எஸ்யூவியை முன்பதிவு செய்துள்ளனர்.

Most Read Articles
English summary
2021 Mercedes-Maybach GLS 600 Launched In India: Here Are All The Details. Read in Tamil
Story first published: Tuesday, June 8, 2021, 13:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X