ஹிங்லிஷ் குரல் கட்டளை வசதியுடன் 2021 எம்ஜி இசட்எஸ் மின்சார கார் அறிமுகம்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?..

ஹிங்லிஷ் குரல் கட்டளை வசதியுடன் 2021 எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இதன் விலை மற்றும் புதிய சிறப்பு வசதிகள் என்ன என்பதை இப்பதிவில் காணலாம்.

ஹிங்லிஷ் குரல் கட்டளை வசதியுடன் 2021 எம்ஜி இசட்எஸ் மின்சார கார் விற்பனைக்கு அறிமுகம்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

இங்கிலாந்து நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் சீன நாட்டைச் சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் அதன் 2021 இசட்எஸ் இவி காரை புதுப்பித்தல்களுடன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. புதுப்பித்தலின் அடிப்படையில் இந்த மின்சார காரில் அதிக ரேஞ்ஜ் வசதிக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஹிங்லிஷ் குரல் கட்டளை வசதியுடன் 2021 எம்ஜி இசட்எஸ் மின்சார கார் விற்பனைக்கு அறிமுகம்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

ரேஞ்ஜ் மட்டுமில்லைங்க இன்னும் சில விஷயங்களில் இக்கார் லேசான புதுப்பித்தல்களைப் பெற்றிருக்கின்றது. இது என்ன என்பதைப் பற்றிதான் இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். எக்ஸைட் மற்றும் எக்ஸ்குளூசிவ் எனும் இரு வித தேர்வுகளில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கும்.

ஹிங்லிஷ் குரல் கட்டளை வசதியுடன் 2021 எம்ஜி இசட்எஸ் மின்சார கார் விற்பனைக்கு அறிமுகம்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

இதில் எக்சைட் மாடலின் விலை ரூ. 20,99,800 ஆகும். இதன் உயர்நிலை வேரியண்டாக காட்சியளிக்கும் எக்ஸ்குளூசிவ் தேர்விற்கு 24,18,000 ரூபாய் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவையிரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இந்த விலையிலேயே இக்கார்கள் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றன.

ஹிங்லிஷ் குரல் கட்டளை வசதியுடன் 2021 எம்ஜி இசட்எஸ் மின்சார கார் விற்பனைக்கு அறிமுகம்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

சிறப்பு அம்சங்கள்:

புதுப்பித்தலின் அடிப்படையில் புதிதாக இந்த மின்சார காரில் ஹிங்லிஷ் குரல் கட்டளை வசதி சேர்க்கப்பட்டிருக்கின்றது. ஆகையால், டங்கிலிஷ் போன்று இதில் ஹிந்தி+ஆங்கிளத்தைச் சேர்த்து பேசி சில சிறப்பம்சங்களையும் செயல்படுத்திக் கொள்ள முடியும். இந்த வசதியே இந்த புதுப்பித்தலில் கவனத்தை ஈர்க்கும் அம்சமாக இருக்கின்றது. இந்த வசதி இன்னும் சில காலங்களில் பிற மொழி பேசுவோர்க்கும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹிங்லிஷ் குரல் கட்டளை வசதியுடன் 2021 எம்ஜி இசட்எஸ் மின்சார கார் விற்பனைக்கு அறிமுகம்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

35 சிறப்பம்சங்களையே இந்த ஹிங்கிலிஷ் குரல் கட்டளையின் வசதியின்மூலம் செயல்படுத்த முடியும். உதாரணமாக எஃப்எம் (ரேடியோ)-ஐ ஆக்டிவேட் செய்ய எஃப்எம் சலோ கரோ என கூற வேண்டும். இவ்வாறு கூறும்பட்சத்தில் இதனை இயக்க முடியும். இதேபோன்று, சன் ரூஃப், ஏசி உள்ளிட்டவற்றை குரல் கட்டளையின் மூலம் கட்டுப்படுத்த முடியும்.

ஹிங்லிஷ் குரல் கட்டளை வசதியுடன் 2021 எம்ஜி இசட்எஸ் மின்சார கார் விற்பனைக்கு அறிமுகம்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

தொடர்ந்து இந்த வாகனத்தின் கிரவுண்ட் கிளியரன்ஸும் முந்தைய மாடலை சற்று அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. 16மிமீ வரை உயர்த்தப்பட்டிருக்கின்றது. ஆகையால், இப்போது இக்காரின் ஒட்டுமொத்த உயரம் 177 மிமீட்டராக உயர்ந்திருக்கின்றது. இத்துடன் சற்று கரடு, முரடான சாலையையும் சமாளிக்கும் வகையில் 215/55 R17 உருவாக்கம் கொண்ட டயர்கள் எம்ஜி இசட்எஸ் மின்சார காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஹிங்லிஷ் குரல் கட்டளை வசதியுடன் 2021 எம்ஜி இசட்எஸ் மின்சார கார் விற்பனைக்கு அறிமுகம்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

பேட்டரி:

மேற்கூறியதைக் காட்டிலும் இக்காரின் புதிய ரேஞ்ஜ் திறன் அனைவரும் கவரும் வகையில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக, மின் வாகன ஆர்வலர்களைக் கவரும் வகையில் அது அமைந்திருக்கின்றது. ஆமாங்க, முந்தைய மாடலைக் காட்டிலும் புதுப்பிக்கப்பட்ட இசட்எஸ் இவி 60 கிமீ கூடுதல் ரேஞ்தை வெளிப்படுத்தும் திறனைப் பெற்றிருக்கின்றது.

ஹிங்லிஷ் குரல் கட்டளை வசதியுடன் 2021 எம்ஜி இசட்எஸ் மின்சார கார் விற்பனைக்கு அறிமுகம்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

இந்த திறனுக்கேற்ப 44.5 kWh பேட்டரி இதில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இத்துடன், 143 பிஎச்பி மற்றும் 353 என்எம் டார்க்கை வெளியேற்றும் மின் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கின்றது. இது வெறும் 8.5 செகண்டில் மணிக்கு 0த்தில் இருந்து 100 கிமீ எனும் வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டதாகும். மேலும், இக்காரில் முழுமையான சார்ஜில் 419கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

ஹிங்லிஷ் குரல் கட்டளை வசதியுடன் 2021 எம்ஜி இசட்எஸ் மின்சார கார் விற்பனைக்கு அறிமுகம்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

இந்த அட்டகாசமான ரேஞ்ஜ் திறனின் காரணத்தினாலயே மின் வாகன பிரியர்களை இக்கார் கவரும் வகையில் அமைந்துள்ளது. இதுதவிர, புதிய புரஜெக்டர் ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல்கள், 17 இன்சிலான அலாய் வீல், எல்இடி வால் பகுதி மின் விளக்கு, பனோரமிக் சன்ரூஃப், தொடு திரை வசதிக் கொண்ட 8.0 இன்ச் அளவுள்ள இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், ஆறு ஏர் பேக், ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா மற்றும் சென்சார்கள் என மதிப்புக்கூட்டப்பட்ட அம்சங்கள் பல இக்காரில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

Most Read Articles
English summary
2021 MG ZS EV Launched In India With Rs. 20.99 Lakh Starting Prices. Read In Tamil.
Story first published: Monday, February 8, 2021, 14:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X