மறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்!! அறிமுகம் எப்போது?

2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக் கார் ஒன்று இந்தியாவில் சோதனை ஓட்டத்தின்போது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள ஸ்பை படங்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்!! அறிமுகம் எப்போது?

மினி நிறுவனம் 3-கதவு, 5-கதவு, கன்வெர்டபிள் மற்றும் இவி என்ற வெர்சன்களில் விற்பனை செய்துவரும் அதன் அடையாள ஹேட்ச்பேக் காரை சர்வதேச சந்தைகளில் ஸ்டைல் அப்கிரேட்கள் மற்றும் திருத்தியமைக்கப்பட்ட தொழிற்நுட்பங்களுடன் அப்டேட் செய்து வருகிறது.

மறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்!! அறிமுகம் எப்போது?

இந்த வகையில் தற்போது இந்தியாவில் சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ள 2021 மினி 3-கதவு காரின் ஸ்பை படங்கள் ஆட்டோகார் இந்தியா செய்திதளம் மூலமாக நமக்கு கிடைத்துள்ளன. இந்த படங்களின் மூலம் சோதனை காரின் முன்பக்கத்தில் ஏகப்பட்ட டேப்கள் ஒட்டப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது.

மறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்!! அறிமுகம் எப்போது?

சர்வதேச சந்தைகளில் வெளியிடப்பட்ட போது கொண்டிருந்த அதே பேட்டர்னில் தான் இந்த சோதனை மினி 3-கதவு கார் க்ரில் அமைப்பை கொண்டுள்ளது. பம்பரின் அடிப்பகுதிகளில் முக்கியமான துளைகள் காரின் பக்கவாட்டு பகுதிகள் வரையில் உள்ளன.

மறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்!! அறிமுகம் எப்போது?

முந்தைய தலைமுறை மினி 3-கதவு ஹேட்ச்பேக் கார் ஃபாக்-விளக்குகளை கொண்டிருந்தது. ஆனால் அவை இந்த 2021 வெர்சனில் வழங்கப்படவில்லை என்பதுபோல் தான் தெரிகிறது. மற்றப்படி இந்த காரின் பக்கவாட்டு மற்றும் பின்பக்கங்களை இந்த ஸ்பை படங்களில் பார்க்க முடியவில்லை.

மறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்!! அறிமுகம் எப்போது?

நமக்கு தெரிந்தவரை, பக்கவாட்டில் சக்கர வளைவுகள், பின்பக்கத்தில் பம்பர், டெயில்லேம்ப்கள் உள்ளிட்டவற்றின் வடிவம் திருத்தியமைக்கப்பட்டிருக்கலாம். உட்புறத்தில் அனலாக் டயல்களுக்கு பதிலாக டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், மாற்றியமைக்கப்பட்ட கியர் லிவர் உள்பட சில காஸ்மெட்டிக் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

மறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்!! அறிமுகம் எப்போது?

மைய கன்சோலில் வழங்கம்போல் வட்ட வடிவிலான இன்ஃபோடெயின்மெண்ட் திரையும், அதற்கு கீழே ஏசி கண்ட்ரோல்களும், ஏர்க்ராஃப்ட்டில் வழங்குவது போன்ற டோக்கிள் ஸ்விட்ச்களும் தொடரப்பட்டுள்ளன. இந்த சோதனை மாதிரியில் ஹெட்ஸ்-அப் திரையையும் பார்க்க முடிகிறது.

மறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்!! அறிமுகம் எப்போது?

ஆனால் இது ஸ்டாண்டர்டாக வழங்கப்படுமா அல்லது கூடுதல் ஆக்ஸஸரீயாக வழங்கப்படுமா என்பது தெரியவில்லை. மற்றப்படி 3-கதவு ஹேட்ச்பேக் காரில் வழக்கமாக வழங்கப்படும் என்ஜின் தேர்வுகளில் மினி நிறுவனம் எந்த மாற்றமும் கொண்டுவரவில்லை.

மறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்!! அறிமுகம் எப்போது?

தற்சமயம் 3-கதவு மற்றும் கன்வெர்டபிள் வெர்சன்களில் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் மினி ஹேட்ச்பேக் காரில் கூப்பர் எஸ் காரில் வழங்கப்படும் 192 எச்பி ஆற்றலை அதிகமாக வெளிப்படுத்தக்கூடிய 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் 7-ஸ்பீடு ட்யுல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் பொருத்தப்படுகிறது.

மறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்!! அறிமுகம் எப்போது?

2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தும் தேதி குறித்த எந்த தகவலும் தற்போதைக்கு கிடைக்க பெறவில்லை. இந்த அப்டேட் மாடலை வழக்கம்போல் 3-கதவு மற்றும் கன்வெர்டபிள் வடிவங்களில் சிபியு முறையில் மினி நிறுவனம் விற்பனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #மினி #mini
English summary
2021 Mini 3 Door facelift spotted testing
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X