ஃபோக்ஸ்வேகன் போலோ காரில் ஜிடிஐ வெர்சன்!! கிட்டத்தட்ட இந்த தோற்றத்தில் தான் இருக்கும்...

2021 ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ காரின் படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இந்த காரை பற்றிய கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஃபோக்ஸ்வேகன் போலோ காரில் ஜிடிஐ வெர்சன்!! கிட்டத்தட்ட இந்த தோற்றத்தில் தான் இருக்கும்...

போலோ ஜிடிஐ காரை உலகளவில் அறிமுகம் செய்ய ஜெர்மன் கார் பிராண்ட்டான ஃபோக்ஸ்வேகன் அனைத்து விதங்களிலும் தயாராகி வருகிறது.

ஃபோக்ஸ்வேகன் போலோ காரில் ஜிடிஐ வெர்சன்!! கிட்டத்தட்ட இந்த தோற்றத்தில் தான் இருக்கும்...

இதற்கிடையில் தான் தற்போது இந்த காரின் படங்களை ஃபோக்ஸ்வேகன் வெளியிட்டுள்ளது. ஸ்கெட்ச் படங்களான இவற்றில் புதிய ஜிடிஐ வெர்சன் வழக்கமான போலோ காரை காட்டிலும் தோற்றத்தில் மிகவும் ஸ்போர்டியானதாக உள்ளது.

ஃபோக்ஸ்வேகன் போலோ காரில் ஜிடிஐ வெர்சன்!! கிட்டத்தட்ட இந்த தோற்றத்தில் தான் இருக்கும்...

2021 போலோ ஹேட்ச்பேக் கார் சில வாரங்களுக்கு முன்பு தான் உலகளவில் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அதன் புதிய ஜிடிஐ வெர்சனும் விரைவில் உலகளவில் வருகிற ஜூன் மாத இறுதியில் வெளியிடப்படவுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் போலோ காரில் ஜிடிஐ வெர்சன்!! கிட்டத்தட்ட இந்த தோற்றத்தில் தான் இருக்கும்...

புதிய தலைமுறை போலோ மாடலின் அதே எம்க்யூபி ஏ0 ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள போலோ ஜிடிஐ கார் 4.05மீ நீளமுடையது, 1.75மீ அகலமுடையது, 1.45மீ உயரமுடையது.

ஃபோக்ஸ்வேகன் போலோ காரில் ஜிடிஐ வெர்சன்!! கிட்டத்தட்ட இந்த தோற்றத்தில் தான் இருக்கும்...

க்ரவுண்ட் க்ளியரென்ஸ் வழக்கமான போலோ கார்களின் அளவில் தான் இருக்கும். டிசைனை பொறுத்தவரையில் கோல்ஃப் ஜிடிஐ காரின் வடிவமைப்பில் பயன்படுத்தப்பட்ட அதே பாணியை தான் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் கையாண்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் போலோ காரில் ஜிடிஐ வெர்சன்!! கிட்டத்தட்ட இந்த தோற்றத்தில் தான் இருக்கும்...

தற்போது வெளியிடப்பட்டுள்ள படங்களில் போலோ ஜிடிஐ காரின் முன்பக்கத்தில் தேன்கூடு டிசைனிலான ஏர்-டேம் உடன் பம்பரானது மிகவும் கூர்மையான வடிவத்தில் காட்சியளிக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் போலோ காரில் ஜிடிஐ வெர்சன்!! கிட்டத்தட்ட இந்த தோற்றத்தில் தான் இருக்கும்...

பின்பக்கத்தில் டிஃப்யூஸர், ஸ்பாய்லர் மற்றும் இரட்டை-குழல் எக்ஸாஸ்ட் குழாய்களை பார்க்க முடிகிறது. இந்த ஜிடிஐ காரில் நிச்சயம் பிரத்யேகமான டிசைனிலான அலாய் சக்கரங்கள் வழங்கப்படும் என்று ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஏற்கனவே கூறியிருந்தது.

ஃபோக்ஸ்வேகன் போலோ காரில் ஜிடிஐ வெர்சன்!! கிட்டத்தட்ட இந்த தோற்றத்தில் தான் இருக்கும்...

போலோவின் ஸ்போர்ட்ஸ் வெர்சனான ஜிடிஐ, இந்த ஹேட்ச்பேக்கின் வேரியண்ட்கள் வரிசையிலேயே விலைமிக்க ப்ரீமியம் வெர்சனாக விற்பனை செய்யப்பட உள்ளது. அதிக டார்க் கொண்ட முன்-சக்கர ட்ரைவ் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட சேசிஸை போலோ ஜிடிஐ கார் பெற்றுவரும் என்று எதிர்பார்க்கிறோம்.

ஃபோக்ஸ்வேகன் போலோ காரில் ஜிடிஐ வெர்சன்!! கிட்டத்தட்ட இந்த தோற்றத்தில் தான் இருக்கும்...

இதனால் மற்ற போலோ வேரியண்ட்களை காட்டிலும் இதில் ஹேண்ட்லிங் சிறப்பானதாக இருக்கும். வெளிப்புறத்தை போல் உட்புறத்திலும் லெதர் ஸ்டேரிங் சக்கரம் & கியர் தேர்தெடுப்பான் என இந்த ஜிடிஐ கார் மற்ற போலோ கார்களில் இருந்து தனித்து தெரியும் என்பது உறுதி.

Most Read Articles

English summary
2021 Polo GTI hatchback to launch soon, Volkswagen shares first look.
Story first published: Tuesday, May 11, 2021, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X