இந்தியாவில் அறிமுகமானது புதிய போர்ஷே பனமெரா கார்!! ஆரம்ப விலை ரூ.1.45 கோடி...

2021 போர்ஷே பனமெரா கார் ரூ.1.45 கோடி என்ற ஆரம்ப விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய போர்ஷே காரை பற்றிய தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் அறிமுகமானது புதிய போர்ஷே பனமெரா கார்!! ஆரம்ப விலை ரூ.1.45 கோடி...

பனமெரா, பனமெரா ஜிடிஎஸ், பனமெரா டர்போ எஸ் மற்றும் பனமெரா டர்போ எஸ் இ-ஹைப்ரீட் என்ற நான்கு வெர்சன்களில் புதிய போர்ஷே பனமெரா கார் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகமானது புதிய போர்ஷே பனமெரா கார்!! ஆரம்ப விலை ரூ.1.45 கோடி...

இவை நான்கும் முன்பக்கத்தில் காற்று ஏற்பான் க்ரில் உடன் தாழ்வான மூக்கு பகுதி, அதன் பக்கவாட்டில் பெரிய குளிர்விப்பான் துளைகளை கொண்டுள்ளது. இவற்றிற்கு மேலே இரு முனைகளிலும் இரு சிங்கிள்-பார் விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் அறிமுகமானது புதிய போர்ஷே பனமெரா கார்!! ஆரம்ப விலை ரூ.1.45 கோடி...

அப்படியே காரின் பின்பகுதிக்கு வந்தால் இரு எல்இடி டெயில்லைட்களை இணைக்கும் விதத்தில் லைட் ஸ்ட்ரிப் ஒன்று காரின் மொத்த அகலத்திற்கும் உள்ளது. 2021 பனமெராவில் வழக்கமான 2.9 லிட்டர் வி6 பெட்ரோல் என்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகமானது புதிய போர்ஷே பனமெரா கார்!! ஆரம்ப விலை ரூ.1.45 கோடி...

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 325 பிஎச்பி மற்றும் 450 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. பனமெரா ஜிடிஎஸ் மாடலில் அதிகப்படியான ஆற்றலை வெளிப்படுத்தும் வி8 என்ஜின் பிரத்யேகமான வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகமானது புதிய போர்ஷே பனமெரா கார்!! ஆரம்ப விலை ரூ.1.45 கோடி...

அதிகப்பட்சமாக 473 பிஎச்பி மற்றும் 620 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த ஆற்றல்மிக்க என்ஜின் வழங்கப்பட்டுள்ளதை வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக பின்பக்க ஹெட்லைட்களை சுற்றிலும் மெல்லிய கருப்பு நிற கிராஃபிக் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகமானது புதிய போர்ஷே பனமெரா கார்!! ஆரம்ப விலை ரூ.1.45 கோடி...

பனமெரா டர்போ எஸ் இ-ஹைப்ரீட் காரும் ஆற்றல்மிக்க வி8 பை டர்போ என்ஜினை எலக்ட்ரிக் மோட்டார் உடன் பெற்று வந்துள்ளது. இவற்றின் மூலமாக அதிகப்பட்சமாக 552 பிஎச்பி மற்றும் 750 என்எம் டார்க் திறனில் இந்த காரை இயக்க முடியும்.

இந்தியாவில் அறிமுகமானது புதிய போர்ஷே பனமெரா கார்!! ஆரம்ப விலை ரூ.1.45 கோடி...

17.9kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் மோட்டாரின் மூலம் 59கிமீ தூரத்திற்கு காரை இயக்கி செல்ல முடியும். ட்ரான்ஸ்மிஷனுக்கு 8-ஸ்பீடு ட்யுல்-க்ளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகமானது புதிய போர்ஷே பனமெரா கார்!! ஆரம்ப விலை ரூ.1.45 கோடி...

2021 பனமெரா காரின் கேபினில் ஆப்பிள் கார்ப்ளே வயர்இல்லா இணைப்பை ஏற்கக்கூடிய போர்ஷே தொடர்பு மேலாண்மை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. 2021 பனமெராவின் ஆரம்ப விலை ரூ.1.45 கோடி என இருக்க பனமெரா ஜிடிஎஸ் மாடல் ரூ.1.86 கோடியில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகமானது புதிய போர்ஷே பனமெரா கார்!! ஆரம்ப விலை ரூ.1.45 கோடி...

பனமெரா டர்போ எஸ் மற்றும் டர்போ எஸ் இ-ஹைப்ரீட் வெர்சன்களின் விலைகள் முறையே ரூ.2.12 கோடி மற்றும் ரூ.2.43 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போர்ஷே பனமெராவின் பிரத்யேகமான 10 வருட நிறைவு ஸ்பெஷல் எடிசன் இப்போதும் இந்தியாவில் சில குறிப்பிட்ட டீலர்ஷிப் ஷோரூமில் விற்பனைக்கு கிடைக்கிறது.

Most Read Articles

மேலும்... #போர்ஷே #porsche
English summary
2021 Porsche Panamera launched in India, priced at ₹1.45 crore
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X