கியா சொனெட்டிற்கு போட்டியாக ரெனால்ட்டின் கிகர்!! டீசர் வெளியீடு, விரைவில் அறிமுகம்

சந்தையில் மிகுந்த வரவேற்பை பெற்றுவரும் கியா சொனெட்டிற்கு போட்டியாக ரெனால்ட் நிறுவனம் கொண்டுவரும் 2021 கிகர் சப்-காம்பெக்ட் எஸ்யூவி காரின் டீசர் படங்கள் அறிமுகத்திற்கு முன்பாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

கியா சொனெட்டிற்கு போட்டியாக ரெனால்ட்டின் கிகர்!! டீசர் வெளியீடு, விரைவில் அறிமுகம்

2021 ரெனால்ட் கிகர் உலகளவில் வருகிற ஜனவரி 28ஆம் தேதி தனது தோற்றத்தை வெளிக்காட்டவுள்ளது. முன்னதாக இதன் கான்செப்ட் வெர்சனின் தோற்றத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ரெனால்ட் நிறுவனம் நமது பார்வைக்கு கொண்டுவந்திருந்தது.

கியா சொனெட்டிற்கு போட்டியாக ரெனால்ட்டின் கிகர்!! டீசர் வெளியீடு, விரைவில் அறிமுகம்

இந்த கான்செப்ட் வெர்சனை பெரும்பான்மையாக ஒத்துதான் இதன் விற்பனை மாடல் இருக்கும். சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான நிஸான் மேக்னைட்டின் அதே சிஎம்எஃப்-ஏ+ ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்டு வருவதால் ரெனால்ட் கிகரும் தோற்றத்தில் மேக்னைட் போன்றே இருக்கும்.

கியா சொனெட்டிற்கு போட்டியாக ரெனால்ட்டின் கிகர்!! டீசர் வெளியீடு, விரைவில் அறிமுகம்

ஒரே ப்ளாட்ஃபாரம் மட்டுமின்றி என்ஜின் அமைப்பு உள்பட இதர வசதிகளையும் இரண்டும் பகிர்ந்து கொள்ளவுள்ளன. இந்தியாவில் கிகரின் தயாரிப்பு பணிகள் சென்னை, ஓரகடம் தொழிற்சாலையில் மேற்கொள்ளப்படவுள்ளன.

கியா சொனெட்டிற்கு போட்டியாக ரெனால்ட்டின் கிகர்!! டீசர் வெளியீடு, விரைவில் அறிமுகம்

தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசர் படத்தில் காரின் ஹெட்லைட்கள் மட்டும் ஒளிரும் விதத்தில் காட்டப்பட்டுள்ளன. கிகரில் பிளவுப்பட்ட வடிவில் ஹெட்லேம்ப் ஆனது ட்ரை-எல்இடி ப்ரோஜெக்டர்களுடனும், டெயில்லைட்கள் எல்இடி தரத்தில் C-வடிவிலும் வழங்கப்படவுள்ளன.

பிரபலமான மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, கியா சொனெட், ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 உள்ளிட்டவற்றிற்கு போட்டியாக விளங்கவுள்ள ரெனால்ட் கிகரில் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படவுள்ளது.

கியா சொனெட்டிற்கு போட்டியாக ரெனால்ட்டின் கிகர்!! டீசர் வெளியீடு, விரைவில் அறிமுகம்

நிஸான் மேக்னைட்டிலும் வழங்கப்படுகின்ற இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் அதிகப்பட்சமாக 71 பிஎச்பி மற்றும் 96 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 1.0 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் என்ஜினும் வழங்கப்படலாம். இவற்றுடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படலாம்.

Most Read Articles
English summary
Kia Sonet rivaling 2021 Renault Kiger subcompact SUV teased ahead of launch
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X