17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!

17 இன்ச் அலாய் சக்கரங்களுடன் சோதனையில் ஈடுப்படுத்தப்பட்ட 2021 மஹிந்திரா ஸ்கார்பியோவின் புதிய ஸ்பை வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதனை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!

பல ஆண்டுகளாக எந்தவொரு அப்கிரேடும் வழங்கப்படலாம் விற்பனை செய்யப்பட்டு வந்த ஸ்கார்பியோ கார் மாடலுக்கு ஒருவழியாக இரண்டாம் தலைமுறை அப்கிரேடை வழங்க முடிவு செய்து அதன் தயாரிப்பு பணிகளில் மஹிந்திரா ஈடுப்பட்டு வருகிறது.

17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!

இந்த 2021ஆம் ஆண்டு முடிவதற்குள்ளாக அறிமுகப்படுத்தப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படும் 2021 ஸ்கார்பியோ கடந்த பல மாதங்களாக சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது.

17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!

இந்த வகையில் தற்போது மீண்டும் பொது சாலையில் சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ள புதிய ஸ்கார்பியோவின் ஸ்பை வீடியோவின் மூலம் காரின் சில அம்சங்கள் மீண்டும் உறுதிப்பட்டுள்ளன.

பவர் ஸ்ட்ரோக் பிஎஸ் என்ற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள இது தொடர்பான ஸ்பை வீடியோவில் சோதனை ஸ்கார்பியோ காரில் 17 இன்ச்சில் அலாய் சக்கரங்கள் 245/65 பிரிவு டயர்கள் உடன் பொருத்தப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது.

17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!

இவை மட்டுமில்லாமல் புதிய மேற்கூரை தண்டவாளங்கள், சுறா துடுப்பு வடிவிலான ஆண்டெனா, ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், புதிய எல்இடி டெயில்லேம்ப்கள், பின்பக்க ஸ்பாய்லர் மற்றும் உயரத்தில் பொருத்தப்பட்ட ஸ்டாப் விளக்கு உள்ளிட்டவற்றையும் இந்த சோதனை மாதிரி கொண்டுள்ளது.

17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!

இந்த ஸ்பை வீடியோவில் புதிய ஸ்கார்பியோவின் உட்புறத்தை பார்க்க முடியவில்லை என்றாலும், இதற்கு முன் வெளியாகி இருந்த ஸ்பை படங்களும், வீடியோக்களும், இந்த மஹிந்திரா எஸ்யூவி கார் உட்புறத்தில் க்ரோம் உள்ளீடுகளுடன் வலதுபுறத்தில் என்ஜின் ஸ்டார்ட்/ ஸ்டாப் ஸ்விட்ச்சை கொண்ட புதிய பல செயல்பாட்டு ஸ்டேரிங் சக்கரத்தை பெற்றுவரவுள்ளதை வெளிக்காட்டி இருந்தன.

17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!

மேலும், அனலாக் டச்சோமீட்டர், சன்ரூஃப்-ஐயும் புதிய ஸ்கார்பியோவில் மஹிந்திரா வழங்கவுள்ளதை அறிந்திருந்தோம். இது பனோராமிக் சன்ரூஃப் இல்லை என்றாலும், இந்த அம்சம் நிச்சயம் வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!

இவற்றுடன் தற்போதைய அம்சங்கள் சிலவற்றையும் பெற்றுவரலாம் என எதிர்பார்க்கப்படும் 2021 ஸ்கார்பியோவில் அதே 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் மற்றும் 2.0 லிட்டர் எம்ஸ்டாலியோன் டர்போ டீசல் என்ஜின் தான் வழங்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!

ஆனால் இவை எவ்வாறான ஆற்றல்களை அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்படும் என்பது தெரியவில்லை. 2020 மஹிந்திரா தாரில் இந்த என்ஜின்கள் முறையே 130 பிஎஸ் மற்றும் 150 பிஎஸ் ஆற்றலைகளை அதிகப்பட்சமாக வெளிப்படுத்துகின்றன.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
2021 Mahindra Scorpio Spied With 17-Inch Alloy Wheels & Rear Disc Brakes
Story first published: Tuesday, March 2, 2021, 23:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X