டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட், லெஜெண்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் லெஜெண்டர் மாடல்கள் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட், லெஜெண்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் மற்றும் புதிய லெஜெண்டர் வேரியண்ட்டை டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் இன்று (ஜனவரி 6) விற்பனைக்கு அறிமுகம் செய்தது. 29.98 லட்ச ரூபாய் முதல் 37.58 லட்ச ரூபாய் வரை விலை (எக்ஸ் ஷோரூம்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டாப் டீசல் மாடலின் விலை 3 லட்ச ரூபாய் வரை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட், லெஜெண்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் சந்தையை விட்டு வெளியேற மாடலை போன்றே புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட்டும் விற்பனையில் ஜொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டாண்டர்டு ஃபார்ச்சூனரின் வெளிப்புறத்தில் நிறைய மாற்றங்களை காண முடிகிறது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட், லெஜெண்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

இதில், ரீ-டிசைன் செய்யப்பட்ட க்ரில் அமைப்பு, புதிய பனி விளக்குகள் அறை, புதிய அலாய் வீல்கள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. பின் பகுதியிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இங்கே புதிய கலவையில் விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன. அதே சமயம் ஸ்டாண்டர்டு மாடலில் இருந்து வேறுபடுத்தும் விதத்தில், லெஜெண்டர் வேரியண்ட்டின் தோற்றத்தில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட், லெஜெண்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

இதில், வித்தியாசமான பம்பர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று புதிய ரேடியேட்டர் க்ரில்லும் இடம்பெற்றுள்ளது. மேலும் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள் மற்றும் மெஷின் கட் 18 இன்ச் அலாய் வீல்களும் வழங்கப்பட்டுள்ளன. பார்ப்பதற்கு மிகவும் கம்பீரமான தோற்றத்தை இந்த எஸ்யூவி பெற்றுள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட், லெஜெண்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

அதே சமயம் ஸ்டாண்டர்டு ஃபார்ச்சூனரில், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வசதிகளுடன் 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 11 ஸ்பீக்கர்களுடன் ஜேபிஎல் ஆடியோ, கனெக்டட் கார் தொழில்நுட்பம் உள்ளிட்ட வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட், லெஜெண்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

செயல்திறனை பொறுத்தவரை 204 பிஎஸ் பவர் மற்றும் 500 என்எம் டார்க் திறனை உருவாக்கும் வகையில் 2.8 லிட்டர் நான்கு-சிலிண்டர் டீசல் இன்ஜின் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் சந்தையை விட்டு வெளியேறவுள்ள மாடல் 177 பிஎஸ் பவரையும், 450 என்எம் டார்க் திறனையும் மட்டுமே உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட், லெஜெண்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

அதே சமயம் 2.7 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 166 பிஎஸ் பவர் மற்றும் 245 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையிலேயே வழங்கப்பட்டுள்ளது. டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. ஸ்டாண்டர்டு ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் 4×2 மற்றும் 4×4 ஆப்ஷன்களுடன் கிடைக்கும்.

டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட், லெஜெண்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

ஆனால் லெஜெண்டர் வேரியண்ட் 4×2 ஆப்ஷனுடன் மட்டுமே விற்பனை செய்யப்படும். எம்ஜி க்ளோஸ்ட்டர் மூலமாக டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவிக்கு விற்பனையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல் மற்றும் லெஜெண்டர் வேரியண்ட் மூலமாக அதனை டொயோட்டா சமாளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
2021 Toyota Fortuner Facelift, Legender Launched In India - Here Are All The Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X