பிஎம்டபிள்யூ எக்ஸ்3 ஃபேஸ்லிஃப்ட் காரின் படங்கள் மீண்டும் கசிந்தன!! புதியதாக ஏகப்பட்ட அப்கிரேட்கள்...

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 ஃபேஸ்லிஃப்ட் காரின் படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. அவற்றை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 ஃபேஸ்லிஃப்ட் காரின் படங்கள் மீண்டும் கசிந்தன!! புதியதாக ஏகப்பட்ட அப்கிரேட்கள்...

பிஎம்டபிள்யூவின் இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் காரின் படங்கள் சில தினங்களுக்கு முன்பும் இவ்வாறு இணையத்தில் கசிந்து இருந்தது. ஆனால் தற்போது கோச்செஸ்பியாஸ் என்ற இணையத்தளத்தின் மூலம் கிடைத்துள்ள படங்களின் மூலமாகவே தயாரிப்பு நிறுவனம் இந்த காரில் எத்தகைய மாற்றங்களை கொண்டுவந்துள்ளது என்பதை தெளிவாக அறிய முடிகிறது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 ஃபேஸ்லிஃப்ட் காரின் படங்கள் மீண்டும் கசிந்தன!! புதியதாக ஏகப்பட்ட அப்கிரேட்கள்...

முன்பக்கத்தில் புதிய எக்ஸ்3 காரின் கிட்னி வடிவிலான க்ரில் முழுவதும் கருப்பு நிறத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. அதேநேரம் க்ரில் முன்பை காட்டிலும் அளவில் சிறியதாக காட்சியளிக்கிறது. ஹெட்லைட்கள், இரண்டாம் தலைமுறை 4 சீரிஸ் கூபே காரில் பார்த்தது போன்று உள்ளன.

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 ஃபேஸ்லிஃப்ட் காரின் படங்கள் மீண்டும் கசிந்தன!! புதியதாக ஏகப்பட்ட அப்கிரேட்கள்...

முன்பக்கத்தில் அகலமான காற்று ஏற்பான், பம்பர் மற்றும் ஃபாக் விளக்குகள் என பெரும்பான்மையான பாகங்கள் கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இவ்வளவு ஏன், எல்இடி ஹெட்லைட்களில் கூட கருப்பு நிற டிண்ட் வழங்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 ஃபேஸ்லிஃப்ட் காரின் படங்கள் மீண்டும் கசிந்தன!! புதியதாக ஏகப்பட்ட அப்கிரேட்கள்...

அப்படியே பின்பக்கத்திற்கு சென்றோமேயானால், முப்பரிமாண எல்இடி டெயில்லேம்ப்கள் ஸ்மோக்டு எஃபெக்ட் மற்றும் கருப்பு உள்ளீடுகளை கொண்டுள்ளன. பின்பக்க பம்பர் ஆனது கருப்பு நிற சறுக்கு தட்டு மற்றும் இரட்டை எக்ஸாஸ்ட் குழாய்களை சுற்றிலும் பளபளப்பான கருப்பு நிற பார்டரை கொண்டுள்ளது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 ஃபேஸ்லிஃப்ட் காரின் படங்கள் மீண்டும் கசிந்தன!! புதியதாக ஏகப்பட்ட அப்கிரேட்கள்...

இவை தவிர்த்து புதியதாக வடிவமைக்கப்பட்ட அலாய் சக்கரங்கள், சுறா துடுப்பு வடிவிலான ஆண்டென்னா, மேற்கூரை தண்டவாளங்கள், டர்ன் இண்டிகேட்டர்களுடன் ஒருங்கிணைக்கப்பட்ட பக்கவாட்டு கண்ணாடிகள் உள்பட பின்பக்க கதவிலும் கருப்பு நிறத்தை பார்க்க முடிகிறது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 ஃபேஸ்லிஃப்ட் காரின் படங்கள் மீண்டும் கசிந்தன!! புதியதாக ஏகப்பட்ட அப்கிரேட்கள்...

மற்றப்படி காரின் உட்புறத்தை காட்டும் படங்கள் நமக்கு தற்போதைக்கு கிடைக்கவில்லை. எப்படி இருந்தாலும் எக்ஸ்3 ஃபேஸ்லிஃப்ட் காரின் உட்புறம் தற்போதைய மாடலை காட்டிலும் ஏகப்பட்ட அப்டேட்களை பெற்றிருக்கும்.

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 ஃபேஸ்லிஃப்ட் காரின் படங்கள் மீண்டும் கசிந்தன!! புதியதாக ஏகப்பட்ட அப்கிரேட்கள்...

இந்த வகையில் 12.3 இன்ச்சில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆப்பிள் கார்ப்ளே இணைப்பு வசதி, கேபினை சுற்றிலும் விளக்குகள், 16-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் மற்றும் வயர் இல்லா போன் சார்ஜிங் உள்ளிட்டவற்றை எக்ஸ்3 ஃபேஸ்லிஃப்ட் கார் பெற்றுவரலாம்.

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 ஃபேஸ்லிஃப்ட் காரின் படங்கள் மீண்டும் கசிந்தன!! புதியதாக ஏகப்பட்ட அப்கிரேட்கள்...

பயணிகளின் பாதுகாப்பிற்கு அதிக எண்ணிக்கையில் காற்றுப்பைகள், இபிடியுடன் ஏபிஎஸ், ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா, ஐசோஃபிக்ஸ் குழந்தைகளுக்கான இருக்கை உள்ளிட்டவற்றை 2022 எக்ஸ்3 கார் பெறலாம்.

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 ஃபேஸ்லிஃப்ட் காரின் படங்கள் மீண்டும் கசிந்தன!! புதியதாக ஏகப்பட்ட அப்கிரேட்கள்...

தற்போதைய எக்ஸ்3 காரை போல் அப்டேட் செய்யப்பட்ட எக்ஸ்3 எஸ்யூவி காரும் எக்ஸ்ட்ரைவ்30ஐ மற்றும் எக்ஸ்ட்ரைவ்20டி என்ற இரு விதமான ட்ரிம் நிலைகளில் விற்பனை செய்யப்பட உள்ளது. ட்ரான்ஸ்மிஷனுக்கு 8-ஸ்பீடு ஸ்டெப்ட்ரானிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அப்படியே தொடரப்பட உள்ளது.

Most Read Articles

English summary
2022 BMW X3 SUV Facelift Photos Leak – New Front Face Revealed.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X