புதிய தலைமுறை ஃபோர்டு ரேஞ்சர் பிக்-அப் ட்ரக் வெளியீடு!! ட்ரக்கை பற்றி நீங்க தெரிஞ்சிக்க வேண்டிய விஷயங்கள்!

2022 ஃபோர்டு ரேஞ்சர் பிக்-அப் ட்ரக்கை பற்றிய விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்யப்பட்டுள்ளன. புதிய ஃபோர்டு ரேஞ்சரை பற்றிய கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய தலைமுறை ஃபோர்டு ரேஞ்சர் பிக்-அப் ட்ரக் வெளியீடு!! ட்ரக்கை பற்றி நீங்க தெரிஞ்சிக்க வேண்டிய விஷயங்கள்!

உலகளவில் பிரபலமான ஃபோர்டு பிக்-அப் ட்ரக்குகளின் லிஸ்ட்டை எடுத்து பார்த்தோமேயானால், அதில் நிச்சயம் ரேஞ்சரும் ஒன்றாக இருக்கும். எஃப்-150 அளவிற்கு இல்லை என்றாலும், ரேஞ்சருக்கும் குறிப்பாக அமெரிக்காவில் அதிகளவில் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

புதிய தலைமுறை ஃபோர்டு ரேஞ்சர் பிக்-அப் ட்ரக் வெளியீடு!! ட்ரக்கை பற்றி நீங்க தெரிஞ்சிக்க வேண்டிய விஷயங்கள்!

இருப்பினும் ஃபோர்டு எண்டேவியர் எஸ்யூவி காரின் முன்பக்கத்தை அப்படியே பெற்றுள்ளதாக ரேஞ்சர் மீதான ஒரு சிறிய குற்றச்சாட்டு இருந்தது. அது தற்போது புதிய தலைமுறையில் சரி செய்யப்பட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். தற்போது வெளியீடு செய்யப்பட்டுள்ள 2022 ரேஞ்சரின் முன்பக்கம் எண்டேவியரில் இருந்து வித்தியாசப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை ஃபோர்டு ரேஞ்சர் பிக்-அப் ட்ரக் வெளியீடு!! ட்ரக்கை பற்றி நீங்க தெரிஞ்சிக்க வேண்டிய விஷயங்கள்!

இம்முறை ஃபோர்டு ரேஞ்சரின் முன்பக்கம் பெரியதாகவும், அகலமானதாகவும் கொண்டுவரப்பட்டுள்ளது. ஃபோர்டு, ரேஞ்சர் லோகோக்களை மையத்தில் கொண்ட முன்பக்க க்ரில்லின் இரு முனைகளிலும் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்கள் பொருத்தப்பட்டுள்ளன. 2022 ரேஞ்சர் தற்போதைக்கு ஆஸ்திரேலிய நாட்டு சந்தையில் மட்டுமே வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை ஃபோர்டு ரேஞ்சர் பிக்-அப் ட்ரக் வெளியீடு!! ட்ரக்கை பற்றி நீங்க தெரிஞ்சிக்க வேண்டிய விஷயங்கள்!

ஆனால் இந்த மாடல் தான் விரைவில் உலகளவில் வெளியீடு செய்யப்படும் என தெரிகிறது. இந்த புதிய ஃபோர்டு ட்ரக் முன்பை காட்டிலும் 50மிமீ அகலமானதாகவும், 50மிமீ அதிக வீல்பேஸை கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக பின்பக்கத்தில் பொருட்களை வைத்து செல்லும் பகுதியின் பரப்பளவு அதிகரித்திருப்பதை பார்க்க முடிகிறது.

புதிய தலைமுறை ஃபோர்டு ரேஞ்சர் பிக்-அப் ட்ரக் வெளியீடு!! ட்ரக்கை பற்றி நீங்க தெரிஞ்சிக்க வேண்டிய விஷயங்கள்!

பின்பக்க கதவிலும் எல்இடி ஹெட்லைட்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல் பின்பக்க கதவின் மத்தியிலும் ரேஞ்சர் லோகோவை காணலாம். ட்ரக்கின் வெளிப்பக்கம் பெரியதாக்கப்பட்டுள்ளதால், 2022 ரேஞ்சரின் உட்புறத்திலும் பயணிகள் நன்கு சவுகரியமாக பயணம் செய்யத்தக்க அளவில் விசாலமான கேபின் கிடைத்துள்ளது.

புதிய தலைமுறை ஃபோர்டு ரேஞ்சர் பிக்-அப் ட்ரக் வெளியீடு!! ட்ரக்கை பற்றி நீங்க தெரிஞ்சிக்க வேண்டிய விஷயங்கள்!

டேஸ்போர்டில் சிங்க் 4 இணைப்பை கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் 12-இன்ச் தொடுத்திரை உடன் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் ஓட்டுனரின் சவுகரியத்திற்காக எலக்ட்ரானிக் ‘ஷார்ட்-த்ரோ' கியர் தேர்ந்தெடுப்பான் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவையும் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் இதன் கேபின் வெளிப்புற விளக்குகள் அமைப்பையும் கொண்டுள்ளது.

புதிய தலைமுறை ஃபோர்டு ரேஞ்சர் பிக்-அப் ட்ரக் வெளியீடு!! ட்ரக்கை பற்றி நீங்க தெரிஞ்சிக்க வேண்டிய விஷயங்கள்!

இதனை ஃபோர்டுபாஸ் ஸ்மார்ட்போன் செயலியின் மூலம் கட்டுப்படுத்தலாம். ஒட்டுமொத்தமாக, இயற்பியல் முறையில் அழுத்தக்கூடிய பொத்தான்களில் இருந்து 2022 ரேஞ்சர் சற்று ஒதுங்கி வந்துள்ளது. அவற்றில் பெரும்பாலானவை தற்போது தொடுதல் மூலமாக கண்ட்ரோல் செய்யக்கூடியவைகளாக மாறியுள்ளன. ஆஃப்-ரோடு மோட்-ஐ கூட இனி தொடுதல் மூலமாக தேர்வு செய்யலாம்.

புதிய தலைமுறை ஃபோர்டு ரேஞ்சர் பிக்-அப் ட்ரக் வெளியீடு!! ட்ரக்கை பற்றி நீங்க தெரிஞ்சிக்க வேண்டிய விஷயங்கள்!

இயற்பியல் முறையிலான டயல்கள் மற்றும் பொத்தான்கள் மூலமாக கண்ட்ரோல் செய்யக்கூடியவை என்று பார்த்தால், இரட்டை-நிலை க்ளைமேட் கண்ட்ரோல், 4x4 ஆட்டோ, ஆடியோ மற்றும் 2-சக்கர ட்ரைவ் உள்ளிட்டவற்றை சொல்லலாம். இவை மட்டுமின்றி, வயர் இல்லா போன் சார்ஜர், 360-கோண கேமிரா மற்றும் யுஎஸ்பி-சி துளைகள் போன்றவற்றையும் புதிய ரேஞ்சரில் ஃபோர்டு வழங்கியுள்ளது.

புதிய தலைமுறை ஃபோர்டு ரேஞ்சர் பிக்-அப் ட்ரக் வெளியீடு!! ட்ரக்கை பற்றி நீங்க தெரிஞ்சிக்க வேண்டிய விஷயங்கள்!

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு புதிய ரேஞ்சரில் 3 லிட்டர் வி6 டீசல் என்ஜினை ஃபோர்டு பொருத்தியுள்ளது. முந்தைய ரேஞ்சரில் 3.2 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டு இருந்தது. இருப்பினும் 2022 ரேஞ்சரின் புதிய வேரியண்ட்களிலும் சர்வதேச சந்தைகளில் வழக்கமாக வழங்கப்படும் வி6 2-லிட்டர் டர்போ மற்றும் 2 லிட்டர் இரட்டை-டர்போ டீசல் என்ஜின் தேர்வுகளே தொடரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தலைமுறை ஃபோர்டு ரேஞ்சர் பிக்-அப் ட்ரக் வெளியீடு!! ட்ரக்கை பற்றி நீங்க தெரிஞ்சிக்க வேண்டிய விஷயங்கள்!

மற்றப்படி இந்த என்ஜின்கள் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் அளவுகளில் ஏதேனும் மாற்றங்கள் இருக்குமா அல்லது அப்படியே தான் தொடரப்படுமா என்பது தற்போதைக்கு அறிவிக்கப்படவில்லை. ஆஸ்திரேலியாவில் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.30- 40 லட்சம் வரையிலான விலைகளில் புதிய தலைமுறை ரேஞ்சர் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தலைமுறை ஃபோர்டு ரேஞ்சர் பிக்-அப் ட்ரக் வெளியீடு!! ட்ரக்கை பற்றி நீங்க தெரிஞ்சிக்க வேண்டிய விஷயங்கள்!

இந்திய சந்தையை பொறுத்தவரையில், அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனம் வெளியேறவுள்ளதாக அறிவித்ததே கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரையில் பரபரப்பாக பேசும் பொருளாக இருந்தது. ஈக்கோஸ்போர்ட், எண்டேவியர் என உலகளவில் வெற்றி மாடல்களை விற்பனை செய்துவந்த போதிலும் கடந்த சில வருடங்களாகவே ஃபோர்டு இந்தியா நிறுவனம் நஷ்டத்தை சந்தித்து வந்தது. கொரோனா வைரஸ் பரவலினால் கொண்டுவரப்பட்ட ஊரடங்கு உத்தரவுகள் ஃபோர்டை இத்தகைய முடிவெடுக்க உந்துதலாக அமைந்துவிட்டன.

Most Read Articles

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
2022 Ford Ranger Officially Revealed.
Story first published: Friday, November 26, 2021, 22:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X