ஒரே நேரத்தில் கேமிராவில் சிக்கிய புதிய & பழைய சுஸுகி எஸ்-கிராஸ் கார்கள்!! ஸ்பை படங்கள் வெளியீடு!

சுஸுகி எஸ்-கிராஸ் மாடலின் புதிய தலைமுறை ஏற்கனவே உலகளவில் பலத்தரப்பட்ட மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதற்கிடையில் இந்த புதிய தலைமுறை சுஸுகி க்ராஸ்ஓவரின் ஸ்பை படங்கள் சமீப நாட்களாக தொடர்ச்சியாக சமூக வலைத்தள பக்கங்களில் வெளியாகி வருகின்றன.

ஒரே நேரத்தில் கேமிராவில் சிக்கிய புதிய & பழைய சுஸுகி எஸ்-கிராஸ் கார்கள்!! ஸ்பை படங்கள் வெளியீடு!

இந்த வகையில் தற்போது மீண்டும் புதிய எஸ்-கிராஸின் படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளன. இம்முறை ஸ்பை படங்கள் அவ்வளவாக தெளிவாக இல்லாவிடினும், காரின் முன்பக்கம் மட்டுமின்றி, பக்கவாட்டு மற்றும் பின்பகுதியையும் பார்க்க முடிகிறது.

ஒரே நேரத்தில் கேமிராவில் சிக்கிய புதிய & பழைய சுஸுகி எஸ்-கிராஸ் கார்கள்!! ஸ்பை படங்கள் வெளியீடு!

மேலும் இந்த படங்களின் மூலமாக இந்த சுஸுகி எஸ்யூவி வாகனம் டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளதையும் அறிய முடிகிறது. 2022 சுஸுகி எஸ்-கிராஸ் உலகளவில் வருகிற 2021 நவம்பர் 25ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன்பின் முதலாவதாக ஐரோப்பிய சந்தைகளில் இந்த கார் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது.

ஒரே நேரத்தில் கேமிராவில் சிக்கிய புதிய & பழைய சுஸுகி எஸ்-கிராஸ் கார்கள்!! ஸ்பை படங்கள் வெளியீடு!

அதனை தொடர்ந்து இந்தியா உள்பட மற்ற நாட்டு சந்தைகளில் புதிய எஸ்-கிராஸ் அறிமுகப்படுத்தப்படலாம். இதற்கிடையில் இந்த நவம்பர் மாத துவக்கத்தில் புதிய தலைமுறை எஸ்-கிராஸ் தொடர்பான டீசரை ஜப்பானை சேர்ந்த சுஸுகி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அதன் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டு இருந்தது.

ஒரே நேரத்தில் கேமிராவில் சிக்கிய புதிய & பழைய சுஸுகி எஸ்-கிராஸ் கார்கள்!! ஸ்பை படங்கள் வெளியீடு!

தற்போது கிடைத்துள்ள புதிய ஸ்பை படங்களின் மூலம், தாழ்வான நிலைப்பாட்டை கொண்ட தற்போதைய எஸ்-கிராஸில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டதாக புதிய எஸ்-கிராஸ் நிமிர்ந்த தோற்றத்தை பெற்றுவரவுள்ளதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்த முடிகிறது. இதன்படி, பின்பக்கத்தில் மேற்கூரையானது சற்று சாய்வாக கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக புதிய எஸ்-கிராஸின் பின்பகுதி தாழ்வாக காட்சியளிக்கிறது.

ஒரே நேரத்தில் கேமிராவில் சிக்கிய புதிய & பழைய சுஸுகி எஸ்-கிராஸ் கார்கள்!! ஸ்பை படங்கள் வெளியீடு!

இருப்பினும் ஓட்டுமொத்தமாக டிசைன் ஆனது வெளிப்பக்கத்தில் புதிய பாகங்கள் உடன் முந்தைய தலைமுறை மாடலில் இருந்து பெறப்பட்டுள்ளது போன்றே உள்ளது. புதிய க்ரில் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட புதிய 3-பீம் எல்இடி பிரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் உள்ளிட்டவற்றுடன் முற்றிலும் ரீடிசைனிலான முன்பக்கத்தை 2022 எஸ்-கிராஸ் பெற்றுள்ளது.

ஒரே நேரத்தில் கேமிராவில் சிக்கிய புதிய & பழைய சுஸுகி எஸ்-கிராஸ் கார்கள்!! ஸ்பை படங்கள் வெளியீடு!

இதில் ஹெட்லேம்ப்களுடன் எல்இடி டிஆர்எல்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. ஹெட்லைட்கள் இரண்டும் தடிமனான க்ரோம்-ஆல் இணைக்கப்பட்டுள்ளன. இது காருக்கு ப்ரீமியம் தோற்றத்தை வழங்குகிறது. இவற்றுடன் சற்று பருத்த பம்பரை முன்பக்கத்தில் புதிய எஸ்-கிராஸ் எஸ்யூவி பெற்றுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள ஃபாக் விளக்குகளும் புதியவை.

ஒரே நேரத்தில் கேமிராவில் சிக்கிய புதிய & பழைய சுஸுகி எஸ்-கிராஸ் கார்கள்!! ஸ்பை படங்கள் வெளியீடு!

முன்பக்கத்திற்கு அடியில் சறுக்கு-தடுப்பு தட்டு சில்வர் நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. இது மற்ற கருப்பு நிற பாகங்களுடன் மிகவும் நேர்த்தியாக ஒத்து போகிறது. இதன் விளைவாக மிகவும் ஸ்போர்டியான தோற்றத்தில் அப்டேட் செய்யப்பட்ட எஸ்-கிராஸ் நம் கண்களுக்கு காட்சியளிக்கிறது. தற்போது வெளியாகியுள்ள ஸ்பை படங்களை சற்று உற்று பார்த்தால் பின்பக்கத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகள் பக்கவாட்டு பேனல்களில் பொருத்தப்பட்டுள்ளதை காண முடிகிறது.

ஒரே நேரத்தில் கேமிராவில் சிக்கிய புதிய & பழைய சுஸுகி எஸ்-கிராஸ் கார்கள்!! ஸ்பை படங்கள் வெளியீடு!

முன்பு இவை கதவு ஜன்னல்களில் பொருத்தப்பட்டு வந்த நிலையில், இந்த மாற்றம் நிச்சயம் காரின் காற்று இயக்கவியல் பண்பை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றும். மற்றப்படி 2022 எஸ்-கிராஸின் உட்புறத்தை காண முடியவில்லை. ஆனால் எப்படி இருந்தாலும், வெளிப்புறத்திற்கு ஏற்ப உட்புற கேபினையும் தற்கால மாடர்ன் தரத்தில் வழங்க சுஸுகி முயற்சிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஒரே நேரத்தில் கேமிராவில் சிக்கிய புதிய & பழைய சுஸுகி எஸ்-கிராஸ் கார்கள்!! ஸ்பை படங்கள் வெளியீடு!

புதிய எஸ்-கிராஸின் உட்புறத்தில் மிக முக்கிய புதிய அம்சமாக அதிநவீன ஓட்டுனர் உதவி அமைப்புகள் (ADAS) வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ADAS ஆனது வாகனம் ஒரே பாதையை பேண உதவும் வசதி, பார்க்கிங் உதவி, ரிவர்ஸில் வரும்போது குறுக்காக ஏதேனும் வாகனம் வந்தால் எச்சரிக்கும் வசதி, தானியங்கி அவசரகால பிரேக்கிங் மற்றும் தகவமைத்து கொள்ளக்கூடிய க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற பாதுகாப்பு அம்சங்களுக்கு வழிவகுக்கும்.

ஒரே நேரத்தில் கேமிராவில் சிக்கிய புதிய & பழைய சுஸுகி எஸ்-கிராஸ் கார்கள்!! ஸ்பை படங்கள் வெளியீடு!

சர்வதேச சந்தைகளில் இரு விதமான பெட்ரோல் என்ஜின் தேர்வுகளில் புதிய தலைமுறை எஸ்-கிராஸ் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 1.5 லிட்டர் கே15பி நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 104 பிஎச்பி மற்றும் 138 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

ஒரே நேரத்தில் கேமிராவில் சிக்கிய புதிய & பழைய சுஸுகி எஸ்-கிராஸ் கார்கள்!! ஸ்பை படங்கள் வெளியீடு!

மற்றொரு 1.4 லிட்டர் பூஸ்டர்ஜெட் டர்போசார்ஜ்டு என்ஜின் 127 பிஎச்பி மற்றும் 235 என்எம் டார்க் திறன் வரையில் காருக்கு வழங்கக்கூடியது. இவை இரண்டுடனும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு வழங்கப்பட உள்ளது. அதேநேரம் 1.5 லி NA பெட்ரோல் என்ஜின் உடன் கூடுதலாக 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வும், டர்போ-பெட்ரோல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வும் வழங்கப்பட உள்ளன.

Source: Instagram/suzukigarage

Most Read Articles
மேலும்... #சுஸுகி #suzuki
English summary
2022 Suzuki S Cross Spy Pics
Story first published: Tuesday, November 16, 2021, 1:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X