மற்ற லம்போர்கினி ஹூராகென் கார்களில் இருந்து புதிய எஸ்டிஓ எந்த விதத்தில் சிறந்தது? விலை தான் விண்ணை முட்டுது!!

லம்போர்கினி அதன் ஒட்டுமொத்த சூப்பர்-ஃபாஸ்ட் கார் தயாரிப்பில் கொண்டுள்ள அனுபவத்தில் உருவாக்கியுள்ள கார், ஹூராகென் சூப்பர் ட்ரோஃபியோ ஒமோலோகடா (STO).

மற்ற லம்போர்கினி ஹூராகென் கார்களில் இருந்து புதிய எஸ்டிஓ எந்த விதத்தில் சிறந்தது? விலை தான் விண்ணை முட்டுது!!

ரேஸ் கார்களான ஹூராகென் சூப்பர் ட்ரோஃபியோ எவோ மற்றும் ஜிடி3 எவோ ஆகியவற்றினால் கவரப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த அதிவேக ஹூராகென் காரை வாங்குவது அவ்வளவு எளியது கிடையாது.

மற்ற லம்போர்கினி ஹூராகென் கார்களில் இருந்து புதிய எஸ்டிஓ எந்த விதத்தில் சிறந்தது? விலை தான் விண்ணை முட்டுது!!

ஏனெனில் இந்த லம்போர்கினி காரின் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.4.99 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த காரில் அப்படி என்ன உள்ளது. எதனால் இது மற்ற லம்போர்கினி ஹூராகென் கார்களில் இருந்து சிறந்தது என்பது உள்ளிட்ட விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மற்ற லம்போர்கினி ஹூராகென் கார்களில் இருந்து புதிய எஸ்டிஓ எந்த விதத்தில் சிறந்தது? விலை தான் விண்ணை முட்டுது!!

தோற்றம்

ஸ்குவாட்ரா கோர்ஸ் ரேஸ்-கார்களால் கவரப்பட்டு உருவாக்கப்பட்டதால், இந்த எஸ்டிஓ கார் டிசைனிலும், என்ஜினியரிங்கிலும் தலைசிறந்த படைப்பாக விளங்குகிறது. லம்போர்கினியின் மோட்டார்ஸ்போர்ட்ஸ் பிரிவின் தொழிற்நுட்ப வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த லம்போர்கினி காரின் முன்பக்கத்தை ஒரே மரத்துண்டில் உருவாக்கியுள்ளனர்.

மற்ற லம்போர்கினி ஹூராகென் கார்களில் இருந்து புதிய எஸ்டிஓ எந்த விதத்தில் சிறந்தது? விலை தான் விண்ணை முட்டுது!!

இதனுடன் மைய ரேடியேட்டர் வழியாக காற்றை என்ஜினிற்கு வழங்கும் வகையிலான புதியதாக வடிவமைக்கப்பட்ட, பெரிய காற்று ஏற்பானை பெற்றுள்ள ஹூராகென் எஸ்டிஓ காரின் முன்பக்கத்தில் ஸ்பிளிட்டர் மற்றும் காற்று துளைகள், காற்றினால் வாகனத்தின் வேகம் குறைவதை தடுக்கும்.

மற்ற லம்போர்கினி ஹூராகென் கார்களில் இருந்து புதிய எஸ்டிஓ எந்த விதத்தில் சிறந்தது? விலை தான் விண்ணை முட்டுது!!

பின்பக்கத்தில் சூப்பர் டிரோஃபியோ எவோ ரேஸ் காரை போன்று என்.ஏ.சி.ஏ காற்று துளைகள் வழங்கப்படுகின்றன. முன்பக்கத்தில் காரை மேலும் கீழ்நோக்கி அழுத்தும் வகையில் பின்பக்கத்தில் வழங்கப்படும் மரப்பலகையின் வடிவமைப்பில் லம்போர்கினி நிறுவனம் மறுவேலை செய்துள்ளது.

மற்ற லம்போர்கினி ஹூராகென் கார்களில் இருந்து புதிய எஸ்டிஓ எந்த விதத்தில் சிறந்தது? விலை தான் விண்ணை முட்டுது!!

காற்றியக்கவியல் பண்பு

காற்று துளைகள், 3-நிலைகளில் அட்ஜெஸ்ட்மெண்ட்டை கொண்ட பின்பக்க-இறக்கை, சுறா துடுப்பு வடிவிலான ஆண்டென்னா உள்ளிட்டவை ஹூராகென் எஸ்டிஓ காரின் ஒட்டுமொத்த காற்றியக்கவியல் பண்பு மேம்பட்டிருப்பதற்கு முக்கிய காரணங்களாக விளங்குகின்றன.

மற்ற லம்போர்கினி ஹூராகென் கார்களில் இருந்து புதிய எஸ்டிஓ எந்த விதத்தில் சிறந்தது? விலை தான் விண்ணை முட்டுது!!

ஹூராகெனின் தோற்றம் புதிய எஸ்டிஓ வெர்சனிற்காக மறுசீரமைக்கப்பட்டுள்ளதால், காற்றோட்ட செயல்திறன் 37% மேம்பட்டுள்ளதாகவும், கீழ்நோக்கிய அழுத்தல் ஹூராகென் எவோவின் டாப் மாடலாக விளங்கும் எவோ பெர்ஃபார்மேண்ட்-ஐ காட்டிலும் சுமார் 53% அதிகரித்துள்ளதாகவும் லம்போர்கினி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மற்ற லம்போர்கினி ஹூராகென் கார்களில் இருந்து புதிய எஸ்டிஓ எந்த விதத்தில் சிறந்தது? விலை தான் விண்ணை முட்டுது!!

உட்புறம்

லம்போர்கினி ஹூராகென் எஸ்டிஓ காரின் 75 சதவீத வெளிப்பக்க பேனல்கள் கார்பன் ஃபைபரால் தயாரிக்கப்பட்டுள்ளன. அதேபோல் உட்புற கேபினிலும் ஸ்போர்ட்ஸ் இருக்கைகள், உட்புற கதவு பேனல்கள் உள்பட தரை பாய்கள் கூட கார்பன் ஃபைபரால் உருவாக்கப்பட்டுள்ளன.

மற்ற லம்போர்கினி ஹூராகென் கார்களில் இருந்து புதிய எஸ்டிஓ எந்த விதத்தில் சிறந்தது? விலை தான் விண்ணை முட்டுது!!

இந்த கார்பன் ஃபைபர் பாகங்களுக்கு அடுத்து அல்காண்ட்ராவால் வடிவமைக்கப்பட்டுள்ள கேபினின் உள்ளமைவு நம்மை வசீகரிக்கிறது. முழு டிஜிட்டல் ஓட்டுனர் திரை மற்றும் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை கேபினில் கொண்டுள்ள எஸ்டிஓ காரில் எஸ்டிஓ, ட்ரோஃபியோ & பியாஜியா என்ற மூன்று புதிய டிரைவ் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.

மற்ற லம்போர்கினி ஹூராகென் கார்களில் இருந்து புதிய எஸ்டிஓ எந்த விதத்தில் சிறந்தது? விலை தான் விண்ணை முட்டுது!!

என்ஜின் & டிரான்ஸ்மிஷன்

லம்போர்கினி ஹூராகென் எஸ்டிஓ காரில் 5.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் வி10 பெட்ரோல் என்ஜின் 7-ஸ்பீடு இரட்டை-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த பெட்ரோல் என்ஜினின் மூலம் அதிகப்பட்சமாக 630 பிஎச்பி மற்றும் 565 என்எம் டார்க் திறனை பெற முடியும்.

மற்ற லம்போர்கினி ஹூராகென் கார்களில் இருந்து புதிய எஸ்டிஓ எந்த விதத்தில் சிறந்தது? விலை தான் விண்ணை முட்டுது!!

இந்த ஹூராகென் காரில் 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 3 வினாடிகளில் எட்டிவிடலாம். 200kmph வேகத்தை அடைவதற்கு 9 வினாடிகள் ஆகும். ஹீராகென் எஸ்டிஓ காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 310கிமீ ஆகும்.

மற்ற லம்போர்கினி ஹூராகென் கார்களில் இருந்து புதிய எஸ்டிஓ எந்த விதத்தில் சிறந்தது? விலை தான் விண்ணை முட்டுது!!

ட்ரைவ்ட்ரெயின்

எஸ்டிஓ, பின்சக்கரங்களின் மூலம் இயங்கும் ஸ்போர்ட்ஸ் காராகும். காரின் எடையை குறைப்பதற்காக 4-சக்கர டிரைவ் சிஸ்டத்திற்காக பதிலாக பின்சக்கர-ட்ரைவிங்கை இந்த புதிய ஹூராகென் காரில் லம்போர்கினி நிறுவனம் கொண்டுவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
About super-fast Lamborghini Huracan STO, All you need to know.
Story first published: Sunday, July 25, 2021, 19:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X