அடடே இவ்ளே சீக்கிரம் வாங்கிட்டாரே... Lamborghini Huracan சூப்பர்காரை வாங்கியிருக்கும் இவரை யாருனு தெரியுதா?

பலரின் கனவு வாகனமாக பார்க்கப்படும் லம்போர்கினி ஹூராகேன் Lamborghini Huracan சூப்பர்காரை இளம் விளையாட்டு வீரர் தற்போது வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் யார்?, அவர் வாங்கியிருக்கும் சூப்பர் காரின் விலை எவ்வளவு? உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

அடடே இவ்ளே சீக்கிரம் வாங்கிட்டாரே... Lamborghini Huracan சூப்பர்காரை வாங்கியிருக்கும் இவரை யாருனு தெரியுதா?

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரைச் சேர்ந்தவர் விவான் கபூர். ட்ராப் ஷூட்டிங்கில் வளர்ந்து வரும் விளையாட்டு வீரரான இவர் மிக மிக விலையுயர்ந்த லம்போர்கினி ஹூராகேன் சூப்பர் காரை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகஸ்ட் மாதம் பெருவில் நடைபெற்ற சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு சம்மேளனத்தில் (International Shooting Sport Federation) பங்கேற்ற இவர் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

அடடே இவ்ளே சீக்கிரம் வாங்கிட்டாரே... Lamborghini Huracan சூப்பர்காரை வாங்கியிருக்கும் இவரை யாருனு தெரியுதா?

இதன் பின்னர் இவரின் புகழ் உச்சத்தை எட்டியது. இந்த நிலையிலேயே பச்சை நிற ஹூராகேன் எல்பி610-4 கார் மாடலை அவர் வாங்கியிருக்கின்றார். பெங்களூருவை மையமாகக் கொண்டு பயன்படுத்திய கார் விற்பனையாளரிடத்தில் இருந்து இந்த சூப்பர் காரை விவான் கபூர் வாங்கியிருக்கின்றார். அவர் வாங்கியிருக்கும் ஹூராகேன் டெல்லி பதிவெண்ணில் காட்சியளிப்பதை நம்மால் காண முடிகின்றது.

அடடே இவ்ளே சீக்கிரம் வாங்கிட்டாரே... Lamborghini Huracan சூப்பர்காரை வாங்கியிருக்கும் இவரை யாருனு தெரியுதா?

இக்காரையே விற்பனையாளர் விவானின் சொந்த ஊரான ஜெய்பூரில் டெலிவரி கொடுத்திருக்கின்றனர். இது ஓர் அனைத்து வீல் இயக்கம் கொண்ட சூப்பர் காராகும். இக்காரில் 5.2 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பயர்டு வி10 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் 7 ஸ்பீடு ட்யூவல் க்ளட்ச் தானியங்கி கியர்பாக்ஸில் இயங்கும். அதிகபட்சமாக 610 பிஎஸ் பவர் மற்றும் 560 என்எம் டார்க்கை திறன்களை இது வெளியேற்றும்.

அடடே இவ்ளே சீக்கிரம் வாங்கிட்டாரே... Lamborghini Huracan சூப்பர்காரை வாங்கியிருக்கும் இவரை யாருனு தெரியுதா?

இக்காரின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ரூ. 3.7 கோடிகள் ஆகும். பெங்களூருவில் ஆன்-ரோடில் இக்கார் ரூ. 4.8 கோடி வரை விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இத்தகைய விலை உயர்ந்த சூப்பர் காரை விவான் கபூர் பயன்படுத்திய கார்கள் சந்தையில் இருந்து வாங்கியிருக்கின்றார். அதேநேரத்தில், இதன் அடி நிலை வேரியண்ட் ரூ. 3 கோடிக்குள் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அது பின் வீல் இயக்கத்தை மட்டுமே கொண்டிருக்கும்.

அடடே இவ்ளே சீக்கிரம் வாங்கிட்டாரே... Lamborghini Huracan சூப்பர்காரை வாங்கியிருக்கும் இவரை யாருனு தெரியுதா?

விவான் கபூரைப் போல் அண்மையில் தங்க மகன் என்றழைக்கப்படும் நீரஜ் சோப்ரா, இந்தியாவில் தற்போது விற்பனையில் இல்லாத கார் மாடலை சமீபத்தில் வாங்கினார். ஃபோர்டு நிறுவனத்தின் மஸ்டாங் சூப்பர் காரை அவர் வாங்கினார். நீரஜ் சோப்ராவும், இக்காரை பயன்படுத்திய கார்கள் சந்தையிலேயே வாங்கினார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

அடடே இவ்ளே சீக்கிரம் வாங்கிட்டாரே... Lamborghini Huracan சூப்பர்காரை வாங்கியிருக்கும் இவரை யாருனு தெரியுதா?

ஃபோர்டு நிறுவனம் ஒட்டுமொத்த செயல்பாட்டையும் இந்தியாவில் நிறுத்தியிருக்கின்றது. உற்பத்தி மற்றும் விற்பனை என அனைத்தையும் நிறுவனம் நாட்டில் நிறுத்தியிருக்கின்றது. ஆகையால், நிறுவனத்தின் எந்தவொரு வாகன தயாரிப்பும் இந்தியாவில் தற்போது விற்பனைக்குக் கிடைக்காத நிலை நிலவுகின்றது.

அடடே இவ்ளே சீக்கிரம் வாங்கிட்டாரே... Lamborghini Huracan சூப்பர்காரை வாங்கியிருக்கும் இவரை யாருனு தெரியுதா?

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே நீரஜ் சோப்ரா செகண்டு ஹேண்ட் கார் மார்கெட்டில் ஃபோர்டு மஸ்டாங் காரை அவர் வாங்கினார். இந்த நிகழ்வு மிக மிக சமீபத்திலேயே அரங்கேறியது. இந்த நிலையிலேயே தற்போது விவான் கபூரின் லம்போர்கினி ஹூராகேன் கார் பற்றிய தகவல் வெளியாகியிருக்கின்றது.

அடடே இவ்ளே சீக்கிரம் வாங்கிட்டாரே... Lamborghini Huracan சூப்பர்காரை வாங்கியிருக்கும் இவரை யாருனு தெரியுதா?

இந்த தொடர் நிகழ்வுகள் இந்திய விளையாட்டு உலகையே பெருத்த ஆச்சரியத்தில் மூழ்க வைத்திருக்கின்றது. ஹூராகேன் கார்பன் ஃபைபர் மற்றும் உறுதியான அலுமினியத்தால் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இது உறுதியானது மட்டுமல்ல மிகவும் இலகுவானதும் கூட என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Ace shooter vivaan kapoor buys lamborghini huracan supercar
Story first published: Monday, November 29, 2021, 19:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X