பளபளனு காட்சியளிக்கும் 60 ஆண்டுகள் பழைய கார்... ரூ. 18,000 கொடுத்து வாங்கியதாம்! பிரபல நடிகர் நெகிழ்ச்சி!

பிரபல நடிகர் ஒருவர் அவரிடத்தில் இருக்கும் மிக பழமையான கார் குறித்த சுவாரஷ்ய தகவல்களை வீடியோ வாயிலாக பகிர்ந்திருக்கின்றார். அந்த கார்குறித்த முக்கிய விபரத்தைக் கீழே காணலாம், வாங்க.

பளபளனு காட்சியளிக்கும் 60 ஆண்டுகள் பழைய கார்... ரூ. 18,000 கொடுத்து வாங்கியதாம்! பிரபல நடிகர் நெகிழ்ச்சி!

பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த பழம் பெரும் நடிகர் தர்மேந்திரா. இவர் தன்னிடத்தில் இருக்கும் ஓர் பிரத்யேக கார் குறித்த சுவாரஷ்ய தகவல்களை வீடியோவாக இணையத்தில் பகிர்ந்திருக்கின்றார். அப்படி என்ன சிறப்புகளை அக்கார் கொண்டிருக்கின்றது?, எதற்காக ஓர் பழைய காரின் வீடியோவை அவர் பகிர்ந்திருக்கின்றார் என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

பளபளனு காட்சியளிக்கும் 60 ஆண்டுகள் பழைய கார்... ரூ. 18,000 கொடுத்து வாங்கியதாம்! பிரபல நடிகர் நெகிழ்ச்சி!

நடிகர் தர்மேந்திரா பிரதான், பயன்படுத்தி வரும் கார் மாடல்களில் ஃபியட் 1100 (Fiat 1100) மாடலும் ஒன்று. இந்த கார் குறித்த வீடியோவையே அவர் தற்போது இணையத்தின் வாயிலாக பகிர்ந்திருக்கின்றார். இந்த கார் 60 ஆண்டுகள் பழைய வாகனம் என நடிகர் குறிப்பிட்டிருக்கின்றார். இதுவே அவருடைய முதல் காரும் என தெரிவித்திருக்கின்றார். இந்த சென்டிமென்ட் காரணத்தினாலேயே தற்போது அக்கார் குறித்த வீடியோவை தர்மேந்திரா பகிர்ந்திருக்கின்றார்.

பளபளனு காட்சியளிக்கும் 60 ஆண்டுகள் பழைய கார்... ரூ. 18,000 கொடுத்து வாங்கியதாம்! பிரபல நடிகர் நெகிழ்ச்சி!

ஃபியட் 1100 காரை நடிகர் 1960ம் ஆண்டில் வாங்கியதாக கூறப்படுகின்றது.. மேலும், இந்த காரை அப்போது ரூ. 18 ஆயிரம் செலவு செய்து வாங்கியதாக கூறியிருக்கின்றார். இதுகுறித்த தகவலை அண்மையில் நடைபெற்ற தொலைக்காட்சி கலந்துரையாடலின்போது அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தகுந்தது. ரூ. 18 ஆயிரத்திற்கு ஓர் கார் என்பது மிகப் பெரிய விஷயம் என்றும் அவர் அப்பேட்டியின்போது பெருமிதம் கொண்டார்.

பளபளனு காட்சியளிக்கும் 60 ஆண்டுகள் பழைய கார்... ரூ. 18,000 கொடுத்து வாங்கியதாம்! பிரபல நடிகர் நெகிழ்ச்சி!

இத்துடன், இந்த கார் தன்னுடைய முதல் மற்றும் பிரியமான வாகனம் என்பதால் இந்த காரை தற்போதும் அவர் புதியது போல் பரமாரித்து வருகின்றார். ஆகையால், 1960 ஃபியட் 1100 கார் தற்போதும் பளபளவென காட்சியளிக்கின்றது. தொடர்ந்து, இந்த காரின் மீது அதிகம் காதல் கொண்டிருப்பதாகவும், அக்காரை தான் ஒரு போதும் விற்க மாட்டேன் என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

பளபளனு காட்சியளிக்கும் 60 ஆண்டுகள் பழைய கார்... ரூ. 18,000 கொடுத்து வாங்கியதாம்! பிரபல நடிகர் நெகிழ்ச்சி!

இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைத்த மிகவும் பிரபலமான கார் மாடல்களில் ஃபியட் 1100 கார் மாடலும் ஒன்று. இத்தாலி நாட்டை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ஃபியட் நிறுவனம் இந்தியாவில் பிரபலமடைய இந்த கார் மாடலும் ஓர் காரணம் ஆகும். குடும்பத்தினர்களுக்கு ஏற்ற வாகனமாக இது நாட்டில் விற்பனைக்கு வந்தது. ஆகையால், பலரின் முதல் காராக இது மாறியது.

பளபளனு காட்சியளிக்கும் 60 ஆண்டுகள் பழைய கார்... ரூ. 18,000 கொடுத்து வாங்கியதாம்! பிரபல நடிகர் நெகிழ்ச்சி!

தற்போது இக்காரின் மீதிருக்கும் மோகத்தின் காரணமாக பலர் நடிகர் தர்மேந்திர பிரதானைப் போல் பராமரித்து, பயன்படுத்தி வருகின்றனர். இந்த காரில் 1,089 சிசி திறன் கொண்ட 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது அதிகபட்சமாக 36 பிஎச்பி திறனை வெளிப்படுத்தக் கூடியது.

பளபளனு காட்சியளிக்கும் 60 ஆண்டுகள் பழைய கார்... ரூ. 18,000 கொடுத்து வாங்கியதாம்! பிரபல நடிகர் நெகிழ்ச்சி!

ஃபியட் 1100 கார் மும்பையின் கால் டாக்சியில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தகுந்தது. பழைய வாகனங்களின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டதால் தற்போது ஃபியட் 1100 காரே இல்லாத நிலை உருவாகியுள்ளது. ஆம், மும்பை கால் டாக்சி துறையில் இந்த காரே இல்லாத நிலை உருவாகியுள்ளது.

பளபளனு காட்சியளிக்கும் 60 ஆண்டுகள் பழைய கார்... ரூ. 18,000 கொடுத்து வாங்கியதாம்! பிரபல நடிகர் நெகிழ்ச்சி!

தர்மேந்திரா ஓர் மிக பெரிய கார் பிரியர் ஆவார். அவருடைய கார் நிறுத்துமிடத்தில் பல தரப்பட்ட கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் தொடங்கிய பல சொகுசு கார்கள் அவர் இடத்தில் இருக்கின்றது. மிகவும் விலையுயர்ந்த மற்றும் சொகுசு கார் மாடல்களில் ஒன்றான மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல் 500 காரும் அவரிடத்தில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

இதுமட்டுமின்றி, இவரின் குடும்பத்தினர் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் எஸ் 550, போர்ஷே 911, போர்ஷே கேயன்னே, ஹூண்டாய் சேன்டா எஃப்இ, ஆடி க்யூ5, பென்ஸ் எல் கிளாஸ், பிஎம்டபிள்யூ எக்ஸ்6, எக்ஸ் 5 மற்றும் பழைய பஜேரோ எஸ்எஃப்எக்ஸ் ஆகிய கார்களையும் பயன்படுத்தி வருகின்றனர்.

பளபளனு காட்சியளிக்கும் 60 ஆண்டுகள் பழைய கார்... ரூ. 18,000 கொடுத்து வாங்கியதாம்! பிரபல நடிகர் நெகிழ்ச்சி!

ஃபியட் 1100 காரை புதியது போல் வைத்திருக்கவும், தற்போதும் இயங்கும் நிலையில் வைத்திருக்கவும் அதிக பராமரிப்பை நடிகர் வழங்கி வருகின்றார். எனவேதான் 60 ஆண்டுகளைக் கடந்தும் அக்கார் புதியது போல் காட்சியளிக்கின்றது. மேலும், இந்த காரை தனது குடும்பத்தினர்களில் ஒருவரைப் போல் நடிகர் பார்த்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Actor dharmendra shares video about fiat 1100 car
Story first published: Thursday, October 14, 2021, 17:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X