Ford Ecosport காரைபோல் இந்தியாவை விட்டு வெளியேறும் பிரபல கார் மாடல்... இப்படியோ போன என்ன ஆகுறது?

Ford நிறுவனம் ஒட்டுமொத்தமாக Ecosport கார் மாடலை இந்திய சந்தையில் இருந்து வெளியேற்றியதைப் போல Skoda நிறுவனம் அதன் பிரபல கார் மாடலின் குறிப்பிட்ட வேரியண்டை (தேர்வை) மட்டும் இந்திய சந்தையில் இருந்து வெளியேற்ற இருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த முக்கிய தகவலைக் கீழே காணலாம், வாங்க.

Ford Ecosport காரைபோல் இந்தியாவை விட்டு வெளியேறும் பிரபல கார் மாடல்... இப்படியோ போன என்ன ஆகுறது?

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு (Ford) அண்மையில் இந்திய சந்தையை விட்டு வெளியேற இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் தொடர் விற்பனை சரிவு நிறுவனம் சந்தையை விட்டு வெளியேற மிக முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.

Ford Ecosport காரைபோல் இந்தியாவை விட்டு வெளியேறும் பிரபல கார் மாடல்... இப்படியோ போன என்ன ஆகுறது?

இதன் வெளியேற்றத்தைத் தொடர்ந்து அதன் புகழ்மிக்க கார் மாடல்களில் ஒன்றான ஈகோஸ்போர்ட் (Ecosport) இன் விற்பனையை இந்தியாவில் நிறுத்தப்படுவதாக நிறுவனம் அறிவித்தது. இந்த அறிவிப்பு ஈகோஸ்போர்ட் கார் பிரியர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Ford Ecosport காரைபோல் இந்தியாவை விட்டு வெளியேறும் பிரபல கார் மாடல்... இப்படியோ போன என்ன ஆகுறது?

ஃபோர்டு ஈகோஸ்போர்ட் அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்ட ஓர் முக்கியமான கார் மாடலாகும். இந்த கார் விபத்துகளின்போது பல உயிர்களைக் காப்பாற்றிய வரலாறு உண்டு. எனவேதான் இதன் வெளியேற்றத்தைக் கண்டு கலங்கி நிற்கின்றனர். அதேவேலையில், இந்த காருக்கு நல்ல டிமாண்ட் கிடைக்காதது வேதனையளிக்கும் ஓர் தகவலாக இருக்கின்றது.

Ford Ecosport காரைபோல் இந்தியாவை விட்டு வெளியேறும் பிரபல கார் மாடல்... இப்படியோ போன என்ன ஆகுறது?

இதன் விளைவாகவே புதுப்பிக்கப்பட்ட ஈகோஸ்போர்ட் இந்தியாவிற்கு வர இருப்பதாக கூறப்பட்டு வந்தநிலையில், இதன் வருகை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதை உணர்ந்து நிறுவனம் ஈகோஸ்போர்ட்டின் வர்த்தகத்தை நிறுத்துவதாக அறிவித்தது.

Ford Ecosport காரைபோல் இந்தியாவை விட்டு வெளியேறும் பிரபல கார் மாடல்... இப்படியோ போன என்ன ஆகுறது?

ஃபோர்டு நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் ஏற்பட்ட அதிர்ச்சியே இன்னும் நீங்காத நிலையில் தற்போது மற்றுமொரு ஓர் நிறுவனத்தின் பிரபல கார் மாடலின் குறிப்பிட்ட வேரியண்ட் சந்தையை விட்டு வெளியேற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Ford Ecosport காரைபோல் இந்தியாவை விட்டு வெளியேறும் பிரபல கார் மாடல்... இப்படியோ போன என்ன ஆகுறது?

ஸ்கோடா (Skoda) நிறுவனத்தின் ரேபிட் ரைடர் ப்ளஸ் (Rapid Rider Plus) வேரியண்டே இந்திய சந்தையில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கின்றது. ஆகையால், இவ்வேரியண்ட் இனி இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்காது என்ற நிலை உருவாகியுள்ளது.

Ford Ecosport காரைபோல் இந்தியாவை விட்டு வெளியேறும் பிரபல கார் மாடல்... இப்படியோ போன என்ன ஆகுறது?

இந்த வேரியண்டை நிறுவனம் கடந்த ஆண்டுதான் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ஆனால், துரதிரஷ்டவசமாக பெரியளவில் மக்களைக் கவர முடியாமல் வந்த வேகத்திலேயே சந்தையை விட்டு அது வெளியேற்றப்பட்டிருக்கின்றது. இவ்வேரியண்டின் விலை ரூ. 7.99 ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே.

Ford Ecosport காரைபோல் இந்தியாவை விட்டு வெளியேறும் பிரபல கார் மாடல்... இப்படியோ போன என்ன ஆகுறது?

ரேபிட் ரைடர் வேரியண்டிற்கு மேலே இருக்கும் இடத்தை பூர்த்தி செய்யும் வகையில் இக்கார் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. இது ரேபிட் வரிசையில் ஓர் பேஸ் வேரியண்டாக காட்சியளித்து வந்தது. பேஸ் வேரியண்டாக இருந்தாலும் கவர்ச்சிகரமான அம்சங்கள் பல இதில் இருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது.

Ford Ecosport காரைபோல் இந்தியாவை விட்டு வெளியேறும் பிரபல கார் மாடல்... இப்படியோ போன என்ன ஆகுறது?

6.5 இன்சிலான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்மார்ட் லிங்க் இணைப்பு வசதி, தானியங்கி க்ளைமேட் கன்ட்ரோல் வசதி, ட்யூவல் டோன் இன்டீரியர் தீம் மற்றும் மடித்துக் கொள்ளக் கூடிய ஆர்ம் ரெஸ்ட் உள்ளிட்ட வசதிகளை இவ்வேரியண்டில் ஸ்கோடா நிறுவனம் வழங்கியது.

Ford Ecosport காரைபோல் இந்தியாவை விட்டு வெளியேறும் பிரபல கார் மாடல்... இப்படியோ போன என்ன ஆகுறது?

இதில், 6.5 இன்சில் வழங்கப்பட்ட தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் மிக முக்கியமான அம்சங்களான ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதியும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமாதிரியான சிறப்பம்சங்களில் மட்டுமில்லைங்க இக்கார் நிறங்கள் மற்றும் அலங்கரிப்பு விஷயத்திலும் மிக சிறந்த தேர்வாகவே இருந்தது.

Ford Ecosport காரைபோல் இந்தியாவை விட்டு வெளியேறும் பிரபல கார் மாடல்... இப்படியோ போன என்ன ஆகுறது?

அந்தவகையில், கருப்பு நிறத்தினாலான கிரில், லிப் ஸ்பாய்லர், கருப்பு நிறத்திலான பி பில்லர், இரட்டை ஏர் பேக், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் உயரத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய இருக்கை பெல்டுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. நிற தேர்வாக கேண்டி வெள்ளை, கார்பன் ஸ்டீல், பிரில்லியன்ட் சில்வர் மற்றும் டாஃபி பிரவுண் உள்ளிட்ட வண்ண தேர்வுகள் வழங்கப்பட்டன.

Ford Ecosport காரைபோல் இந்தியாவை விட்டு வெளியேறும் பிரபல கார் மாடல்... இப்படியோ போன என்ன ஆகுறது?

டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே இவ்வேரியண்ட் விற்பனைக்குக் கிடைத்தது. இந்த 1.0 லிட்டர் எஞ்ஜின் அதிகபட்சமாக 109 பிஎச்பி மற்றும் 175 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. சிக்ஸ் ஸ்பீடு மேனுவல் அல்லது சிக்ஸ் ஸ்பீடு தானியங்கி ஆகிய கியர்பாக்ஸ் தேர்வுகளும் இவ்வேரியண்டில் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது.

Ford Ecosport காரைபோல் இந்தியாவை விட்டு வெளியேறும் பிரபல கார் மாடல்... இப்படியோ போன என்ன ஆகுறது?

இத்தகைய சிறப்பான வேரியண்டையே ஸ்கோடா நிறுவனம் தற்போது இந்திய சந்தையில் இருந்து வெளியேற்றியிருக்கின்றது. ஃபோர்டு ஈகோஸ்போர்ட் கார் வெளியான ஒரு சில நாட்களிலேயே இது வெளியேறி இருப்பது வாகன ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
After ford ecosport skoda rapid rider plus variant discontinued from india full details
Story first published: Saturday, September 18, 2021, 18:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X