24 மணி நேரத்தில் 1,603 கிமீ தூரம் பயணம்... இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்த முதல் டாடா கார்...

டாடா நிறுவனத்தின் கார் ஒன்று இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்ககலாம்.

24 மணி நேரத்தில் 1,603 கிமீ தூரம் பயணம்... இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்த முதல் டாடா கார்...

டாடா நிறுவனம் விற்பனைச் செய்து வரும் அதிக பாதுகாப்புமிக்க கார்களில் அல்ட்ராஸ் மாடலும் ஒன்று. இந்த காரைக் கொண்டே புனேவைச் சேர்ந்த ஓர் இளைஞர் புதிய பதிவை (New Record) செய்திருக்கின்றார். இந்த சம்பவம் டாடா அல்ட்ராஸ் கார் பயனர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

24 மணி நேரத்தில் 1,603 கிமீ தூரம் பயணம்... இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்த முதல் டாடா கார்...

மஹாராஷ்டிரா மாநிலம், புனேவைச் சேர்ந்த தவ்ஜீத் சஹா. இவர் 24 மணி நேரம் தொடர்ச்சியாக டாடா அல்ட்ராஸ் காரில் பயணித்து 1,603 கிமீ தூரத்தைக் கடந்திருக்கின்றார். இந்த செயலுக்காகவே இவர் இந்தியா ரெக்கார்ட் புத்தகத்தில் இவர் இடம் பிடித்திருக்கின்றார். இதுவரை யாரும் டாடா அல்ட்ராஸ் காரில் செய்யாத ஓர் செயலாக இது பார்க்கப்படுகின்றது.

24 மணி நேரத்தில் 1,603 கிமீ தூரம் பயணம்... இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்த முதல் டாடா கார்...

அதாவது, 24 மணி நேரத்தில் 1,603 என்ற அதிகபட்ச கிமீ தூரத்தை கடப்பது இதுவே முதல் முறையாகும். மஹாராஷ்டிரா மாநிலம், சடாரா பகுதியில் இருந்து புறப்பட்ட அவர் பெங்களூருவை வந்து சேர்ந்திருக்கின்றார். மீண்டும் பெங்களூருவில் இருந்து புறப்பட்டு புனேவிற்கு திரும்பியிருக்கின்றார். இந்த இலக்குகளையே அவர் 24 மணி நேரத்தில் கடந்து புதிய பதிவை செய்திருக்கின்றார்.

24 மணி நேரத்தில் 1,603 கிமீ தூரம் பயணம்... இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்த முதல் டாடா கார்...

இந்த இடைநில்லா பயணத்தின்போது சிறு கோளாறைக்கூட தான் சந்திக்கவில்லை என தவ்ஜூத் சஹா கூறியுள்ளார். குறிப்பிட்டு கூற வேண்டுமானால், தான் சிறு களைப்பையோ அல்லது எஞ்ஜின் கோளாறையே துளியளவுகூட பெறவில்லை என அவர் தெரிவித்திருக்கின்றார். எனவேதான் இந்த பயணம் பற்றிய தகவல் பலரைக் கவர்ந்த வண்ணம் இருக்கின்றது.

24 மணி நேரத்தில் 1,603 கிமீ தூரம் பயணம்... இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்த முதல் டாடா கார்...

இந்த நிகழ்வை தவ்ஜூத் மட்டுமின்றி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கொண்டாடத் தொடங்கியிருக்கின்றது. அல்ட்ராஸ் கார் எந்த மாதிரியான சூழ்நிலையாக இருந்தாலும் சமாளிக்கும் என்பதை நிரூபித்திருப்பதாக நிறுவனம் கூறுகின்றது. தொடர்ந்து, "தவ்ஜூத் அல்ட்ராஸ் காரை பயன்படுத்தி இந்த அசாத்திய திறன் பற்றிய தகவலை வெளிப்படுத்தியதற்கு நாங்கள் மிகவும் பெருமை கொள்கின்றோம்" என்றும் கூறியிருக்கின்றது.

24 மணி நேரத்தில் 1,603 கிமீ தூரம் பயணம்... இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்த முதல் டாடா கார்...

டாடா நிறுவனம் இந்த காரை 2020 ஜனவரி மாதத்திலேயே இந்தியாவில் முதல் முறையாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது ஓர் ஐந்து நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற காராகும். இக்காரை அதிக பிரீமியம் வசதிக் கொண்ட ஹேட்ச்பேக் கார் பிரிவில் விற்பனைச் செய்து வருகின்றது டாடா மோட்டார்ஸ்.

24 மணி நேரத்தில் 1,603 கிமீ தூரம் பயணம்... இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்த முதல் டாடா கார்...

இதன் சூப்பர் திறன் மற்றும் அதிக சொகுசு வசதிகள் உள்ளிட்டவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற காரணமாக அமைந்துள்ளது. இக்கார், சமீபத்திய அறிமுகமான ஹூண்டாய் ஐ20 காருக்கு போட்டியளிக்கும் வகையில் விற்பனையில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

24 மணி நேரத்தில் 1,603 கிமீ தூரம் பயணம்... இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்த முதல் டாடா கார்...

பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான எஞ்ஜின் தேர்விலும் இக்கார் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. ரூ. 5.69 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
After Reaches 1,603 KM's In 24 Hours Tata Altroz Makes It To 'India Book Of Records'... Read In Tamil.
Story first published: Wednesday, February 17, 2021, 16:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X