டாடா சஃபாரிக்கு போட்டி! ஹூண்டாய் கிரெட்டா 7 சீட்டர் வெர்ஷனின் அதிகாரப்பூர்வ பெயர் அறிவிப்பு! என்னனு தெரியுமா?

ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி காரின் 7 சீட்டர் வெர்ஷனின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டாடா சஃபாரிக்கு போட்டி! ஹூண்டாய் கிரெட்டா 7 சீட்டர் வெர்ஷனின் அதிகாரப்பூர்வ பெயர் அறிவிப்பு! என்னனு தெரியுமா?

இந்தியாவில் அதிகம் விற்பனையாகி வரும் எஸ்யூவி கார்களில் ஒன்றான கிரெட்டாவின் அடிப்படையில் உருவாகி வரும் 7 சீட்டர் எஸ்யூவியின் அதிகாரப்பூர்வ பெயரை ஹூண்டாய் நிறுவனம் இன்று (பிப்ரவரி 24) அறிவித்துள்ளது. விரைவில் விற்பனைக்கு வரவுள்ள இந்த புதிய 7 சீட்டர் எஸ்யூவிக்கு அல்காசர் (Alcazar) என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

டாடா சஃபாரிக்கு போட்டி! ஹூண்டாய் கிரெட்டா 7 சீட்டர் வெர்ஷனின் அதிகாரப்பூர்வ பெயர் அறிவிப்பு! என்னனு தெரியுமா?

ஹூண்டாய் கிரெட்டாவின் 7 சீட்டர் வெர்ஷன், அல்காசர் என்ற பெயரில்தான் வரும் என்பது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். மூன்று வரிசை இருக்கை அமைப்புடன் விற்பனைக்கு வரவுள்ள இந்த புதிய எஸ்யூவி, பிரீமியம் மாடலாக நிலைநிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. டூஸானுக்கு கீழாகவும், 5 சீட்டர் கிரெட்டாவிற்கு சற்று மேலாகவும் இந்த புதிய எஸ்யூவி நிலைநிறுத்தப்படலாம்.

டாடா சஃபாரிக்கு போட்டி! ஹூண்டாய் கிரெட்டா 7 சீட்டர் வெர்ஷனின் அதிகாரப்பூர்வ பெயர் அறிவிப்பு! என்னனு தெரியுமா?

இந்திய சந்தையில் ஹூண்டாய் அல்காசர் எஸ்யூவி, 11.50 லட்ச ரூபாய் முதல் 19 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் (எக்ஸ் ஷோரூம்) விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் விற்பனைக்கு வந்த டாடா சஃபாரி, எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மற்றும் விற்பனைக்கு வரவுள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி500 உள்ளிட்ட கார்களுடன் ஹூண்டாய் அல்காசர் போட்டியிடும்.

டாடா சஃபாரிக்கு போட்டி! ஹூண்டாய் கிரெட்டா 7 சீட்டர் வெர்ஷனின் அதிகாரப்பூர்வ பெயர் அறிவிப்பு! என்னனு தெரியுமா?

ஹூண்டாய் அல்காசர் 'மேட் இன் இந்தியா' தயாரிப்பு மட்டும் கிடையாது. இந்தியாவிற்காக முதலில் உருவாக்கப்படும் தயாரிப்பு என்ற பெருமையையும் இது பெறுகிறது. அல்காசர் எஸ்யூவி வெகு விரைவில் இந்தியாவில் வைத்து உலகளவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்படும் என்பதை ஹூண்டாய் உறுதி செய்துள்ளது.

டாடா சஃபாரிக்கு போட்டி! ஹூண்டாய் கிரெட்டா 7 சீட்டர் வெர்ஷனின் அதிகாரப்பூர்வ பெயர் அறிவிப்பு! என்னனு தெரியுமா?

ஆனால் இந்த செய்தி எழுதப்பட்டு கொண்டிருந்த சமயத்தில், அதிகாரப்பூர்வ தேதி எதுவும் வெளியாகவில்லை. சமீப காலமாக ஏராளமான முன்னணி நிறுவனங்கள், எஸ்யூவி கார்களை இந்தியாவில் வைத்துதான் உலக அளவிலான பொது பார்வைக்கு கொண்டு வந்து கொண்டுள்ளன. ஹூண்டாய் அல்காசரும் அதே பாணியில் வெளிவரவுள்ளது.

டாடா சஃபாரிக்கு போட்டி! ஹூண்டாய் கிரெட்டா 7 சீட்டர் வெர்ஷனின் அதிகாரப்பூர்வ பெயர் அறிவிப்பு! என்னனு தெரியுமா?

அத்துடன் வழக்கமான 5 சீட்டர் மிட்-சைஸ் எஸ்யூவிக்களின் 7 சீட்டர் வெர்ஷன்களுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது. இந்த போக்கிற்கு ஏற்ப ஹூண்டாய் விரைவாக மாறி கொண்டதிலும் ஆச்சரியம் இல்லை. ஹூண்டாய் கிரெட்டாவின் அதே 2,610 மிமீ என்ற வீல்பேஸ் நீளத்தைதான் அல்காசரும் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா சஃபாரிக்கு போட்டி! ஹூண்டாய் கிரெட்டா 7 சீட்டர் வெர்ஷனின் அதிகாரப்பூர்வ பெயர் அறிவிப்பு! என்னனு தெரியுமா?

ஆனால் மூன்றாவது வரிசை இருக்கைகள் வழங்கப்படுவதால், ஹூண்டாய் கிரெட்டாவை விட அல்காசர் நீளமாகவும், உயரமாகவும் இருக்கலாம். அதேபோல் 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் வெர்ஷன்களில் ஹூண்டாய் அல்காசர் விற்பனைக்கு வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 6 சீட்டர் மாடலின் இரண்டாவது வரிசையில் கேப்டன் இருக்கைகள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டாடா சஃபாரிக்கு போட்டி! ஹூண்டாய் கிரெட்டா 7 சீட்டர் வெர்ஷனின் அதிகாரப்பூர்வ பெயர் அறிவிப்பு! என்னனு தெரியுமா?

அத்துடன் புதிய எல்இடி டெயில்லேம்ப்களுடன் பின் பகுதி மாற்றியமைக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஹூண்டாய் கிரெட்டாவிடம் இருந்து வேறுபடுத்தி காட்டும் வகையிலும் முன்பகுதியிலும் சிறிய மாற்றங்கள் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஹூண்டாய் அல்காசர் தற்போது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

டாடா சஃபாரிக்கு போட்டி! ஹூண்டாய் கிரெட்டா 7 சீட்டர் வெர்ஷனின் அதிகாரப்பூர்வ பெயர் அறிவிப்பு! என்னனு தெரியுமா?

கிரெட்டாவில் உள்ள அதே 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆகிய இன்ஜின் தேர்வுகள்தான் அல்காசரிலும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. கிரெட்டாவில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 115 பிஎஸ் பவரையும், 144 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் வகையிலும், 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் 115 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் வகையிலும் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

டாடா சஃபாரிக்கு போட்டி! ஹூண்டாய் கிரெட்டா 7 சீட்டர் வெர்ஷனின் அதிகாரப்பூர்வ பெயர் அறிவிப்பு! என்னனு தெரியுமா?

அதே நேரத்தில் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 140 பிஎஸ் பவரையும், 242 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியதாக உள்ளது. இதே இன்ஜின் தேர்வுகள், இதே ட்யூனிங் உடன் அல்காசரிலும் வழங்கப்படலாம். அத்துடன் பல்வேறு டிரான்ஸ்மிஷன் தேர்வுகளும் எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் கிரெட்டாவை போல், அல்காசரிலும் வசதிகளுக்கு பஞ்சமிருக்காது என நம்பலாம்.

Most Read Articles
English summary
Alcazar: 7-Seater Creta SUV Gets Official Name From Hyundai - Here Are All The Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X