வித்தியாசமான தோற்றத்தில் புதிய ஈக்கோஸ்போர்ட் காரை கொண்டுவரும் ஃபோர்டு!! மார்ச் 3ல் அறிமுகம்?

2021 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டின் புதிய எஸ்இ வேரியண்ட்டின் டீசர் படம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதனை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

வித்தியாசமான தோற்றத்தில் புதிய ஈக்கோஸ்போர்ட் காரை கொண்டுவரும் ஃபோர்டு!! மார்ச் 3ல் அறிமுகம்?

இந்திய சந்தையில் ஈக்கோஸ்போர்ட் வரிசை கார்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக புதிய எஸ்இ வேரியண்ட்டை கொண்டுவர ஃபோர்டு இந்தியா நிறுவனம் ஆயத்தமாகி வருகிறது.

வித்தியாசமான தோற்றத்தில் புதிய ஈக்கோஸ்போர்ட் காரை கொண்டுவரும் ஃபோர்டு!! மார்ச் 3ல் அறிமுகம்?

தற்போது டீசர் படம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் முன்னதாக இந்த புதிய வேரியண்ட்டின் ஸ்பை படங்களும் டீலர்ஷிப் வளாகத்தில் இருந்து வெளியாகி இருந்தன. அவற்றின் மூலம் வழக்கமான ஈக்கோஸ்போர்ட் கார்களில் இருந்து இந்த புதிய வேரியண்ட் சில மாறுபாடுகளை தோற்றத்தில் பெற்றுவரவுள்ளதை பார்த்திருந்தோம்.

வித்தியாசமான தோற்றத்தில் புதிய ஈக்கோஸ்போர்ட் காரை கொண்டுவரும் ஃபோர்டு!! மார்ச் 3ல் அறிமுகம்?

குறிப்பாக பின்பக்கத்தில் வழங்கப்படும் ஸ்பேர் சக்கரம் புதிய எஸ்இ வேரியண்ட்டில் வழங்கப்பட போவதில்லை. இதனால் ஸ்பேர் சக்கரம் வழங்கப்படும் இடத்திற்கு நம்பர் ப்ளேட் நகர்த்தப்பட, ஃபாக்ஸ் பேஷ் தட்டு உடன் பின்பக்க பம்பர் சில்வர் நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டிருந்தது.

வித்தியாசமான தோற்றத்தில் புதிய ஈக்கோஸ்போர்ட் காரை கொண்டுவரும் ஃபோர்டு!! மார்ச் 3ல் அறிமுகம்?

இவை தவிர்த்து ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் வரிசையில் டைட்டானியம் மற்றும் ஸ்போர்ட்ஸ் ட்ரிம்களுக்கு மத்தியில் நிலைநிறுத்தப்படவுள்ள இந்த புதிய எஸ்இ வேரியண்ட்டின் டிசைனில் பெரிய அளவில் வேறெந்த மாற்றத்தையும் பார்க்க முடியவில்லை.

வித்தியாசமான தோற்றத்தில் புதிய ஈக்கோஸ்போர்ட் காரை கொண்டுவரும் ஃபோர்டு!! மார்ச் 3ல் அறிமுகம்?

இதற்கிடையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசர் படம் இந்த புதிய வேரியண்ட் ஈக்கோஸ்போர்ட்டின் வழக்கமான டாப் எஸ் (ஸ்போர்ட்ஸ்) ட்ரிம்மின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்ற தகவலை நமக்கு தெரியப்படுத்தும் விதமாக உள்ளது.

வித்தியாசமான தோற்றத்தில் புதிய ஈக்கோஸ்போர்ட் காரை கொண்டுவரும் ஃபோர்டு!! மார்ச் 3ல் அறிமுகம்?

டாப் ட்ரிம்-இன் அடிப்படையில் உருவாக்கப்பட்டாலும், சமீபத்தில் வெளியாகி இருந்த ஸ்பை படங்களில் புதிய எஸ்இ வேரியண்ட்டில் கருப்பு நிற அலாய் சக்கரங்களையோ அல்லது கருப்பு நிற மேற்கூரையையோ பார்க்க முடியவில்லை. இதனை இந்த புதிய டீசர் படத்திலும் பார்க்கலாம்.

வித்தியாசமான தோற்றத்தில் புதிய ஈக்கோஸ்போர்ட் காரை கொண்டுவரும் ஃபோர்டு!! மார்ச் 3ல் அறிமுகம்?

மற்றப்படி உட்புற கேபினில் வழங்கப்படும் தொழிற்நுட்ப அம்சங்களிலும், என்ஜின் தேர்வுகளிலும் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை. இந்திய சந்தையில் இரு என்ஜின் தேர்வுகளுடன் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வித்தியாசமான தோற்றத்தில் புதிய ஈக்கோஸ்போர்ட் காரை கொண்டுவரும் ஃபோர்டு!! மார்ச் 3ல் அறிமுகம்?

இதில் ஒன்றான 1.5 லிட்டர், நேச்சுரலி அஸ்பிரேட்டட், இன்லைன்-3 பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 123 பிஎஸ் மற்றும் 149 என்எம் டார்க் திறனையும், மற்றொன்றான 1.5 லிட்டர், டர்போசார்ஜ்டு, இன்லைன்-4 டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 100 பிஎஸ் மற்றும் 215 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டவைகளாக உள்ளன.

வித்தியாசமான தோற்றத்தில் புதிய ஈக்கோஸ்போர்ட் காரை கொண்டுவரும் ஃபோர்டு!! மார்ச் 3ல் அறிமுகம்?

இவை இரண்டுடனும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் நிலையாக வழங்கப்பட, பெட்ரோல் என்ஜின் உடன் மட்டும் கூடுதல் தேர்வாக 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. நமக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி பார்க்கும்போது 2021 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்இ வேரியண்ட் இந்தியாவில் நாளை (மார்ச் 3) அறிமுகப்படுத்தப்படலாம்.

Most Read Articles

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
2021 Ford EcoSport SE Officially Teased, Launch Likely On 3rd March
Story first published: Tuesday, March 2, 2021, 12:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X