Just In
- 6 hrs ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 8 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 10 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 10 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…
- News
ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
2021 ஜீப் காம்பஸ் காரின் விபரங்கள் அறிமுகத்திற்கு முன்னதாக இணையத்தில் கசிந்துள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் வருகிற ஜனவரி 27ஆம் தேதி அறிமுகமாக அனைத்து விதங்களிலும் தயாராகி வருகிறது. அதற்கு முன்னதாகதான் தற்போது இந்த ஃபேஸ்லிஃப்ட் காரை பற்றிய விபரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

டீம்பிஎச்பி செய்திதளம் மூலமாக கிடைத்துள்ள இது தொடர்பான படங்கள் அப்டேட் செய்யப்பட்ட காம்பஸ் எஸ்யூவி ஸ்போர்ட்ஸ், லாங்கிட்யூட், லிமிடெட், லிமிடெட் (ஒ) மற்றும் புதிய எஸ் என்ற ஐந்து விதமான வேரியண்ட்களில் சந்தைப்படவுள்ளதை உறுதிப்படுத்துகின்றன.

காம்பஸ் - ஸ்போர்ட்ஸ்
தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி பார்க்கும்போது, ஜீப் காம்பஸின் ஆரம்ப நிலை வேரியண்ட் 17 இன்ச் அலாய் சக்கரங்கள், ஒளி பிரதிப்பலிக்கும் எல்இடி ஹெட்லேம்ப்கள், சுறா துடுப்பு வடிவிலான ஆண்டெனா, எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பின்பக்கம் பார்க்க உதவும் பக்கவாட்டு கண்ணாடிகள் மற்றும் டீஃபாக்கர் உடன் பின்பக்கத்தில் வைபர் உள்ளிட்டவற்றை பெற்றுவரவுள்ளது.

விலை குறைவான 2021 காம்பஸின் உட்புறத்தில் ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான், ப்ரீமியத்தில் கருப்பு நிற ஃபாப்ரிக் உள்ளமைவு, 4 பவர் ஜன்னல்கள், யு கனெக்ட் உடன் ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியை கொண்ட 8.4 இன்ச்சில் புதிய தொடுத்திரை, 3.5 இன்ச்சில் ஓட்டுனருக்கு தேவையான தகவல்களை வழங்கக்கூடிய திரை, மேனுவல் ஏசி மற்றும் 4 ஸ்பீக்கர்கள் முதலியவை பொருத்தப்படவுள்ளன.

இந்த வேரியண்ட்டில் பயணிகளின் பாதுகாப்பு அம்சங்களாக 2 காற்றுப்பைகள், இபிடியுடன் ஏபிஎஸ், பின்பக்க பார்க்கிங் கேமிரா, ஆட்டோ எலக்ட்ரிக் பார்க்கிங் ப்ரேக்குகள், 4 சேனல் ஏபிஎஸ் உடன் 4 டிஸ்க் ப்ரேக்குகள், மழை நேரங்களில் ப்ரேக் உதவி வசதி மற்றும் எலக்ட்ரிக்கல் ரோல்-ஓவர் மைடிகேஷன் உள்ளிட்டவை வழங்கப்படவுள்ளன. இவற்றுடன் ப்ரேக் ஃபைலியரை தடுக்கும் ஹைட்ராலிக் பூஸ்ட், டைனாமிக் ஸ்டேரிங் டார்க் மற்றும் ட்ராக்ஷன் கண்ட்ரோல் போன்ற வசதிகளையும் புதிய காம்பஸ் ஸ்போர்ட்ஸ் வேரியண்ட் பெற்றுவரவுள்ளது.

காம்பஸ் - லாங்கிட்யூட்
இந்த வேரியண்ட்டில் ஸ்போர்ட்ஸின் வசதிகளுடன் கூடுதலாக புஷ்-பொத்தான் ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம், மேற்கூரையில் ரெயில்கள், வானின் நீல நிறத்தில் உட்புறம், 7 இன்ச்சில் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 6 ஸ்பீக்கர்கள் மற்றும் எல்இடி மூடுபனி விளக்குகள் உள்ளிட்டவையும் கொடுக்கப்படவுள்ளன.

காம்பஸ் - லிமிடெட்
இந்த வேரியண்ட்டில் கூடுதலாக ஆட்டோ ஹோல்ட் (ஆட்டோமேட்டிக் காருக்கு மட்டும்), 4x4-இல் மலை தொடர்களுக்கான கண்ட்ரோல், ஞாபக வசதியுடன் 12 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, எலக்ட்ரோக்ரோமிக் கண்ணாடி, தன்னிச்சையாக டிம் ஆக கூடிய ஹெட்லேம்ப்கள், 6 காற்றுப்பைகள் மற்றும் மழை வருவதை உணர்ந்து செயல்படும் வைபர்கள் முதலியவை காரின் வெளிப்புறத்தில் வழங்கப்படவுள்ளன.

இவை மட்டுமின்றி மெக்கென்ஸ் லெதர் உள்ளமைவு, 18 இன்ச்சில் அலாய் சக்கரங்கள், தன்னிச்சையாக செயல்படும் பின்புறம் பார்க்க உதவும் பக்கவாட்டு கண்ணாடிகள், பின்பக்கத்தில் எல்இடி டெயில்லேம்ப்கள் மற்றும் முன்பக்கத்தில் சறுக்கு தட்டுகள் உள்ளிட்டவற்றையும் இந்த வேரியண்ட்டில் எதிர்பார்க்கலாம்.

காம்பஸ் - லிமிடெட் (O)
பெயரை பார்த்தவுடனே தெரிந்திருக்கும் இதில் என்ன மாதிரியான அம்சங்கள் வழங்கப்படவுள்ளன என்று. ஆம் அதேதான், இரட்டை பனோராமிக் சன்ரூஃப், 10.1 இன்ச்சில் பெரிய திரையுடன் யு கனெக்ட் வசதி மற்றும் பவர் டெயில்கேட் போன்றவை தான் இதில் வழங்கப்படவுள்ளன.

காம்பஸ் - எஸ்
2021 ஜீப் காம்பஸில் புதியதாக வழங்கப்படவுள்ள டாப் வேரியண்ட்தான் எஸ் ஆகும். இதில் அல்பைனின் 9 ஸ்பீக்கர் சிஸ்டம், 360-கோண கேமிரா, மடக்கும் வசதிகளை கொண்ட முன்பக்க இருக்கைகள், கருப்பு லெதர் உள்ளமைவு, வயர் இல்லா சார்ஜிங், பெரிய 10.25 இன்ச் ஓட்டுனருக்கு தகவல்களை வழங்கக்கூடிய க்ளஸ்ட்டர், காரில் ஏறுவதற்கு இறங்குவதற்கும் வசதியாக விளக்குகள், முன்பக்க பயணிகளுக்கு பவர் இருக்கை, பெயிண்டர் க்ளாடிங், பவர் டெயில்கேட் மற்றும் ஒளி பிரதிபலிப்பான் உடன் எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் உள்ளிட்டவற்றுடன் கார் முழுக்க முழுக்க ப்ரீமியம் தரத்தில் வழங்கப்படவுள்ளது.

இந்த விபரங்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு முன்பாக இணையத்தில் கசிந்துள்ளவையே ஆகும். இதனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சில மாற்றங்கள் இருக்கலாம். 2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் எக்ஸோடிக் சிவப்பு, மாங்கனிசோ க்ரே, மினிமல் க்ரே, பளிச்சிடும் வெள்ளை, ப்ரில்லியண்ட் ப்ளாக், க்ளாசிக் நீலம் மற்றும் முற்றிலும் புதிய டெக்னோ க்ரீன் ஷேட் உள்பட 7 நிறத்தேர்வுகளில் விற்பனை செய்யப்படவுள்ளது.