புதிய தலைமுறை மாருதி விட்டாரா பிரெஸ்ஸா தோற்றம் இணையத்தில் கசிந்தது!! அடுத்த ஆண்டில் அறிமுகமாகலாம்!

முற்றிலும் புதிய மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா காரின் தோற்றம் வீடியோ ஒன்றின் வாயிலாக இணையத்தில் வெளியாகியுள்ளது. அதனை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய தலைமுறை மாருதி விட்டாரா பிரெஸ்ஸா தோற்றம் இணையத்தில் கசிந்தது!! அடுத்த ஆண்டில் அறிமுகமாகலாம்!

முற்றிலும் புதிய செலிரியோவை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து இந்திய சந்தைக்காக ஏகப்பட்ட திட்டங்களை அடுத்த ஆண்டிற்காக மாருதி சுஸுகி நிறுவனம் தயாராக வைத்துள்ளது. இந்த திட்டங்களில் இரண்டாம் தலைமுறை விட்டாரா பிரெஸ்ஸாவும் ஒன்றாகும்.

புதிய தலைமுறை மாருதி விட்டாரா பிரெஸ்ஸா தோற்றம் இணையத்தில் கசிந்தது!! அடுத்த ஆண்டில் அறிமுகமாகலாம்!

அடுத்த 2022ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் புதிய விட்டாரா பிரெஸ்ஸாவின் தோற்றம் புதிய வீடியோ ஒன்றின் மூலமாக இணையத்தில் கசிந்துள்ளது. கீழுள்ள இந்த வீடியோவில் தயாரிப்பு பணிகள் அனைத்தையும் நிறைவு செய்த நிலையில் கார் காட்சியளிப்பதை காணலாம்.

இதனால் இந்த வீடியோவில் காட்சியளிக்கும் தோற்றத்தில் தான் புதிய தலைமுறை விட்டாரா பிரெஸ்ஸா கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கிறோம். இந்த வீடியோவில் காரின் முன் & பின்பகுதிகள், மேற்கூரை மற்றும் உட்புற கேபினின் சில பகுதிகளை காண முடிகிறது. இதன்படி பார்க்கும்போது, க்ரோம் ஸ்ட்ரிப் உடன் ரீடிசைனில், கருப்பு நிறத்தில் முன்பக்க க்ரில் அமைப்பை புதிய பிரெஸ்ஸா பெற்றுள்ளது.

புதிய தலைமுறை மாருதி விட்டாரா பிரெஸ்ஸா தோற்றம் இணையத்தில் கசிந்தது!! அடுத்த ஆண்டில் அறிமுகமாகலாம்!

அதேபோல் ஹெட்லேம்ப் யூனிட்கள் புதியவைகளாக காட்சியளிக்கின்றன. இவை முன்பக்க க்ரில் அமைப்புடன் மிகவும் நேர்த்தியாக ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. மேலும் புதிய டிஆர்எல்களும் விட்டாரா பிரெஸ்ஸா போன்ற சப்-4 மீட்டர் காம்பெக்ட் எஸ்யூவி காரின் வடிவத்திற்கு ஏற்ப வழங்கப்பட்டுள்ளன. பின்பக்கத்தில் மிகவும் பிரீமியம் தரத்தில், பிளவுப்பட்ட வடிவில் டெயில்லேம்ப்கள் பொருத்தப்பட்டுள்ளன.

புதிய தலைமுறை மாருதி விட்டாரா பிரெஸ்ஸா தோற்றம் இணையத்தில் கசிந்தது!! அடுத்த ஆண்டில் அறிமுகமாகலாம்!

பிரெஸ்ஸா லோகோ சரியாக பின்பக்க டெயில்கேட்டிற்கு மத்தியில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது கசிந்துள்ள வீடியோவின் மூலம் சக்கர வளைவுகளில் பாடி கிளாடிங்கையும் புதிய மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா கொண்டுவர உள்ளதை அறிய முடிகிறது. அலாய் சக்கரங்கள் புதிய டிசைனில் வழங்கப்பட்டுள்ளன.

புதிய தலைமுறை மாருதி விட்டாரா பிரெஸ்ஸா தோற்றம் இணையத்தில் கசிந்தது!! அடுத்த ஆண்டில் அறிமுகமாகலாம்!

இந்த வீடியோவில் புதிய தலைமுறை விட்டாரா பிரெஸ்ஸாவின் உட்புற கேபினின் சில பகுதிகள் காட்டப்பட்டிருந்தாலும், எதுவும் தெளிவாக இல்லை. முற்றிலும் புதிய ப்ளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட உள்ளதால், இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவி காரின் கேபினை முற்றிலும் புதிய கேபின் உடன் எதிர்பார்க்கிறோம். இந்த வகையில் புதிய வசதிகளுடன் நியூ-ஏஜ் டேஸ்போர்டு டிசைன் இந்த காருக்கு வழங்கப்படலாம்.

புதிய தலைமுறை மாருதி விட்டாரா பிரெஸ்ஸா தோற்றம் இணையத்தில் கசிந்தது!! அடுத்த ஆண்டில் அறிமுகமாகலாம்!

இவற்றின் காரணமாக புதிய விட்டாரா பிரெஸ்ஸாவின் கேபினை புதுமையான டிசைனில் எதிர்பார்க்கிறோம். தற்போது நமக்கு கிடைத்துள்ள வீடியோவில் டேஸ்போர்டின் மத்தியில் தன்னிச்சையாக நிற்கும் இன்ஃபோடெயின்மெண்ட் க்ளஸ்ட்டரை பார்க்க முடிகிறது. ஆனால் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் பாதி மட்டுமே தெரிகிறது. இது அனலாக் டயலை கொண்டுள்ளது.

புதிய தலைமுறை மாருதி விட்டாரா பிரெஸ்ஸா தோற்றம் இணையத்தில் கசிந்தது!! அடுத்த ஆண்டில் அறிமுகமாகலாம்!

புதிய விட்டாரா பிரெஸ்ஸாவின் வெளிப்புறம் கிட்டத்தட்ட இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது போல் தான் இருக்கும் என்றாலும், உட்புற கேபின் இவ்வாறு இல்லாமலும் இருக்கலாம் என கூறப்படுகிறது. ஏனெனில் வீடியோவில் முழுமையாக தயாரிப்பு பணிகளை நிறைவு செய்யாத நிலையில் தான் கேபின் காட்சித்தருகிறது. மற்றப்படி என்ஜின் தேர்வுகளில் எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது.

புதிய தலைமுறை மாருதி விட்டாரா பிரெஸ்ஸா தோற்றம் இணையத்தில் கசிந்தது!! அடுத்த ஆண்டில் அறிமுகமாகலாம்!

விட்டாரா பிரெஸ்ஸாவில் 1.5 லிட்டர் கே15பி பெட்ரோல் என்ஜினை தற்சமயம் மாருதி சுஸுகி நிறுவனம் வழங்கி வருகிறது. அதிகப்பட்சமாக 104 பிஎஸ் மற்றும் 138 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 4-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

புதிய தலைமுறை மாருதி விட்டாரா பிரெஸ்ஸா தோற்றம் இணையத்தில் கசிந்தது!! அடுத்த ஆண்டில் அறிமுகமாகலாம்!

விட்டாரா பிரெஸ்ஸா மட்டுமின்றி டீசல் என்ஜின் தேர்வு நீக்கப்பட்ட மாடல்களில் மீண்டும் டீசல் என்ஜினை வழங்குவது குறித்து தற்போது வரையில் எந்தவொரு தகவலும் மாருதி சுஸுகி நிறுவனத்திடம் இருந்து இல்லை. கடந்த 2020 ஏப்ரல் மாதத்தில் இருந்து அமலுக்கு வந்த புதிய மாசு உமிழ்வு விதிகளினால் டீசல் என்ஜின்களை தயாரிப்பதை இந்த இந்திய-ஜப்பானிய ஆட்டோமொபைல் நிறுவனம் நிறுத்தியது.

புதிய தலைமுறை மாருதி விட்டாரா பிரெஸ்ஸா தோற்றம் இணையத்தில் கசிந்தது!! அடுத்த ஆண்டில் அறிமுகமாகலாம்!

அதன்பின் கடந்த ஆண்டில் பிஎஸ்6 டீசல் என்ஜின் உடன் விட்டாரா பிரெஸ்ஸா சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டது. ஆனால் இதன் முடிவுகள் என்ன ஆனது? மாருதி கார்களில் முன்பை போல் டீசல் என்ஜின் தேர்வுகள் எப்போது வழங்கப்படும் என்பது தற்போதுவரையில் தெரியவில்லை. புதிய தலைமுறை விட்டாரா பிரெஸ்ஸாவுடன் டீசல் என்ஜின் தேர்வை மாருதி நிறுவனம் மீண்டும் வழங்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

புதிய தலைமுறை மாருதி விட்டாரா பிரெஸ்ஸா தோற்றம் இணையத்தில் கசிந்தது!! அடுத்த ஆண்டில் அறிமுகமாகலாம்!

ஹார்ட்டெக் ப்ளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட உள்ளதால், புதிய பிரெஸ்ஸாவை எடை குறைவானதாக எதிர்பார்க்கிறோம். மேலும் இது வாகனத்தின் எரிபொருள் திறனையும் மேம்படுத்தும் என கூறப்படுகிறது. விற்பனையில் விட்டாரா பிரெஸ்ஸாவிற்கு டாடா நெக்ஸான், ஹூண்டாய் வென்யூ, கியா சொனெட், டொயோட்டா அர்பன் க்ரூஸர் உள்ளிட்டவை போட்டியாக விளங்குகின்றன.

Most Read Articles

English summary
All new 2022 maruti suzuki vitara brezza spy images leaked
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X