சிஎன்ஜி தொகுப்புடன் ஹூண்டாய் ஐ20 ஹேட்ச்பேக்!! 8 இன்ஜெக்டர்களுடன்... வீடியோ!

ஹுண்டாய் ஐ20 இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார்களுள் ஒன்று. மாருதி பலேனோ, டாடா அல்ட்ராஸ், ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் ஹோண்டா ஜாஸ் போன்ற மற்ற ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார்களுக்கு போட்டியாக விளங்கினாலும் ஐ20 மாடலுக்கும் கணிசமான எண்ணிக்கையில் வாடிக்கையாளர்கள் கிடைத்து வருகின்றனர்.

சிஎன்ஜி தொகுப்புடன் ஹூண்டாய் ஐ20 ஹேட்ச்பேக்!! 8 இன்ஜெக்டர்களுடன்... வீடியோ!

புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 கடந்த ஆண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கார் வாங்கும் அதேநேரம் அதன் மைலேஜையும் முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஏனெனில் டிஜிட்டல் இந்தியாவின் பெரும்பான்மையான நகரங்களில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.100-ஐ ஏற்கனவே கடந்துவிட்டது.

சிஎன்ஜி தொகுப்புடன் ஹூண்டாய் ஐ20 ஹேட்ச்பேக்!! 8 இன்ஜெக்டர்களுடன்... வீடியோ!

சில பகுதிகளில் ஒரு லிட்டர் டீசலின் விலையும் ரூ.100-ஐ தொட்டுவிட்டது. இதனால் கார்களை பயன்படுத்துவோரில் பலர் தங்களது காரில் சிஎன்ஜி தொகுப்பை பொருத்த திட்டமிட்டு வருகின்றனர். இந்த வகையில் சிஎன்ஜி தொகுப்பு பொருத்தப்பட்ட ஹூண்டாய் ஐ20 காரை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.

Image Courtesy: cngMarutiautogas Cng

சிஎன்ஜிமாருதிஆட்டோகேஸ் சிஎன்ஜி என்ற யுடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ள மேலே உள்ள வீடியோவில் இந்த ஐ20 சிஎன்ஜி காரை காணலாம். இந்த மாருதி ஆட்டோ கேஸ் என்பது இவ்வாறான சிஎன்ஜி தொகுப்புகளை கார்களில் பொருத்தும் கேரேஜ் ஆகும்.

சிஎன்ஜி தொகுப்புடன் ஹூண்டாய் ஐ20 ஹேட்ச்பேக்!! 8 இன்ஜெக்டர்களுடன்... வீடியோ!

மேலும் இத்தாலியன் பிராண்டான சவோலி சிஎன்ஜி தொகுப்புகள் இந்தியா என்ற நிறுவனத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராகவும் இது விளங்குகிறது. ஏகப்பட்ட என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளை ஐ20 மாடலை ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்தாலும், சிஎன்ஜி தேர்வில் வழங்கப்படுவதில்லை.

சிஎன்ஜி தொகுப்புடன் ஹூண்டாய் ஐ20 ஹேட்ச்பேக்!! 8 இன்ஜெக்டர்களுடன்... வீடியோ!

நாம் இந்த செய்தியில் பார்க்கும் சிஎன்ஜி தொகுப்பை பெற்ற ஐ20 மாடல் அதன் ஸ்போர்ட்ஸ் வேரியண்ட்டாகும். இந்த காரில் சவோலி போரா எஸ்32 சதுரமான சிஎன்ஜி தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளது. மேல் உள்ள வீடியோவில் வயர்கள், எரிவாயு குழாய்கள், இன்ஜெக்டர்கள் உள்ளிட்டவை அடங்கிய இந்த தொகுப்பு நேர்த்தியாக காரின் பொனெட்டிற்கு அடியில் பொருத்தப்பட்டுள்ளதை பார்க்கலாம்.

சிஎன்ஜி தொகுப்புடன் ஹூண்டாய் ஐ20 ஹேட்ச்பேக்!! 8 இன்ஜெக்டர்களுடன்... வீடியோ!

ஒட்டுமொத்தமாக இந்த சிஎன்ஜி அமைப்பில் 8 இன்ஜெக்டர்கள் அடங்கியுள்ளன. பொதுவாக 4-சிலிண்டர் என்ஜின் அமைப்பில் 4 இன்ஜெக்டர்கள் வழங்குவார்கள். ஆனால் இங்கு இரட்டிப்பாக 8 இன்ஜெக்டர்கள் வழங்கியுள்ளனர்.

சிஎன்ஜி தொகுப்புடன் ஹூண்டாய் ஐ20 ஹேட்ச்பேக்!! 8 இன்ஜெக்டர்களுடன்... வீடியோ!

இதனால் ஆற்றல் வழங்குவதல் இந்த சிஎன்ஜி காரில் சிறப்பானதாக இருக்கும். பெட்ரோல் வாகனங்களுடன் ஒப்பிட்டால் சிஎன்ஜி வாகனங்களில் பின்னோக்கி இழுத்தல் சற்று அதிகமாக இருக்கும். ஆதலால் இவ்வாறு அதிக எண்ணிக்கையில் இன்ஜெக்டர்களை வழங்குவதால் அதனை தவிர்க்கலாம்.

சிஎன்ஜி தொகுப்புடன் ஹூண்டாய் ஐ20 ஹேட்ச்பேக்!! 8 இன்ஜெக்டர்களுடன்... வீடியோ!

பின்பக்கத்தில் பொருட்களை வைக்கும் பகுதியின் பெரும்பகுதி எரிவாயு சிலிண்டரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் வைக்கப்படும் கூடுதல் டயர் செங்குத்தாக காரின் பின்பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது.

சிஎன்ஜி தொகுப்புடன் ஹூண்டாய் ஐ20 ஹேட்ச்பேக்!! 8 இன்ஜெக்டர்களுடன்... வீடியோ!

சிலிண்டரில் எரிவாயுவின் அளவை காட்டும் இண்டிகேட்டர் ஸ்விட்ச் காரில் வழங்கப்பட்டுள்ளதையும் இந்த வீடியோவில் காட்டியுள்ளனர். புதியதாக சிஎன்ஜி தொகுப்பை பொருத்துவதற்காக இந்த ஐ20 காரில் எந்தவொரு இணைப்பும் துண்டிக்கப்படவில்லை என வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

English summary
All-new Hyundai i20 hatchback fitted with aftermarket CNG kit.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X