இது சூப்பருங்க... சூரிய மின்சக்தியில் சார்ஜ் ஏற்றும் வசதியுடன் புதிய ஹூண்டாய் ஐயோனிக்-5 எலெக்ட்ரிக் கார்!

ஹூண்டாய் மோட்டார் குழுமத்தின் ஐயோனிக் பிராண்டில் முதல் எலெக்ட்ரிக் கார் மாடல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

 இது சூப்பருங்க... சூரிய மின்சக்தியில் சார்ஜ் ஏற்றும் வசதியுடன் புதிய ஹூண்டாய் ஐயோனிக்-5 எலெக்ட்ரிக் கார்!

ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களை தனி பிராண்டின் கீழ் விற்பனை செய்ய உள்ளது. ஐயோனிக் என்ற எலெக்ட்ரிக் கார்களுக்கான பிரத்யேக பிராண்டின் கீழ் முதல் கார் மாடல் வெளியிடப்பட்டுள்ளது. ஐயோனிக்-5 என்ற பெயரில் இந்த கார் வந்துள்ளது. 2019ம் ஆண்டு பிராங்ஃபர்ட் மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்ட ஹூண்டாய் 45இவி கான்செப்ட் கார் அடிப்படையில் இந்த மாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

 இது சூப்பருங்க... சூரிய மின்சக்தியில் சார்ஜ் ஏற்றும் வசதியுடன் புதிய ஹூண்டாய் ஐயோனிக்-5 எலெக்ட்ரிக் கார்!

எலெக்ட்ரிக் கார்களுக்காக ஹூண்டாய் மோட்டார் உருவாக்கி இருக்கும் எலெக்ட்ரிக் குளோபல் மோடுலர் பிளாட்ஃபார்ம் (E-GMP) என்ற பிரத்யேக கட்டமைப்புக் கொள்கையின் கீழ் முதல் மாடலாக ஐயோனிக் -5 எலெக்ட்ரிக் கார் உருவாக்கப்பட்டுள்ளது.

 இது சூப்பருங்க... சூரிய மின்சக்தியில் சார்ஜ் ஏற்றும் வசதியுடன் புதிய ஹூண்டாய் ஐயோனிக்-5 எலெக்ட்ரிக் கார்!

புதிய ஐயோனிக்-5 கார் 4,635 மிமீ நீளம், 1,890 மிமீ அகலமும், 3,000 மிமீ வீல்பேஸ் நீளமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் நவீன யுக கார்களுக்குரிய டிசைன் அம்சங்களை பெற்றிருக்கிறது. 'ப' வடிவிலான எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் இடம்பெற்றுள்ளன.

 இது சூப்பருங்க... சூரிய மின்சக்தியில் சார்ஜ் ஏற்றும் வசதியுடன் புதிய ஹூண்டாய் ஐயோனிக்-5 எலெக்ட்ரிக் கார்!

இந்த காரில் 2 ஸ்போக் ஸ்டீயரிங் வீல், மெர்சிடிஸ் பென்ஸ் கார்களில் வழங்கப்படுவது போன்ற இரண்டு திரைகள் அமைப்புடன் டேஷ்போர்டு முக்கிய விஷயமாக இருக்கிறது.

 இது சூப்பருங்க... சூரிய மின்சக்தியில் சார்ஜ் ஏற்றும் வசதியுடன் புதிய ஹூண்டாய் ஐயோனிக்-5 எலெக்ட்ரிக் கார்!

இந்த காரில் 58kWh மற்றும் 72.6kWh என இரண்டு விதமான திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்ட மாடல்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. ஒரு மின் மோட்டார் மற்றும் இரண்டு மின் மோட்டார்கள் கொண்ட மாடல்களில் கிடைக்கும்.

 இது சூப்பருங்க... சூரிய மின்சக்தியில் சார்ஜ் ஏற்றும் வசதியுடன் புதிய ஹூண்டாய் ஐயோனிக்-5 எலெக்ட்ரிக் கார்!

இதில், 58kWh பேட்டரி கொண்ட மாடலானது 165 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த மாடல் 0 - 100 கிமீ வேகத்தை 8.5 வினாடிகளில் எட்டிவிடும்.

 இது சூப்பருங்க... சூரிய மின்சக்தியில் சார்ஜ் ஏற்றும் வசதியுடன் புதிய ஹூண்டாய் ஐயோனிக்-5 எலெக்ட்ரிக் கார்!

மற்றொரு 72.6kWh பேட்டரி கொண்ட மாடலின் ஒரு மின் மோட்டார் கொண்ட மாடலின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 480 கிமீ தூம் வரை செல்லும். இதன் மின் மோட்டார் 211 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இரண்டு மின் மோட்டார்கள் கொண்ட மாடலானது 298 பிஎச்பி பவரையும், 605 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 0 - 100 கிமீ வேகத்தை 5.2 வினாடிகளில் எட்டிவிடும்.

 இது சூப்பருங்க... சூரிய மின்சக்தியில் சார்ஜ் ஏற்றும் வசதியுடன் புதிய ஹூண்டாய் ஐயோனிக்-5 எலெக்ட்ரிக் கார்!

புதிய ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரில் முன்புற மோதலை தவிர்க்கும் பாதுகாப்பு தொழில்நுட்பம், ஓட்டுனர் அயர்ந்து போவது குறித்து எச்சரிக்கும் வசதி, ஹை பீம் அசிஸ்ட் உள்ளிட்ட ஏராளமான நவீன கால பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

 இது சூப்பருங்க... சூரிய மின்சக்தியில் சார்ஜ் ஏற்றும் வசதியுடன் புதிய ஹூண்டாய் ஐயோனிக்-5 எலெக்ட்ரிக் கார்!

புதிய ஹூண்டாய் ஐயோனிக் 5 காரின் பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு 350kW ஃபாஸ்ட் சார்ஜர் கொடுக்கப்படும். இந்த சார்ஜரை பயன்படுத்தினால், பேட்டரியை வெறும் 18 நிமிடங்களில் 10 சதவீதத்திலிருந்து 80 சதவீத சார்ஜ் ஏற்றிவிட முடியும் என்று ஹூண்டாய் தெரிவிக்கிறது.

 இது சூப்பருங்க... சூரிய மின்சக்தியில் சார்ஜ் ஏற்றும் வசதியுடன் புதிய ஹூண்டாய் ஐயோனிக்-5 எலெக்ட்ரிக் கார்!

இந்த காருக்கு ஆப்ஷனலாக சோலார் பேனல் கூரை அமைப்பும் கொடுக்கப்படும். இதன்மூலமாக, கார் செல்லும்போதே பேட்டரி சார்ஜ் ஆகும் வாய்ப்பு கிடைக்கும். இந்த சோலார் பேனல் மூலமாக ஆண்டுக்கு கூடுதலாக 2,000 கிமீ தூரம் பயணிக்கும் வாய்ப்பை பெற முடியும். ஆனால், இதன் விலை உள்ளிட்ட விபரங்கள் வெளியிடப்படவில்லை. நடப்பு ஆண்டின் முதல் பாதியிலேயே அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்த புதிய எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

Most Read Articles
English summary
Hyundai has revealed the all new Ioniq 5 electric car is based on the Electric-Global Modular Platform (E-GMP).
Story first published: Wednesday, February 24, 2021, 10:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X