99% பாக்ட்ரீயாவை வடிக்கட்டும்!! மஹிந்திரா எக்ஸ்யூவி700-இல் ஸ்மார்ட் காற்று சுத்திகரிப்பான்!

மஹிந்திரா நிறுவனம் மீண்டும் அதன் புதிய எக்ஸ்யூவி700 காரின் சிறப்பம்சத்தை ஹைலைட் படுத்தி டீசர் வீடியோவினை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவினை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

99% பாக்ட்ரீயாவை வடிக்கட்டும்!! மஹிந்திரா எக்ஸ்யூவி700-இல் ஸ்மார்ட் காற்று சுத்திகரிப்பான்!

இந்த புதிய டீசர் வீடியோவின் மூலம் இந்த எஸ்யூவி காரில் ‘ஸ்மார்ட் காற்று சுத்திகரிப்பான்' தொழிற்நுட்பம் வழங்கப்படவுள்ளதை இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா நமக்கு தெரியப்படுத்துகிறது.

இந்த காற்று சுத்திகரிப்பான் 99 சதவீத பாக்ட்ரீயாவையும், 95 சதவீத வைரஸையும் சுத்திகரிக்கும் என்று சான்றளிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் சோதனையில் இந்த சுத்திகரிப்பான் உட்படுத்தப்படவில்லை. இருப்பினும் இது மற்றொரு, எஸ்யூவி பிரிவில்-முதல் வசதியாகும்.

99% பாக்ட்ரீயாவை வடிக்கட்டும்!! மஹிந்திரா எக்ஸ்யூவி700-இல் ஸ்மார்ட் காற்று சுத்திகரிப்பான்!

இதேபோன்று பனோராமிக் சன்ரூஃப், பறித்து திறக்கக்கூடிய கதவு கைப்பிடிகள், அதிக பீம் உதவி மற்றும் ஓட்டுனர் தூங்குவதை கண்டறியும் வசதி உள்ளிட்டவற்றையும் பிரிவிலேயே முதல் மாடலாக எக்ஸ்யூவி700 பெற்றுவரவுள்ளதையும் மஹிந்திரா நிறுவனம் தெரியப்படுத்தி இருந்தது.

99% பாக்ட்ரீயாவை வடிக்கட்டும்!! மஹிந்திரா எக்ஸ்யூவி700-இல் ஸ்மார்ட் காற்று சுத்திகரிப்பான்!

இவற்றுடன் 360-கோண கேமிரா, தொடுத்திரைக்கு ஒன்று, இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கு ஒன்று என இரட்டை-திரை அமைப்பு, பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், இரட்டை-நிலை க்ளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே, மடக்கும் வசதியுடன் முன் இருக்கைகள் மற்றும் இணைப்பு கார் தொழிற்நுட்பம் போன்ற வழக்கமான வசதிகளையும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 பெற்றுவரவுள்ளது.

99% பாக்ட்ரீயாவை வடிக்கட்டும்!! மஹிந்திரா எக்ஸ்யூவி700-இல் ஸ்மார்ட் காற்று சுத்திகரிப்பான்!

மேலும், ஒரே பாதையில் தொடர்ந்து பயணிக்க உதவும் வசதி, அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ரிவர்ஸில் வரும்போது குறுக்காக எதாவது வாகனம் வந்தால் தெரியப்படுத்தும் தொழிற்நுட்பம் மற்றும் தானியங்கி அவசரகால ப்ரேக்கிங் உடன் ஓட்டுனரால் பார்க்க முடியாத பகுதியினை கண்காணிக்கும் அமைப்பையும் இந்த புதிய மஹிந்திரா எஸ்யூவி காரில் எதிர்பார்க்கலாம்.

99% பாக்ட்ரீயாவை வடிக்கட்டும்!! மஹிந்திரா எக்ஸ்யூவி700-இல் ஸ்மார்ட் காற்று சுத்திகரிப்பான்!

எக்ஸ்யூவி700-இல் இரு என்ஜின்கள் தேர்வுகளாக வழங்கப்பட உள்ளன. இதில் தாரில் வழங்கப்படும் 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின்கள் அடங்குகின்றன. இவற்றில் டர்போ-பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 150 பிஎஸ் பவரையும், டீசல் என்ஜின் 130 பிஎஸ் பவரையும் வெளிப்படுத்தக்கூடியதாக வழங்கப்பட உள்ளது.

99% பாக்ட்ரீயாவை வடிக்கட்டும்!! மஹிந்திரா எக்ஸ்யூவி700-இல் ஸ்மார்ட் காற்று சுத்திகரிப்பான்!

இவற்றுடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் கொடுக்கப்பட உள்ளன. மேற்கூறிய அம்சங்களுடன், பிரிவில் நிலவும் போட்டியினை சமாளிக்க அனைத்து-சக்கர ட்ரைவ் அமைப்பையும் இந்த மஹிந்திரா எக்ஸ்யூவி கார் ஏற்று வரவுள்ளது.

99% பாக்ட்ரீயாவை வடிக்கட்டும்!! மஹிந்திரா எக்ஸ்யூவி700-இல் ஸ்மார்ட் காற்று சுத்திகரிப்பான்!

தற்சமயம் விற்பனையில் உள்ள எக்ஸ்யூவி500 காரின் புதிய தலைமுறையாக கொண்டுவரப்படும் மஹிந்திரா எக்ஸ்யூவி700-இன் எக்ஸ்-ஷோரூம் விலையினை ரூ.16 லட்சத்தில் இருந்து ரூ.22 லட்சம் வரையில் எதிர்பார்க்கிறோம். விற்பனையில் இதற்கு எம்ஜி ஹெக்டர்+, டாடா சஃபாரி மற்றும் ஹூண்டாய் அல்கஸார் போட்டியாக விளங்கவுள்ளன.

Most Read Articles
English summary
Mahindra Teases XUV700 Again: SUV To Get Air Filter Technology.
Story first published: Saturday, July 24, 2021, 23:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X