ஷோரூமில் இருந்து நைசாக நகர்த்தி செல்லப்பட்ட புத்தம் புதிய டாடா கார்... திருடுபோன காரோட விலை எவ்ளோ தெரியுமா?..

ஷோரூம் பார்க்கிங்கில் இருந்து டாடாவின் விலையுயர்ந்த காரை மர்ம நபர் ஒருவர் நைசாக திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

ஷோரூமில் இருந்து நைசாக நகர்த்தி செல்லப்பட்ட புத்தம் புதிய டாடா கார்... திருடுபோன காரோட விலை எவ்ளோ தெரியுமா?..

டாடா நிறுவனத்தின் புகழ்வாய்ந்த கார் மாடல்களில் ஹாரியர் எஸ்யூவியும் ஒன்று. இந்த காரையே மர்ம நபர் ஒருவர் ஷோரூமில் இருந்து லாவகமாக திருடிச் சென்றிருக்கின்றார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகிய பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

ஷோரூமில் இருந்து நைசாக நகர்த்தி செல்லப்பட்ட புத்தம் புதிய டாடா கார்... திருடுபோன காரோட விலை எவ்ளோ தெரியுமா?..

குருகிராம் மாநிலத்தில் உள்ள ஓர் டாடா கார் விற்பனையகத்திலேயே இச்சம்பவம் நடைபெற்றிருக்கின்றது. கடந்த 15ம் தேதி அன்றே டாடா ஹாரியர் எஸ்யூவி கார் திருட்டு சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சம்பவம் நடைபெற்றபோது நேரம் காலை 5.30 மணி இருக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது.

ஷோரூமில் இருந்து நைசாக நகர்த்தி செல்லப்பட்ட புத்தம் புதிய டாடா கார்... திருடுபோன காரோட விலை எவ்ளோ தெரியுமா?..

திருடப்பட்ட ஹாரியர் எஸ்யூவி காரானது புத்தம் புதிய பேட்சுகள் என கூறப்படுகின்றது. கடந்த 13ம் அன்றே இப்புதிய பேட்ச் டாடா கார்கள் உற்பத்தியாளர்களிடத்தில் இருந்து டீலருக்கு வந்திருக்கின்றன. வந்த இரண்டு நாட்களிலேயே பார்க் செய்யப்பட்டிருந்த இடத்தில் இருந்து ஹாரியர் திருடப்பட்டிருக்கின்றது.

ஷோரூமில் இருந்து நைசாக நகர்த்தி செல்லப்பட்ட புத்தம் புதிய டாடா கார்... திருடுபோன காரோட விலை எவ்ளோ தெரியுமா?..

ஃபசில்பூர் சவுக் எனும் பகுதியில் அமைந்துள்ள ஸ்காட்டிஷ் மாலுக்கு அருகில் ஜெடெக்ஸ் டாடா மோட்டார்ஸ் எனும் டாடா கார் விற்பனையகம் செயல்பட்டு வருகின்றது. இந்த விற்பனையகத்தில் இருந்தே கார் திருடப்பட்டிருக்கின்றது. பார்க்கிங் பகுதியில் இருந்த கார் திருடப்படுவதை உணர்ந்த காவலர்கள், அதனை விரட்டிச் செல்ல ஆரம்பித்திருக்கின்றனர்.

ஷோரூமில் இருந்து நைசாக நகர்த்தி செல்லப்பட்ட புத்தம் புதிய டாடா கார்... திருடுபோன காரோட விலை எவ்ளோ தெரியுமா?..

இருப்பினும், முக்கிய சாலைக்குள் நுழைந்த கார் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து சிட்டாக பறந்திருக்கின்றது. திருடப்பட்டது எக்ஸ்இசட்ஏ ப்ளஸ் எனப்படும் உயர்நிலை வேரியண்ட் என கூறப்படுகின்றது. இது ரூ. 20 லட்சத்திற்கும் அதிகமான விலைக் கொண்ட மாடலாகும்.

Image Courtesy: Gurugram News

இத்தகைய விலையுயர்ந்த காரை மர்ம நபர் நைசாக நகட்டிச் சென்றிருக்கின்றார். சம்பவம்குறித்து டீலர் சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆகையால், விரைவில் திருடன் பிடிபடுவான் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், அது ஓர் பதிவு செய்யப்படாத வாகனம் ஆகும்.

ஷோரூமில் இருந்து நைசாக நகர்த்தி செல்லப்பட்ட புத்தம் புதிய டாடா கார்... திருடுபோன காரோட விலை எவ்ளோ தெரியுமா?..

டாடா ஹாரியர் ரூ. 14.21 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஒட்டுமொத்த இக்கார் ஆறு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது. எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்டி, எக்ஸ்டி ப்ளஸ், எக்ஸ்இசட் மற்றும் எக்ஸ்இசட் ப்ளஸ் ஆகியவையே அவையாகும்.

ஷோரூமில் இருந்து நைசாக நகர்த்தி செல்லப்பட்ட புத்தம் புதிய டாடா கார்... திருடுபோன காரோட விலை எவ்ளோ தெரியுமா?..

இதுமட்டுமின்றி டார்க் எடிசன் மற்றும் கேமோ எனும் இரு சிறப்பு பதிப்பிலும் டாடா ஹாரியர் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இவை தனித்துவமான நிறம், பேட்ஜ் மற்றும் சிறப்பு அம்சங்களுடன் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

ஷோரூமில் இருந்து நைசாக நகர்த்தி செல்லப்பட்ட புத்தம் புதிய டாடா கார்... திருடுபோன காரோட விலை எவ்ளோ தெரியுமா?..

டாடா ஹாரியர் டீசல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது. அந்தவகையில், 2.0 லிட்டர் கைரோடெக் எஞ்ஜினில் மட்டுமே ஹாரியர் எஸ்யூவி கிடைக்கிறது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 170 பிஎஸ் மற்றும் 350 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இது இந்தியாவில் எம்ஜி ஹெக்டர், ஹெக்டர் ப்ளஸ் மற்றும் ஜீப் காம்பஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனையில் இருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
All New Tata Harrier Stolen From Showroom Parking Area: Here Is A Video. Read In Tamil.
Story first published: Monday, June 21, 2021, 18:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X