டாடா பஞ்ச் காரின் நிறை-குறைகள் பற்றிய விபரம்! அட இவ்ளோ விஷயம் இருக்கா! இதை எல்லாம் பாத்து வாங்குங்க!

மிக மிக குறைவான விலையில் விற்பனைக்கு வந்திருக்கும் டாடா பஞ்ச் (Tata Punch) காரின் நிறைகள் மற்றும் குறைகள் பற்றிய தகவலை இந்த பதிவில் காணலாம்.

டாடா பஞ்ச் காரின் நிறை-குறைகள் பற்றிய விபரம்! அட இவ்ளோ விஷயம் இருக்கா! இதை எல்லாம் பாத்து வாங்குங்க!

எச்பிஎக்ஸ் எனும் பெயரில் முதன் முதலில் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் இந்த கார் காட்சியளித்தது. இதையடுத்து, இந்த மைக்ரோ எஸ்யூவிக்கு பல்வேறு பெயர்கள் வைக்கப்பட்டன. ஆனால், கடைசியாக பஞ்ச் என்ற பெயிரிலேயே இதன் அறிமுகம் அமைந்தது. அக்டோபர் நான்காம் தேதியில் இருந்தே இக்காருக்கான புக்கிங் ரூ. 21 ஆயிரம் என்ற முன்தொகையில் செய்யப்பட்டு வருகின்றது.

டாடா பஞ்ச் காரின் நிறை-குறைகள் பற்றிய விபரம்! அட இவ்ளோ விஷயம் இருக்கா! இதை எல்லாம் பாத்து வாங்குங்க!

புக்கிங் தொடங்கிய சில நாட்களிலேயே இந்த காருக்கு நல்ல டிமாண்ட் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது. இதற்கு இக்காரில் இடம் பெற்றிருக்கும் அதிநவீன வசதிகளும், பாதுகாப்பு அம்சங்களுமே முக்கிய காரணம் ஆகும். அதேவேலையில் சில குறைபாடுகளும் இந்த காரில் உள்ளன. இதுகுறித்த முக்கிய தகவல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, டாடா பஞ்சின் சிறப்புகள் மற்றும் குறைபாடுகள் என்ன என்பது பற்றிய தகவலை பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

டாடா பஞ்ச் காரின் நிறை-குறைகள் பற்றிய விபரம்! அட இவ்ளோ விஷயம் இருக்கா! இதை எல்லாம் பாத்து வாங்குங்க!

சிறப்புகள்:

1. நிறுவனத்தின் புகழ்வாய்ந்த கார் மாடல்களான நெக்ஸான், ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய கார் மாடல்களைப் போல மிகவும் சிறந்த கவர்ச்சியான தோற்றம் பஞ்சிற்கு வழங்கப்பட்டிருக்கின்றது. ஆகையால், இது வாடிக்கையாளர்களைக் கவரும் அமைந்துள்ளது.

டாடா பஞ்ச் காரின் நிறை-குறைகள் பற்றிய விபரம்! அட இவ்ளோ விஷயம் இருக்கா! இதை எல்லாம் பாத்து வாங்குங்க!

2. பன்முக சிறப்பம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன. புரஜெக்டர் ரக ஹெட்லைட், எல்இடி டிஆர்எல்கள், 16 இன்ச் அளவுள்ள டைமண்ட் கட் அலாய் வீல்கள், எல்இடி வால் பகுதி மின் விளக்கு, ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட் ஆகியவை வெளிப்புறத்தின் கவர்ச்சியான தோற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதேபோல் உட்பகுதியில் 7 இன்ச் தொடுதிரை (ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி உடன்), பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

டாடா பஞ்ச் காரின் நிறை-குறைகள் பற்றிய விபரம்! அட இவ்ளோ விஷயம் இருக்கா! இதை எல்லாம் பாத்து வாங்குங்க!

3. நான்கு விதமான ட்ரிம்களில் பஞ்ச் விற்பனைக்கும். ப்யூர், அட்வென்சர், அக்காம்ப்ளிஷ்ட் மற்றும் கிரியேட்டீவ் ஆகியவையே அவை. இவற்றுடன் ரிதம், டேஸில் மற்றும் ஐஆர்ஏ பேக்குகளை கூடுதல் சிறப்பு வசதிகளுடன் டாடா வழங்குகின்றது. ரூ. 30 ஆயிரம் தொடங்கி ரூ. 45 ஆயிரம் கூடுதல் கட்டணம் இதற்கு வசூலிக்கப்படுகின்றது. இவற்றின்கீழ், பன்முக பிரீமியம் அம்சங்கள் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

டாடா பஞ்ச் காரின் நிறை-குறைகள் பற்றிய விபரம்! அட இவ்ளோ விஷயம் இருக்கா! இதை எல்லாம் பாத்து வாங்குங்க!

4. நான்கு வீல் இக்கம் வசதி, அனைத்து சாலைகளையும் சமாளிக்கும் திறன், 187 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் (இத்தகைய உயரம் 365 மிமீ அளவுள்ள ஆழமான நீர் சாலையைக் கூட சமாளிக்க உதவும்) மற்றும் டிராக்சன் ப்ரோ எனும் சிறப்பு வசதி உள்ளிட்டவை இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன.

டாடா பஞ்ச் காரின் நிறை-குறைகள் பற்றிய விபரம்! அட இவ்ளோ விஷயம் இருக்கா! இதை எல்லாம் பாத்து வாங்குங்க!

5. விலை மிகக் குறைவு. ரூ. 5.49 தொடங்கி ரூ. 9.09 லட்சம் வரையிலான விலையில் இக்கார் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதன் ஏஎம்டி தேர்வே ரூ. 6.99 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. மேலே பார்த்த அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

டாடா பஞ்ச் காரின் நிறை-குறைகள் பற்றிய விபரம்! அட இவ்ளோ விஷயம் இருக்கா! இதை எல்லாம் பாத்து வாங்குங்க!

குறைகள்:

1. டாடா பஞ்ச் காரில் டர்போ எஞ்ஜின் தேர்வு வழங்கப்படாதது ஓர் குறையாக பார்க்கின்றோம். நிறுவனத்தின் பிரபலமான கார் மாடலான அல்ட்ராஸில் இந்த வசதி வழங்கும்போது, குறைந்தபட்சம் உயர்நிலை தேர்விலாவது இந்த வசதி வழங்கியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது, 1.2 லிட்டர் ரெவட்ரோன் எஞ்ஜின் தேர்வு மட்டுமே வழங்கப்படுகின்றது.

டாடா பஞ்ச் காரின் நிறை-குறைகள் பற்றிய விபரம்! அட இவ்ளோ விஷயம் இருக்கா! இதை எல்லாம் பாத்து வாங்குங்க!

2. டர்போ எஞ்ஜினைப் போலவே டீசல் எஞ்ஜின் தேர்வு வழங்கப்படாததும் ஓர் குறைப்பாடாக பார்க்கப்படுகின்றது. பெரும்பாலான நிறுவனங்கள் சிறிய ரக வாகனங்களில் டீசல் எஞ்ஜின் தேர்வை வழங்குவதை நிறுத்தியுள்ளன. புதிய மாசு உமிழ்வு தர கட்டுப்பாடு காரணத்தினால் இந்த நிலை இந்தியாவில் தென்படுகின்றது.

டாடா பஞ்ச் காரின் நிறை-குறைகள் பற்றிய விபரம்! அட இவ்ளோ விஷயம் இருக்கா! இதை எல்லாம் பாத்து வாங்குங்க!

3. தானியங்கி கியர்பாக்ஸ் தேர்வு இல்லாதது ஓர் குறையாகவே பார்க்கப்படுகின்றது. டாடா ஏஎம்டி தேர்வை வழங்குகின்றது. இது மேனுவல் தேர்வைப் போல் இயக்கத்தைச் சுவாரஷ்யமானதாக மாற்றுவதில்லை என்ற புகார்கள் எழும்பிய வண்ணம் இருக்கின்றன. ஆகையால், இதில், மிக சிறந்த தானியங்கி டிரான்ஸ்மிஷன் தேர்வை வழங்கி இருக்கலாம் என எதிர்பார்க்கின்றோம்.

டாடா பஞ்ச் காரின் நிறை-குறைகள் பற்றிய விபரம்! அட இவ்ளோ விஷயம் இருக்கா! இதை எல்லாம் பாத்து வாங்குங்க!

4. பஞ்ச் ஓர் நல்ல தோற்றம் உடைய கார். இருப்பினும், ஆனால், அதிகம் பிளாஸ்டிக்குகள் இந்த காரில் ஆளுகை செய்கின்றன. இது காருக்கு மிக சிறந்த தோற்றத்தை வழங்குகின்றன. இருப்பினும், காரின் உட்புறத்தில் சற்றும் கூடுதல் பிரீமியம் தோற்றத்தைக் கொடுத்திருக்கலாம். விநோத நிறங்கள் கொண்ட அணிகலன்கள் உட்புறத்தில் இடம் பெற்றிருக்கலாம் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். தொடர்ந்து, உயர் நிலை வேரியண்டுகளில் மென்மையான தொடும் உணர்வு கொண்ட பிளாஸ்டிக்குகளும் வழங்கபட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

English summary
All new tata punch pros and cons first
Story first published: Monday, October 18, 2021, 18:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X