காற்று மாசுபாட்டை குறைக்க அமேசான் எடுத்த அதிரடி முடிவு... மகிழ்ச்சியில் மஹிந்திரா!

காற்று மாசுபாட்டைக் குறைக்க வேண்டும் என்பதில் அமேசான் மிக தீவிரமாக களமிறங்கியுள்ளது. இதற்காக இது எடுத்திருக்கும் அதிரடி முடிவு என்ன என்பது பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

காற்று மாசுபாட்டை குறைக்க அமேசான் எடுத்த அதிரடி முடிவு... மகிழ்ச்சியில் மஹிந்திரா!

பிரபல ஆன்லைன் வர்த்த நிறுவனமான அமேசான், அதன் டெலிவரி பயன்பாட்டிற்கு மஹிந்திரா நிறுவனத்தின் மின்சார தயாரிப்புகளைப் பயன்படுத்த இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. இதற்காக மஹிந்திராவின் எலெக்ட்ரிக் ட்ரியோ மூன்று சக்கர லோடு வாகனத்தையே நிறுவனம் தேர்வு செய்திருக்கின்றது.

காற்று மாசுபாட்டை குறைக்க அமேசான் எடுத்த அதிரடி முடிவு... மகிழ்ச்சியில் மஹிந்திரா!

உலக நாடுகள் அனைத்தும் காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு மின் வாகன பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றன. இந்தியாவிலும் இந்த முயற்சிகள் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தேசத்தின் இம்முயற்சியில் தனது பங்களிப்பை வழங்கும் விதமாக, அமேசான் நிறுவனம் தனது டெலிவரி வாகனங்களை மின்சார வாகனமாக அப்கிரேட் செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

காற்று மாசுபாட்டை குறைக்க அமேசான் எடுத்த அதிரடி முடிவு... மகிழ்ச்சியில் மஹிந்திரா!

இதனைத் தொடர்ந்தே, மின்வாகனங்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் செயல்பாட்டில் நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது. இதனடிப்படையிலேயே டெலிவரி சேவையில் ஈடுபடுத்துவதற்காக மஹிந்திரா நிறுவனத்தின் ட்ரியோ மின் வாகனங்களை நிறுவனம் தேர்வு செய்திருக்கின்றது.

காற்று மாசுபாட்டை குறைக்க அமேசான் எடுத்த அதிரடி முடிவு... மகிழ்ச்சியில் மஹிந்திரா!

சுமார் 10 ஆயிரத்திற்கும் எண்ணிக்கையிலான ட்ரியோ மின்சார வாகனங்களுக்கு அமேசான் ஆர்டர் கொடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றை படிபடியாக 2025ம் ஆண்டிற்குள் மஹிந்திரா டெலிவரி செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

காற்று மாசுபாட்டை குறைக்க அமேசான் எடுத்த அதிரடி முடிவு... மகிழ்ச்சியில் மஹிந்திரா!

மின் வாகன மயமாக்கும் முயற்சியை இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் அமேசான் நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது. 2030ம் ஆண்டிற்குள் தனது அனைத்து டெலிவரி வாகனங்களையும் மின் வாகனங்களாக அப்கிரேட் செய்ய இருப்பதாக நிறுவனம் கூறியிருக்கின்றது.

காற்று மாசுபாட்டை குறைக்க அமேசான் எடுத்த அதிரடி முடிவு... மகிழ்ச்சியில் மஹிந்திரா!

முதல்கட்டமாக ட்ரியோ ஸோர் மின்சார மூன்று சக்கர வாகனங்களை குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே பன்படுத்தப்ப இருப்பதாக நிறுவனம் கூறியிருக்கின்றது. பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி, அஹமதாபாத், போபால், இந்தூர் மற்றும் லக்னோ ஆகிய நகரங்களில் முதல் கட்டமாக மின்சார டெலிவரி வாகனங்களை அமேசான் களமிறக்க இருக்கின்றது.

காற்று மாசுபாட்டை குறைக்க அமேசான் எடுத்த அதிரடி முடிவு... மகிழ்ச்சியில் மஹிந்திரா!

மஹிந்திரா நிறுவனம் இந்த புதிய மின்சார லோடு ஆட்டோவை மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. கூண்டு அமைப்பு கொண்ட, பிக்-அப் ட்ரக் மற்றும் சுற்று தடுப்பு இல்லாதது ஆகிய மூன்று விதமான தேர்வுகளிலேயே இந்த வாகனம் களமிறக்கப்பட்டிருக்கின்றது. இதன் ஆரம்ப விலை ரூ. 2.73 லட்சம் ஆகும். இது எக்ஸ்ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

காற்று மாசுபாட்டை குறைக்க அமேசான் எடுத்த அதிரடி முடிவு... மகிழ்ச்சியில் மஹிந்திரா!

இந்த வாகனத்தில் ஐபி76 தரத்திலான மின் மோட்டாரை மஹிந்திரா பயன்படுத்தியிருக்கின்றது. இது அதிகபட்சமாக 10.7 எச்பி பவரையும், 42 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 125 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

குறிப்பு: புகைப்படங்கள் அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

Most Read Articles
English summary
Amazon Chooses Mahindra Treo Zor Electric Tri-Wheeler For It's Delivery Fleet. Read In Tamil.
Story first published: Tuesday, February 23, 2021, 15:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X