டுவிட்டரை கையாள பணியாளர்களை நியமிக்கும் பிரபல கார் நிறுவனம்... எதற்காக இந்த பணியமர்வு தெரிஞ்சா வியந்துருவீங்க!

பிரபல கார் தயாரிப்பு நிறுவனம் அதன் டுவிட்டர் கணக்கைக் கையாளுவதற்கான பிரதிநிதியை நியமிக்க இருப்பதாக தகவல்கள் வெளியிட்டுள்ளது.

டுவிட்டரை கையாள பணியாளர்களை நியமிக்கும் பிரபல கார் நிறுவனம்... எதற்காக இந்த பணியமர்வு தெரிஞ்சா வியந்துருவீங்க!!

அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் கார் தயாரிப்பு நிறுவனங்களில் டெஸ்லா நிறுவனமும் ஒன்று. இது மின்சார வாகன தயாரிப்பு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனமே அதன் டுவிட்டர் கணக்கைக் கையாளுவதற்கான பிரதிநிதியை நியமிக்க இருப்பதாக தகவல் வெளியிட்டிருக்கின்றது.

டுவிட்டரை கையாள பணியாளர்களை நியமிக்கும் பிரபல கார் நிறுவனம்... எதற்காக இந்த பணியமர்வு தெரிஞ்சா வியந்துருவீங்க!!

பிரத்யேகமாக டுவிட்டர் வாயிலாக கூறப்படும் புகார்கள் மற்றும் கோரிக்கைகளுக்கு செவி கொடுப்பதற்காகவே இந்த நடவடிக்கையில் அது இறங்கியிருக்கின்றது. உலகளவில் புகழ்பெற்ற வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக டெஸ்லா உருவெடுத்திருக்கின்றது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் அதிகம் விற்பனையாகும் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் சொகுசு கார்களையே பின்னுக்கு தள்ளி முதன்மை இடத்தைப் பிடித்திருக்கின்றன.

டுவிட்டரை கையாள பணியாளர்களை நியமிக்கும் பிரபல கார் நிறுவனம்... எதற்காக இந்த பணியமர்வு தெரிஞ்சா வியந்துருவீங்க!!

மலிவு விலை மற்றும் லக்சூரி வசதி என அனைத்திலும் சூப்பர் திறன் கொண்ட மின்சார காராக டெஸ்லா நிறுவனத்தின் தயாரிப்புகள் இருக்கின்றன. இதுவே பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் தயாரிப்புகளை இவை ஓரம் கட்ட காரணமாக இருக்கின்றன. இதுமட்டுமின்றி, வாடிக்கையாளர்கள் குறையாக கூறும் அனைத்திற்குமே டெஸ்லா நிறுவனமும், அதன் சிஇஓ-வும் உடனடி செவி சாய்ப்பவர்களாக இருக்கின்றனர்.

டுவிட்டரை கையாள பணியாளர்களை நியமிக்கும் பிரபல கார் நிறுவனம்... எதற்காக இந்த பணியமர்வு தெரிஞ்சா வியந்துருவீங்க!!

இதற்கு சிறந்த உதாரணமாகவே தற்போதைய நடவடிக்கை இருக்கின்றது. டுவிட்டர் வாயிலாக வரும் புகார்களுக்கு உடனடி தீர்வு வழங்குவதற்காக பணியாளரை நியமிக்கும் நடவடிக்கையே இதற்கு மிக சிறந்த உதாரணம். இவர்கள் டெஸ்லா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கணக்கையும், டெஸ்லா மின்சார கார்கள் சம்பந்தமாக வெளி வரும் அனைத்து கருத்துகளையும் நோட்டமிடுவர்.

டுவிட்டரை கையாள பணியாளர்களை நியமிக்கும் பிரபல கார் நிறுவனம்... எதற்காக இந்த பணியமர்வு தெரிஞ்சா வியந்துருவீங்க!!

குறிப்பாக, குறையாக கூறப்படும் கருத்துகள் மற்றும் புகார்களுக்கு உடனடி பதிலை இவர்கள் தரவிருக்கின்றனர். அதாவது, கஸ்டமர்கேர் சேவையை இவர்கள் வழங்க இருக்கின்றனர். இதன் மூலம் வாடிக்கையாளர்களின் குறைகளை உடனடியாக தீர்ப்பது மட்டுமின்றி திருப்தியான சேவை அனுபவத்தையும் இவர்களால் வழங்க முடியும்.

டுவிட்டரை கையாள பணியாளர்களை நியமிக்கும் பிரபல கார் நிறுவனம்... எதற்காக இந்த பணியமர்வு தெரிஞ்சா வியந்துருவீங்க!!

டெஸ்லா நிறுவனம் அதன் பல்வேறு தகவல்களை டுவிட்டர் வலைதளத்தின் வாயிலாகவே பகிர்ந்து வருகின்றது. குறிப்பாக, இதன் சிஇஓ-வான எலன் மஸ்க், தனக்கு குழந்தை பிறந்தது முதல் அந்த குழந்தைக்கு பெயர் வைத்தது வரை அனைத்து தகவலையும் முதலில் டுவிட்டரிலேயே பகிர்ந்தார். இந்தளவிற்கு டுவிட்டரில் மிகுந்த மிகவும் ஆக்டீவான நபராக எலன் மஸ்க் இருக்கின்றார்.

டுவிட்டரை கையாள பணியாளர்களை நியமிக்கும் பிரபல கார் நிறுவனம்... எதற்காக இந்த பணியமர்வு தெரிஞ்சா வியந்துருவீங்க!!

எனவேதான், இவரை டேக் செய்தும், நிறுவனத்தையும் டேக் செய்தும் டெஸ்லா வாடிக்கையாளர்கள் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்த வண்ணம் இருக்கின்றனர். இவர்களுக்கான உடனடி பதிலைக் கொடுப்பதிலும் மஸ்க் தவறுவதில்லை. அந்தவகையில், இந்திய வருகை பற்றிய தகவலை அவர் பலமுறை டுவிட்டர் பகிர்ந்திருக்கின்றனர்.

டுவிட்டரை கையாள பணியாளர்களை நியமிக்கும் பிரபல கார் நிறுவனம்... எதற்காக இந்த பணியமர்வு தெரிஞ்சா வியந்துருவீங்க!!

ஆனால், இந்த ஆண்டுதான் டெஸ்லா நிறுவனத்தின் வருகை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆமாங்க விரைவில் இந்நிறுவனம் அதன் மின்சார கார்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்த இருக்கின்றன. கார் தயாரிப்பிற்கான உற்பத்தி ஆலை கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் அமைய இருக்கின்றது.

டுவிட்டரை கையாள பணியாளர்களை நியமிக்கும் பிரபல கார் நிறுவனம்... எதற்காக இந்த பணியமர்வு தெரிஞ்சா வியந்துருவீங்க!!

இந்த நிலையிலேயே டுவிட்டரில் வரும் புகார்களைக் கண்கானிக்கும் புதிய பணியிடத்தை டெஸ்லா நிறுவனம் அறிமுகம் செய்திருக்கின்றது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மத்தியில் கூடுதல் நற் மதிப்பை டெஸ்லா நிறுவனம் பெற்றிருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #டெஸ்லா #tesla
English summary
American EV Maker Tesla Hiring People's For Handle Twitter Complaints. Read In Tamil.
Story first published: Thursday, January 21, 2021, 13:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X