60 வருடங்களுக்கு முன்பே இப்படியொரு காரா!! அமெரிக்காவில் ஏலத்திற்கு வருகிறது!

இன்றைய ஆட்டோமொபைல் துறை பல விதங்களில் வேகமாக முன்னேறி வருகிறது. இந்த வேகத்தை பார்த்தால், எதிர்காலத்தில் கார்கள் சாலையில் மட்டுமில்லாமல் வானிலும், நீரிலும் பறக்கும் என்பது உறுதி.

60 வருடங்களுக்கு முன்பே இப்படியொரு காரா!! அமெரிக்காவில் ஏலத்திற்கு வருகிறது!

ஏனெனில் மணிக்கு 400கிமீ வேகத்தில் செல்லக்கூடிய கார்களை உருவாக்க ஆரம்பித்துவிட்டோம். ஆதலால் வானில் பறக்கும் கார்களையும், நீரில் மிதக்கும் கார்களையும் உருவாக்கும் காலம் நீண்ட தொலைவில் இல்லை. அதற்காக மிதக்கும் கார்கள் நமக்கு முற்றிலும் புதியது என நினைத்து விட வேண்டாம்.

60 வருடங்களுக்கு முன்பே இப்படியொரு காரா!! அமெரிக்காவில் ஏலத்திற்கு வருகிறது!

இரண்டாம் உலக போரின்போதே மிதக்கும் காரை வடிவமைக்கும் பணியில் இறக்கினர் என்றால் நம்ப முடிகிறதா. ஜெர்மன் நாட்டை சேர்ந்த நிறுவனம் ஒன்று தான் இந்த பணியில் இறங்கியது. எங்களுக்கு தெரிந்த வரையில், போர் கால தேவைக்காக இவ்வாறு நிலம் மற்றும் நீர் என இரண்டிலும் இயங்கக்கூடிய கார்களை உருவாக்கிய முதல் நிறுவனமாக இது இருக்க வேண்டும்.

60 வருடங்களுக்கு முன்பே இப்படியொரு காரா!! அமெரிக்காவில் ஏலத்திற்கு வருகிறது!

மற்றப்படி அந்த நிறுவனத்தின் பெயர் என்ன? அது தயாரித்த வாகனத்தின் பெயர் என்ன? உள்ளிட்டவை எதுவும் தெரியவில்லை. சில ஜெர்மன் நிறுவனங்கள் இரண்டாம் உலக போரிற்கு பிறகும் இவ்வாறான இரட்டை பயன்பாடு வாகனங்களை உருவாக்கி உள்ளன.

60 வருடங்களுக்கு முன்பே இப்படியொரு காரா!! அமெரிக்காவில் ஏலத்திற்கு வருகிறது!

அவ்வாறு உருவாக்கப்பட்ட காரை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம். அம்பிச்சார் மாடல் 770 கேப்ரியோலெட், 1965ல் உருவாக்கப்பட்ட இந்த படகாகவும் பயன்படும் வாகனத்தை ஜெர்மன் வடிவமைப்பாளர் ஹான்ஸ் ட்ரிபிள் என்பவர் உருவாக்கினார்.

60 வருடங்களுக்கு முன்பே இப்படியொரு காரா!! அமெரிக்காவில் ஏலத்திற்கு வருகிறது!

இது வருகிற ஆகஸ்ட் 13ஆம் தேதி அமெரிக்காவில், கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெறவுள்ள ஏலத்தில் ஏலம் விடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில், பின்பக்கத்தில் 1147சிசி, ட்ரையம்ப் 4-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

60 வருடங்களுக்கு முன்பே இப்படியொரு காரா!! அமெரிக்காவில் ஏலத்திற்கு வருகிறது!

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 47 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. தற்போதைய காலத்திற்கு இந்த என்ஜின் ஆற்றல் சற்று குறைவு தான். ஆனால் கிட்டத்தட்ட 56 வருடங்களுக்கு முந்தைய அந்த காலத்தை பொறுத்தவரையில் இது அதிகமாகும்.

60 வருடங்களுக்கு முன்பே இப்படியொரு காரா!! அமெரிக்காவில் ஏலத்திற்கு வருகிறது!

மேலும் 1965 அம்பிச்சார் மாடல் 770 கேப்ரியோலெட் வாகனத்தில் 4-ஸ்பீடு கியர்பாக்ஸால் இயக்கப்படும் பின்சக்கர ட்ரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இவை சாலையில் இயங்க பயன்படும். அப்போ நீரில்... இதற்காக இரு உந்துவிசையான்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை அவ்வளவு எடையுடன் கார் மிதப்பதற்கு உதவி புரிக்கின்றன.

60 வருடங்களுக்கு முன்பே இப்படியொரு காரா!! அமெரிக்காவில் ஏலத்திற்கு வருகிறது!

சாலையில் இயக்க பயன்படுத்தப்படும் ஸ்டேரிங் சக்கரத்தை தான் இந்த வாகனத்தில் நீரில் இயக்கவும் பயன்படுத்த வேண்டும். படகாக நீரில் செல்லும்போது இயங்கும் திசையை மாற்ற சக்கரங்களை இந்த வாகனம் பயன்படுத்துகிறது.

60 வருடங்களுக்கு முன்பே இப்படியொரு காரா!! அமெரிக்காவில் ஏலத்திற்கு வருகிறது!

சாலையில் அதிகப்பட்சமாக மணிக்கு 70 மைல் வேகத்தில் இயங்கக்கூடிய இந்த கார் நீரில் 7 மைல் வேகத்திற்கு தான் இயங்குமாம். 7, 70 என்ற இந்த வாகனத்தின் அதிகப்பட்ச வேகங்கள் தான் பெயரில் ‘770' ஆக உள்ளன. அம்பிச்சார் மாடல் 770 கேப்ரியோலெட், 1961இல் இருந்து 1968 வரையில் தயாரிக்கப்பட்டது.

60 வருடங்களுக்கு முன்பே இப்படியொரு காரா!! அமெரிக்காவில் ஏலத்திற்கு வருகிறது!

இந்த 7 வருடங்களில் மொத்தம் 4,000 யூனிட் அம்பிச்சார் மாடல் 770 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன. 1965ஆம் வருடத்தில் தயாரிக்கப்பட்ட அதில் ஒன்று தான் இன்னும் சில நாட்களில் அமெரிக்காவில் ஏலத்திற்கு வரவுள்ளது.

60 வருடங்களுக்கு முன்பே இப்படியொரு காரா!! அமெரிக்காவில் ஏலத்திற்கு வருகிறது!

இந்த காருக்கான ஏல தொகையாக 40,000-இல் இருந்து 50,000 அமெரிக்கன் டாலர்கள் நிர்ணயிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.30- 37 லட்சமாகும். இந்த அம்பிச்சார் வாகனத்தின் வெளிப்பக்கம் சிவப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

60 வருடங்களுக்கு முன்பே இப்படியொரு காரா!! அமெரிக்காவில் ஏலத்திற்கு வருகிறது!

அதற்கு ஏற்ப இதன் உட்புற கேபின் வெள்ளை- சிவப்பு நிறங்களில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பழமையான கிளாசிக் வாகனங்களை விரும்புபவர்களுக்கு இந்த அம்பிச்சார் மாடல் 770 மிகவும் ஏற்ற வாகனமாகும். ஏனெனில் இந்த வாகனம் நீரிலும் இயங்கக்கூடியது அல்லவா.

60 வருடங்களுக்கு முன்பே இப்படியொரு காரா!! அமெரிக்காவில் ஏலத்திற்கு வருகிறது!

ஆனால் இந்த வாகனத்தை நீரில் இறக்குவதற்கு முன்பு நீரின் அடர்த்தியை ஓட்டுனர் அளந்து கொள்வது அவசியமாகும் என ஏலத்தை நடத்தவுள்ள அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து இந்த ஏலத்தில் கலந்து கொண்டு இந்த இரட்டை-பயன்பாடு காரை வாங்குவது சுலபமான காரியம் கிடையாது. அதற்கு ஏற்ப பணத்தை செலவழிக்க தயாராக உள்ளீர்கள் என்றால், எல்லாமே சுலபமே.

Most Read Articles
English summary
Amphicar receives attraction in an era discussing flying cars
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X