மின் வாகனங்களை வாங்குவோர்க்கு மட்டும் நிதி உதவி... பிரபல நிறுவனத்தின் புதிய சேவை தொடக்கம்!

மின் வாகனங்களுக்கு மட்டும் பிரத்யேகமாக நிதி உதவி செய்யும் நிறுவனத்தை ஓர் பிரபல நிறுவனம் இந்தியாவில் தொடங்கியிருக்கின்றது. இந்நிறுவனம் குறித்த முக்கிய விபரத்தை இப்பதிவில் காணலாம், வாங்க.

மின் வாகனங்களை வாங்குவோர்க்கு மட்டும் நிதி உதவி... பிரபல நிறுவனத்தின் புதிய சேவை தொடக்கம்!

ஒமெகா சீகி மொபிலிட்டி (Omega Seiki Mobility - OSM) நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆங்லியன் ஒமெகா குழுமம் (Anglian Omega Group), மின் வாகனங்களுக்கான பிரத்யேக நிதி நிறுவனத்தை அறிமுகம் செய்து வைத்திருக்கின்றது. நாட்டிலேயே பிரத்யேகமாக மின் வாகனங்களுக்காக மட்டும் ஓர் நிதி (கடன் உதவி) நிறுவனம் தொடங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

மின் வாகனங்களை வாங்குவோர்க்கு மட்டும் நிதி உதவி... பிரபல நிறுவனத்தின் புதிய சேவை தொடக்கம்!

ஒமெகா சீகி மொபிலிட்டி ஓர் மின் வாகன தயாரிப்பு மற்றும் மின் வாகன மொபிலிட்டி நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மட்டுமே தற்போது நிதியுதவி செய்யப்படும் என தாய் நிறுவனம் ஆங்லியன் ஒமெகா குழுமம் தெரிவித்திருக்கின்றது.

மின் வாகனங்களை வாங்குவோர்க்கு மட்டும் நிதி உதவி... பிரபல நிறுவனத்தின் புதிய சேவை தொடக்கம்!

ஆம், தற்போது பிரத்யேகமாக தனது நிறுவன மின் வாகன தயாரிப்புகளுக்கு மட்டுமே நிதி உதவி (கடன் திட்டம்) அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. அதேவேலையில், மிக விரைவில் பிற நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கும் கடன் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என நிறுவனம் அறிவித்திருக்கின்றது.

மின் வாகனங்களை வாங்குவோர்க்கு மட்டும் நிதி உதவி... பிரபல நிறுவனத்தின் புதிய சேவை தொடக்கம்!

மேலும், ஆங்லியன் ஃபின்வெஸ்ட் (Anglian Finvest) என்ற பெயரில் தொடங்கப்பட்டிருக்கும் புதிய நிதி நிறுவனத்தின் வாயிலாக ஏற்கனவே ரூ. 10 கோடி மதிப்புள்ள கடன்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. பேன் இந்தியா திட்டத்தின்கீழ் இந்த சேவை தொடங்கப்பட்டிருக்கின்றது.

மின் வாகனங்களை வாங்குவோர்க்கு மட்டும் நிதி உதவி... பிரபல நிறுவனத்தின் புதிய சேவை தொடக்கம்!

கவர்ச்சிகரமான ஃபைனான்ஸ் திட்டங்கள் மற்றும் தேவைக்கேற்ப மாற்றியமைக்கும் வசதிகள் ஆகியவற்றை நிறுவனம் வழங்குகின்றது. மின் வாகன பயன்பாட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இத்தகைய பணியில் ஆங்லியன் குழுமம் களமிறங்கியிருக்கின்றது.

மின் வாகனங்களை வாங்குவோர்க்கு மட்டும் நிதி உதவி... பிரபல நிறுவனத்தின் புதிய சேவை தொடக்கம்!

ஆங்லியன் குழுமம் ரூ. 250 கோடியை நிதி நிறுவனத்திற்காக முதலீடு செய்திருக்கின்றது. சம்பளம் மற்றும் சுய தொழிலாளர்களுக்கு இந்த முதலீட்டின் வாயிலாக நிதியுதவிகள் வழங்கப்பட இருக்கின்றன. வருமான சான்று இன்றி கடன் உதவிகளை வழங்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. ஆகையால், பல தரப்பட்ட வாடிக்கையாளர்கள் இதன் வாயிலாக பலனடைவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மின் வாகனங்களை வாங்குவோர்க்கு மட்டும் நிதி உதவி... பிரபல நிறுவனத்தின் புதிய சேவை தொடக்கம்!

ஒமெகா சீகி நிறுவனம் அண்மையில் ஒற்றை சார்ஜில் 250 கிமீ தூரம் போகக் கூடிய எலெக்ட்ரிக் சரக்கு வாகனத்தை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. எம்1கேஏ (M1KA) எனும் பெயரில் அறிமுகமான இந்த வர்த்தக மின் வாகனமே இந்தியாவின் முதல் சிறிய வர்த்தக மின் வாகனம் ஆகும். இது மிக விரைவில் விற்பனைக்கு வர இருக்கின்றது. 2022 ஆண்டிற்குள் விற்பனைக்கு வந்துவிடும் என கூறப்படுகின்றது.

மின் வாகனங்களை வாங்குவோர்க்கு மட்டும் நிதி உதவி... பிரபல நிறுவனத்தின் புதிய சேவை தொடக்கம்!

டாடா ஏஸ் (Tata Ace), அசோக் லேலேண்ட் தோஸ்த் (Ashok Leyland Dost), மாருதி சுசுகி சூப்பர் கேரி (Maruti Suzuki Super Carry) மற்றும் மஹிந்திரா ஜீதோ (Mahindra Jeeto) ஆகிய எரிபொருள் எஞ்ஜின் கொண்ட மினி சரக்கு வாகனங்களுக்கு போட்டியாக எம்1கேஏ விற்பனைக்கு வர உள்ளது. டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்ட் வாயிலாக சார்ஜ் செய்தால் வெறும் நான்கு மணி நேரத்திலேயே இந்த எலெக்ட்ரிக் வாகனத்தை முழுமையாக சார்ஜ் செய்து விட முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

English summary
Anglian omega group launches anglian finvest financing arm for only ev
Story first published: Tuesday, October 12, 2021, 18:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X