ஆஹா! ஸ்கோடா குஷாக் கார் இவ்ளோ மைலேஜ் தருமா? வெளியானது அராயின் அதிகாரப்பூர்வ தகவல்!

ஸ்கோடா குஷாக் காரின் மைலேஜ் விபரம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

ஆஹா! ஸ்கோடா குஷாக் கார் இவ்ளோ மைலேஜ் தருமா? வெளியானது அராயின் அதிகாரப்பூர்வ தகவல்!

நடப்பு வாரத்தின் தொடக்கத்தில் ஸ்கோடா நிறுவனம் அதன் புதுமுக கார் மாடலான குஷாக்கினை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த கார் ரூ. 10.50 லட்சம் தொடங்கி ரூ. 17.60 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும். இவை பான் இந்தியா எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

ஆஹா! ஸ்கோடா குஷாக் கார் இவ்ளோ மைலேஜ் தருமா? வெளியானது அராயின் அதிகாரப்பூர்வ தகவல்!

இந்த விலையிலேயே ஸ்கோடா குஷாக் இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இந்த கார் ஐந்து விதமான நிறங்கள் மற்றும் மூன்று விதமான வேரியண்ட் ஆகிய தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். இத்துடன், இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளிலும் குஷாக் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.

ஆஹா! ஸ்கோடா குஷாக் கார் இவ்ளோ மைலேஜ் தருமா? வெளியானது அராயின் அதிகாரப்பூர்வ தகவல்!

ஸ்கோடா குஷாக் 1.0 லிட்டர், 3 சிலிண்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர், 4 சிலிண்டர், டிஎஸ்ஐ பெட்ரோல் ஆகிய இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளிலேயே விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த எஞ்ஜின்கள் என்ன மாதிரியான மைலேஜை வழங்கும் என்பது பற்றிய தகவலே தற்போது வெளியாகியிருக்கின்றது.

ஆஹா! ஸ்கோடா குஷாக் கார் இவ்ளோ மைலேஜ் தருமா? வெளியானது அராயின் அதிகாரப்பூர்வ தகவல்!

ஸ்கோடா குஷாக் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்ஜின் ஒரு லிட்டருக்கு 17.88 கி.மீட்டர் மைலேஜை வழங்கும் திறன் கொண்டது. இது மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட குஷாக் வெளிப்படுத்தும் மைலேஜ் திறனாகும். இதன் தானியங்கி கியர்பாக்ஸ் வேரியண்ட் 15.78 கிமீட்டரையே ஒரு லிட்டருக்கு மைலேஜாக வழங்குகிறது.

ஆஹா! ஸ்கோடா குஷாக் கார் இவ்ளோ மைலேஜ் தருமா? வெளியானது அராயின் அதிகாரப்பூர்வ தகவல்!

இந்த எஞ்ஜின் 113 பிஎச்பி மற்றும் 178 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது என்பது கூடுதல் சிறப்பு தகவலாகும். இதற்கு அடுத்தபடியாக இருக்கும் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்ஜினின் மைலேஜ் விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை.

ஆஹா! ஸ்கோடா குஷாக் கார் இவ்ளோ மைலேஜ் தருமா? வெளியானது அராயின் அதிகாரப்பூர்வ தகவல்!

அராயின் சான்றிற்காக காத்திருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. ஆம், ஸ்கோடா குஷாக் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்ஜினின் மைலேஜ் பற்றி வெளியிடப்பட்டிருக்கும் விபரமானது அராய் அமைப்பு வெளியிட்ட அதிகாரப்பூர்வ தரவாகும். ஆய்வுகளுக்கு உட்படுத்திய பின்னரே இந்த மைலேஜ் விபரத்தை அராய் வெளியிட்டுள்ளது.

ஆஹா! ஸ்கோடா குஷாக் கார் இவ்ளோ மைலேஜ் தருமா? வெளியானது அராயின் அதிகாரப்பூர்வ தகவல்!

இதைத்தொடர்ந்து, தற்போது 1.5 லிட்டர் டிஎஸ்ஐ வேரியண்டை ஆய்விற்கு உட்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஆகையால், மிக விரைவில் இந்த மேனுவல் மற்றும் தானியங்கி கியர்பாக்ஸ் வசதிக் கொண்ட இந்த எஞ்ஜின் என்ன மைலேஜை வெளிப்படுத்தும் என்ற தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆஹா! ஸ்கோடா குஷாக் கார் இவ்ளோ மைலேஜ் தருமா? வெளியானது அராயின் அதிகாரப்பூர்வ தகவல்!

புத்தம் புதிய ஸ்டைல் மற்றும் அதிக தொழில்நுட்ப வசதிகள் மிக சிறப்பான காராக ஸ்காடோ குஷாக் இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இந்த காரில் ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் மிர்ரர் லிங்க் ஆகிய தொழில்நுட்ப வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

ஆஹா! ஸ்கோடா குஷாக் கார் இவ்ளோ மைலேஜ் தருமா? வெளியானது அராயின் அதிகாரப்பூர்வ தகவல்!

இத்துடன், எலெக்ட்ரிக் சன்ரூஃரப், 10 இன்சிலான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வென்டிலேட் வசதிக் கொண்ட இருக்கை, ஒயர்லெஸ் சார்ஜர், ஆறு ஏர் பேக், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், டிஸ்க் பிரேக், ரோல்-ஓவர் பாதுகாப்பு மற்றும் டிபிஎம்ஸம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகளும் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
ARAI Reveals Skoda Kushaq Fuel Efficiency Figures. Read In Tamil.
Story first published: Wednesday, June 30, 2021, 21:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X