சுண்டி இழுக்கும் ஸ்டைல், மிரள வைக்கும் பவர்... புதிய அஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம்!

இந்திய பெரும் பணக்காரர்களின் புதிய கார் வாங்குவதற்கான தேர்வு பட்டியலில் இருந்து வந்த அஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் எஸ்யூவி இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

சுண்டி இழுக்கும் ஸ்டைல், மிரள வைக்கும் பவர்... புதிய அஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம்!

இந்தியாவில் சூப்பர் ரக எஸ்யூவி கார்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. லம்போர்கினி உரூஸ் எஸ்யூவிக்கு கிடைத்து வரும் வரவேற்பு பிற சொகுசு கார் நிறுவனங்களுக்கும் இந்தியாவில் உள்ள வர்த்தக வளம் குறித்த புரிதலை ஏற்படுத்தி உள்ளது. இதனால், சூப்பர் ரக எஸ்யூவி மார்க்கெட்டிலும் புதிய மாடல்கள் களமிறக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், தற்போது அஸ்டன் மார்ட்டின் நிறுவனம் தனது டிபிஎக்ஸ் சூப்பர் எஸ்யூவியை இன்று களமிறக்கி உள்ளது.

சுண்டி இழுக்கும் ஸ்டைல், மிரள வைக்கும் பவர்... புதிய அஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம்!

புதிய அஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் எஸ்யூவி 5,039 மிமீ நீளமும், 1,998 மிமீ அகலமும், 1,680 மிமீ உயரமும், 3,060 மிமீ வீல் பேஸ் நீளமும் பெற்றிருக்கிறது. அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் பாரம்பரியம் மிக்க டிசைன் அம்சங்களுடன் இந்த எஸ்யூவி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

சுண்டி இழுக்கும் ஸ்டைல், மிரள வைக்கும் பவர்... புதிய அஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம்!

முகப்பு க்ரில் அஸ்டன் மார்ட்டின் வாரிசு என்பதை பார்த்தவுடன் உணர்த்துகிறது. பானட்டுடன் இணைந்தாற்போல் உயர்த்தப்பட்ட அமைப்பில் ஹெட்லைட்டுகள் உள்ளன. க்ரில் அமைப்புக்கு பக்கத்தில் இருக்கும் வென்ட்டுகளில் எல்இடி பகல்நேர விளக்குகள் உள்ளன. கூரை அமைப்பு பின்புறம் தாழ்ந்து கூபே வடிவிலான தோற்றத்தை வழங்குகிறது.

சுண்டி இழுக்கும் ஸ்டைல், மிரள வைக்கும் பவர்... புதிய அஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம்!

புதிய அஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் எஸ்யூவியில் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. ஆப்பிள் கார் ப்ளே வசதி, பனோரமிக் சன்ரூஃப், வெதுவெதுப்பான வசதியை தரும் இருக்கைகள், 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை உள்ளன.

சுண்டி இழுக்கும் ஸ்டைல், மிரள வைக்கும் பவர்... புதிய அஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம்!

இந்த காரில் 360 டிகிரி கேமரா வசதி, 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 64 விதமாக வண்ணங்களில் ஒளிரும் ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், 800 வாட் சவுண்ட் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன. லெதர் அப்ஹோல்ஸ்ட்ரியும் முக்கிய அம்சமாக உள்ளது.

சுண்டி இழுக்கும் ஸ்டைல், மிரள வைக்கும் பவர்... புதிய அஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம்!

புதிய அஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் எஸ்யூவியில் இரண்டு டர்போசார்ஜர்கள் கொண்ட 4.0 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 542 பிஎச்பி பவரையும், 700 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சினுடன் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

சுண்டி இழுக்கும் ஸ்டைல், மிரள வைக்கும் பவர்... புதிய அஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம்!

புதிய அஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் எஸ்யூவி 0 - 100 கிமீ வேகத்தை 4.5 வினாடிகளில் எட்டிவிடும் வல்லமை கொண்டது. மணிக்கு 291 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது.

சுண்டி இழுக்கும் ஸ்டைல், மிரள வைக்கும் பவர்... புதிய அஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம்!

இந்த எஸ்யூவியில் ஆன்ரோடு பயன்பாட்டிற்காக 4 டிரைவிங் மோடுகளும், ஆஃப்ரோடு பயன்பாட்டிற்காக 2 டிரைவிங் மோடுகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த எஸ்யூவி 500 மிமீ ஆழம் வரை நீர் நிலைகளை கடந்து செல்லும் திறன் வாய்ந்தது.

சுண்டி இழுக்கும் ஸ்டைல், மிரள வைக்கும் பவர்... புதிய அஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம்!

புதிய அஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் எஸ்யூவிக்கு ரூ.3.82 கோடி எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பென்ட்லீ பென்டைகா, லம்போர்கினி உரூஸ், ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன், ஆடி ஆர்எஸ் க்யூ8 மற்றும் போர்ஷே கேயென் எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles
English summary
Aston Martin has launched DBX luxury SUV in India and priced at Rs.3.82 Crore (Ex-Showroom).
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X