வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தாமாக முன் வந்து உதவும் பிரபல நிறுவனம்... எந்த கட்டணமும் இல்ல!

சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தாமாக முன் வந்து உதவியை அறிவித்திருக்கின்றது பிரபல நிறுவனம். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம், வாங்க.

சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வாகனத்திற்கு தாமாக முன் வந்து ரோடு சைடு அசிஸ்டன்ஸ் அறிவித்த பிரபல நிறுவனம்!

பிரபல வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று சென்னை வெள்ளத்தில் பாதிப்பைச் சந்தித்த தனது வாடிக்கையாளர்களுக்கு உதவி கரம் நீட்டும் வகையில் விதமாக ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றது. கடந்த சில தினங்களாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பரவலாக பொழிந்த வண்ணம் இருக்கின்றது.

சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வாகனத்திற்கு தாமாக முன் வந்து ரோடு சைடு அசிஸ்டன்ஸ் அறிவித்த பிரபல நிறுவனம்!

குறிப்பாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை கடும் மழை தலை கீழாக புரட்டிப் போட்டிருக்கின்றது. அதிலும், சென்னையில் ஏற்பட்ட பாதிப்புகள் மிக கடுமையானதாக காட்சியளிக்கின்றன. இதனால், தலைநகரமே வெள்ளத்தில் மூழ்கி தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது. இதில், வாகனங்கள் பல நீரில் பெருத்த சேதத்தைச் சந்தித்திருக்கின்றன.

சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வாகனத்திற்கு தாமாக முன் வந்து ரோடு சைடு அசிஸ்டன்ஸ் அறிவித்த பிரபல நிறுவனம்!

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் தாமாக முன் வந்து இலவச சாலையோர உதவிகளை வழங்க இருப்பதாக பிரபல நிறுவனம் ஒன்று அறிவித்திருக்கின்றது. ஆடம்பர கார் உற்பத்தி நிறுவனமான ஆடி நிறுவனமே இந்த அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம் ஆகும்.

சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வாகனத்திற்கு தாமாக முன் வந்து ரோடு சைடு அசிஸ்டன்ஸ் அறிவித்த பிரபல நிறுவனம்!

இந்த இலவச சாலையோர உதவி வரும் 30ம் தேதி வரை கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. நகரம் முழுவதிலும் 24×7 இச்சேவைக் கிடைக்கும். தற்போதும் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவடங்களில் பரவலாக மழை பொழிந்து வருகின்றது. இதனால், குறிப்பிட்ட சில பகுதிகளில் மழை நீர் வடியாத நிலை தென்படுகின்றது.

சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வாகனத்திற்கு தாமாக முன் வந்து ரோடு சைடு அசிஸ்டன்ஸ் அறிவித்த பிரபல நிறுவனம்!

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே சேதத்தினால் சிக்கி தவிக்கும் வாடிக்கையாளர்களுக்கு உதவும் பொருட்டு சொகுசு கார் உற்பத்தியாளர் இந்த சாலையோர உதவி திட்டத்தை அறிவித்திருக்கின்றது. இது வரவேற்கதக்க அறிவிப்பாகும். மழை நீரில் பாதித்து வாகனங்கள் பல நகரகூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றன.

சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வாகனத்திற்கு தாமாக முன் வந்து ரோடு சைடு அசிஸ்டன்ஸ் அறிவித்த பிரபல நிறுவனம்!

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே யாரும் எதிர்பார்த்திராத ஓர் அறிவிப்பை ஆடி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து நிறுவனத்தின் இந்தியாவிற்கான தலைவரான பல்பீர் சிங் தில்லான் கூறியதாவது, "சென்னை கடும் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியுள்ளது.

சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வாகனத்திற்கு தாமாக முன் வந்து ரோடு சைடு அசிஸ்டன்ஸ் அறிவித்த பிரபல நிறுவனம்!

இந்நிலையில், நகரத்தில் உள்ள எங்களின் வாடிக்கையாளர்களுக்கு உதவ நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். எங்கள் சாலையோர உதவி சேவை எங்களின் வாடிக்கையாளர்களை இக்கட்டான சூழ்நிலையில் இருந்து பாதுகாப்பாக மீட்டுக் கொண்டுவர உதவும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்" என்றார்.

சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வாகனத்திற்கு தாமாக முன் வந்து ரோடு சைடு அசிஸ்டன்ஸ் அறிவித்த பிரபல நிறுவனம்!

ஆடி நிறுவனம் மிக விரைவில் இந்தியாவில் அதன் புதுப்பிக்கப்பட்ட க்யூ5 கார் மாடலை விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. வரும் 23ம் தேதி இதனை அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. கணிசமான தோற்ற மாறுதல்களை இக்கார் பெற்றிருக்கின்றது.

சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வாகனத்திற்கு தாமாக முன் வந்து ரோடு சைடு அசிஸ்டன்ஸ் அறிவித்த பிரபல நிறுவனம்!

தற்போது, விற்பனையில் இருக்கும் க்யூ8 கார் மாடலைத் தழுவி இது அப்டேட் செய்யப்பட்டிருக்கின்றது. இத்தகைய மாற்றம் கொண்ட க்யூ5 கார் மாடலையே நிறுவனம் இன்னும் சில தினங்களில் நாட்டில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இப்புதிய வெர்ஷன் க்யூ5 காரில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இடம் பெற இருக்கின்றது. இதே எஞ்ஜினே ஆடி ஏ6 மாடலிலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #ஆடி #audi
English summary
Audi announces complimentary roadside assistance for chennai customers
Story first published: Saturday, November 13, 2021, 19:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X