இந்திய சந்தைக்கான இ-ட்ரான் பேட்டரி கார்களை வெளியிட்டது ஆடி!! அறிமுகம் மிக விரைவில்...

ஆடி நிறுவனம் இந்திய சந்தைக்கான அதன் புதிய இ-ட்ரான் எஸ் மற்றும் இ-ட்ரான் எஸ் ஸ்போர்ட்பேக் கார்களை பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளது. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்திய சந்தைக்கான பேட்டரி கார்களை வெளியிட்டது ஆடி!! அறிமுகம் மிக விரைவில்...

ஆடியின் முதல் பேட்டரி எலக்ட்ரிக் வாகனங்களாக இந்த இ-ட்ரான் கார்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இவற்றில் மூன்று எலக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றின் உதவியுடன் அதிகப்பட்சமாக 973 என்எம் டார்க் திறன் வரையில் கார் பெற முடியும்.

இந்திய சந்தைக்கான பேட்டரி கார்களை வெளியிட்டது ஆடி!! அறிமுகம் மிக விரைவில்...

அதேபோல் ஸ்மார்டான ட்ரைவ் கண்ட்ரோலினால் இந்த இரு அனைத்து-சக்கர ட்ரைவ் கார்களின் ஹேண்ட்லிங் & வளைவுகளில் திருப்பம் உண்மையில் அருமையானதாக இருக்கும். ஆடியின் இந்த பேட்டரி கார்கள் 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 4.5 வினாடிகளில் எட்டிவிடக்கூடியவை.

இந்திய சந்தைக்கான பேட்டரி கார்களை வெளியிட்டது ஆடி!! அறிமுகம் மிக விரைவில்...

இ-ட்ரான் எஸ் காரின் அதிகப்பட்ச வேகம் 210kmph ஆகும். ஏற்கனவே கூறியதுதான், இ-ட்ரான் மாடலின் இந்த புதிய எஸ் கார்களில் பின்பக்கத்தில் இரண்டு, முன்பக்கத்தில் ஒன்று என மொத்தம் மூன்று எலக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்திய சந்தைக்கான பேட்டரி கார்களை வெளியிட்டது ஆடி!! அறிமுகம் மிக விரைவில்...

ஆனால் இதில் நார்மல் ட்ரைவிங் மோடில் பின்பக்க மோட்டார்கள் மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் என ஆடி தெரிவித்துள்ளது. எனவே இந்த இ-ட்ரான் எஸ் மாடல்களில் பின்பக்க எலக்ட்ரிக் மோட்டார்களே பெரும்பாலும் பயன்பாட்டில் இருக்கும்.

இந்திய சந்தைக்கான பேட்டரி கார்களை வெளியிட்டது ஆடி!! அறிமுகம் மிக விரைவில்...

முன்பக்க எலக்ட்ரிக் மோட்டார் அதிக வேகத்தில் செல்வதற்காக, எப்போது கூடுதல் செயல்படுதிறனை ஓட்டுனர் பெற விரும்புகிறாரோ அப்போது செயல்பாட்டிற்கு வருமாம். இந்த இ-ட்ரான் எஸ் கார்களில் கேபின் நப்பா லெதரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்திய சந்தைக்கான பேட்டரி கார்களை வெளியிட்டது ஆடி!! அறிமுகம் மிக விரைவில்...

இரு பெரிய மைய திரைகளுடன் டிஜிட்டல் எம்.எம்.ஐ தொடு ரெஸ்பான்ஸ் கண்ட்ரோல் சிஸ்டத்தை கொண்டுள்ள இந்த பேட்டரி கார்களில் ஓட்டுனருக்கு எதிரே ஆடி விர்டியுவல் காக்பிட் வழங்கப்பட்டுள்ளது. மேலும், காரின் எலக்ட்ரிக் ட்ரைவ் செயல்பாடுகளை கட்டுப்படுத்த சிறப்பு திரை ஒன்றும் ஓட்டுனருக்கென கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய சந்தைக்கான பேட்டரி கார்களை வெளியிட்டது ஆடி!! அறிமுகம் மிக விரைவில்...

இவை போதாது என்போர்க்காக, ஓட்டுனருக்கு தேவையான முக்கிய விபரங்களை காட்ட ஹெட்-அப் திரை வழங்கப்பட்டுள்ளது. இது ஓட்டுனர் விபரங்களை தெளிவாக பார்க்கும் வகையில் முன்பக்க கண்ணாடியை திரையாக பயன்படுத்தி கொள்ளக்கூடியது.

இந்திய சந்தைக்கான பேட்டரி கார்களை வெளியிட்டது ஆடி!! அறிமுகம் மிக விரைவில்...

இவற்றுடன் ஒலுஃப்சென் சவுண்ட் சிஸ்டம், ப்ரீமியம் பேங், வெவ்வேறு விதமான பவர் மோட்கள் மற்றும் ரீஜெனரேட்டிவ் ப்ரேக்கிங் சிஸ்டம், பல நிலைகளுடன் க்ளைமேட் கண்ட்ரோல், குரல் கட்டுப்பாட்டு இணைப்பு தொழிற்நுட்பம், எலக்ட்ரிக் சன்ரூஃப் போன்றையும் இந்த பேட்டரி கார்களில் வழங்கப்பட்டுள்ளன.

இந்திய சந்தைக்கான இ-ட்ரான் பேட்டரி கார்களை வெளியிட்டது ஆடி!! அறிமுகம் மிக விரைவில்...

ஆடி இ-ட்ரானின் இந்திய அறிமுகம் நீண்ட காலமாக கிடப்பில் உள்ளது. சமீபத்தில் தான் ஆடியின் அதிகாரப்பூர்வ இந்திய இணையத்தள பக்கத்திற்கு இ-ட்ரானின் பெயர் கொண்டுவரப்பட்டது. ஆடியின் இந்த பேட்டரி எலக்ட்ரிக் காருக்கு மெர்சிடிஸ்-பென்ஸ் இக்யுசி, ஜாகுவார் ஐ-பேஸ் மற்றும் வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் முக்கிய போட்டி மாடல்களாக விளங்கவுள்ளன.

Most Read Articles
மேலும்... #ஆடி #audi
English summary
Audi e-Tron Electric SUV Listed On Indian Website Ahead Of Launch: Will Rival Mercedes-Benz EQC
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X