Audi e-tron GT எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்... இந்த காரோட விலையில் ஒரு லக்சூரி வீட்டையே வாங்கிடலாம்!

Audi e-tron GT எலெக்ட்ரிக் கார் சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இதுகுறித்த முக்கிய விபரத்தைக் கீழே காணலாம்.

Audi e-tron GT எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்... இந்த காரோட விலையில் ஒரு லக்சூரி வீட்டையே வாங்கிடலாம்!

பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான ஆடி (Audi), அதன் இ-ட்ரான் ஜிடி (e-tron GT) எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இக்காருக்கான முன்பதிவுகளை நிறுவனம், அதன் அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் வாயிலாக தொடங்கியது.

Audi e-tron GT எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்... இந்த காரோட விலையில் ஒரு லக்சூரி வீட்டையே வாங்கிடலாம்!

இந்த நிலையில், இப்புதிய எலெக்ட்ரிக் காரை அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது நிறுவனத்தின் மூன்றாம் பூஜ்ஜிய உமிழ்வு கொண்ட காராகும். முன்னதாக நிறுவனம் இ-ட்ரான் எஸ்யூவி மற்றும் இ-ட்ரான் ஸ்போர்ட்பேக் ஆகிய இரு எலெக்ட்ரிக் கார்களை ஆடி விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தகுந்தது.

Audi e-tron GT எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்... இந்த காரோட விலையில் ஒரு லக்சூரி வீட்டையே வாங்கிடலாம்!

இதனைத் தொடர்ந்தே இந்தியாவிற்கான மூன்றாவது மின்சார தயாரிப்பாக தற்போது புதிய இ-ட்ரான் ஜிடி-ஐ ஆடி விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஆரம்ப நிலை வேரியண்டின் விலை ரூ. 1.79 கோடிக்கு இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும். இதன் உயர்நிலை வேரியண்டிற்கு அறிமுக விலையாக ரூ. 2.04 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Audi e-tron GT எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்... இந்த காரோட விலையில் ஒரு லக்சூரி வீட்டையே வாங்கிடலாம்!

இவை எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இரு விதமான வேரியண்டுகளில் ஆடி இ-ட்ரான் ஜிடி விற்பனைக்குக் கிடைக்கம். குவாட்ரோ (quattro) மற்றும் ஆர்எஸ் (RS) (அதிக திறனை வெளிப்படுத்தக் கூடியது) ஆகிய தேர்வுகளிலேயே இ-ட்ரான் ஜிடி விற்பனைக்குக் கிடைக்கிறது.

Audi e-tron GT எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்... இந்த காரோட விலையில் ஒரு லக்சூரி வீட்டையே வாங்கிடலாம்!

இக்காரில் 83.7 kWh திறன் கொண்ட லித்தியம்-அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. மேலும், இது ஓர் 4 கதவுகள் கொண்ட கூபே ரக எலெக்ட்ரிக் காராகும். மிக சிறந்த கவர்ச்சியான தோற்றத்திற்காக 20 இன்ச் அலாய் வீல், எல்இடி மின் விளக்கு, 3 ஸ்போக்குகள் கொம்ட ஸ்டியரிங் வீல், 3 ஸோன் ஏசி, எலெக்ட்ரிகல்லி ஆபரேட் செய்யக் கூடிய பூட் லிட், 12.3 இன்சிலான விர்சுவல் காக்பிட், 10.1 இன்சிலான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் தொடுதிரை உள்ளிட்ட அம்சங்கள் இடம் வழங்கப்பட்டிருக்கின்றன.

Audi e-tron GT எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்... இந்த காரோட விலையில் ஒரு லக்சூரி வீட்டையே வாங்கிடலாம்!

இவற்றுடன் மற்றுமொரு சிறப்பு விஷயமாக ஆடி இ-ட்ரான் ஜிடி ஆர்எஸ் வேரியண்டில் மேட்ரிக்ஸ் ரக எல்இடி ஹெட்லைட் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. மேலும், பேங் மற்றும் ஒலுப்சென் சவுண்ட் சிஸ்டம், அனைத்து வீல்களும் இயங்கும் வசதி மற்றும் அடாப்டீப் ஏர் சஸ்பென்ஷன் உள்ளிட்ட அம்சங்களை பிரத்யேகமாக ஆடி இ-ட்ரான் ஜிடி ஆர்எஸ் வேரியண்டில் நிறுவனம் வழங்கியிருக்கின்றது.

Audi e-tron GT எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்... இந்த காரோட விலையில் ஒரு லக்சூரி வீட்டையே வாங்கிடலாம்!

கூடுதலாக, ஸ்போர்ட்ஸ் சவுண்ட் அம்சம், செராமிக் பிரேக், ஆடி லேசர் மின் விளக்கு, கார்பன்-ஃபைபர் ரூஃப், கருப்பு நிற தீம், ஆர்எஸ் ஸ்டைலிங் பேக் மற்றும் ஸ்போர்ட்ஸ் இருக்கை ப்ரோ ஆகியவையும் வழங்கப்படுகின்றன.

Audi e-tron GT எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்... இந்த காரோட விலையில் ஒரு லக்சூரி வீட்டையே வாங்கிடலாம்!

மிக சிறந்த திறன் வெளிப்பாட்டிற்காக இ-ட்ரான் ஜிடி குவாட்ரோ வேரியண்டில் 390 kW (523 பிஎச்பி) மற்றும் 630 என்எம் டார்க் திறனை வெளியேற்றக் கூடிய மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த மின் மோட்டார் வெறும் 4.1 செகண்டுகளிலேயே மணிக்கு பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிமீ எனும் வேகத்தில் இயங்கக் கூடியது.

Audi e-tron GT எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்... இந்த காரோட விலையில் ஒரு லக்சூரி வீட்டையே வாங்கிடலாம்!

இதைவிட சற்று காஸ்ட்லி மாடலாக காட்சியளிக்கும் ஆர்எஸ் வேரியண்ட் அதிகபட்சமாக 475 kW (637 பிஎச்பி) மற்றும் 830 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. இது வெறும் 3.3 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டக் கூடியது ஆகும்.

Audi e-tron GT எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்... இந்த காரோட விலையில் ஒரு லக்சூரி வீட்டையே வாங்கிடலாம்!

எஞ்ஜின் திறன் வெளிப்பாடு மற்றும் சிறப்ப வசதிகளில் மாறுபட்டு காணப்படுவதைப் போலவே ரேஞ்ஜ் வெளிப்பாட்டிலும் இரு வேரியண்டுகளும் வித்தியாசத்துடன் காணப்படுகின்றன. இ-ட்ரான் ஜிடி குவாட்ரோ வேரியண்ட் அதிகபட்சமாக ஓர் முழுமையான சார்ஜில் 388 கிமீ தொடங்கி 500 கிமீ தூரம் வரை ரேஞ்ஜ் வழங்கும்.

Audi e-tron GT எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்... இந்த காரோட விலையில் ஒரு லக்சூரி வீட்டையே வாங்கிடலாம்!

இதேபோல், ஆர்எஸ் வேரியண்ட் 401 கிமீ தொடங்கி 481 கிமீ வரை ரேஞ்ஜை வழங்கக் கூடிய திறனைப் பெற்றிருக்கின்றது. இரு வேரியண்டிற்கும் 800வோல்ட் சார்ஜிங் சிஸ்டம் வழங்கப்பட்டிருக்கின்றது. இதனைக் கொண்டு 270கிலோவாட் மின்சார திறன் கொண்ட டிசி சார்ஜிங் மையங்களில்கூட சார்ஜ் செய்து கொள்ள முடியும். அவ்வாறு சார்ஜ் செய்யும்போது வெறும் 22.5 நிமிடங்களில் 5சதவீத சார்ஜ் திறனில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜை ஏற்றிக் கொள்ள முடியும்.

Audi e-tron GT எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்... இந்த காரோட விலையில் ஒரு லக்சூரி வீட்டையே வாங்கிடலாம்!

அதேவேலையில், 11kW AC சார்ஜிங் மையங்களிலும் நம்மால் சார்ஜ் செய்து கொள்ள முடியும். இதன் வாயிலாக சார்ஜ் செய்யும்போது அதிகபட்சமாக 9.5 மணி நேரங்களை ஆடி இ-ட்ரான் ஜிடி எலெக்ட்ரிக் கார்கள் எடுத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதுவே, 22 kW AC சார்ஜிங் மையத்தில் வைத்து சார்ஜ் செய்தால் 5 மணி நேரங்களில் முழுமையாக சார்ஜேற்றிவிட முடியும்.

Audi e-tron GT எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்... இந்த காரோட விலையில் ஒரு லக்சூரி வீட்டையே வாங்கிடலாம்!

மற்ற கார்களைப் போன்றில்லாமல் ஆடி இ-ட்ரான் ஜிடி எலெக்ட்ரிக் காரில் முன் மற்றும் பின் பக்கத்தில் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டிருக்கின்றது. பின்பக்கத்தில் இருக்கும் 405 லிட்டரும், முன் பக்கத்தில் 85 லிட்டர் ஸ்டோரேஜ் வசதியும் வழங்கப்பட்டிருக்கின்றது. இத்துடன் ஒன்பது ஏர் பேக், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா உடன் கூடிய பார்க் அசிஸ்ட் மற்றும் அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன.

Most Read Articles
மேலும்... #ஆடி #audi
English summary
Audi e tron gt ev launched in india at rs 1 79 crore
Story first published: Wednesday, September 22, 2021, 17:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X