உலகின் மிகவும் அழகிய கார் பட்டத்தை தட்டி சென்ற ஆடி மின்சார கார்! அட இந்த மாடலுக்குதான் பட்டம் தந்திருக்காங்களா

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் ஆடி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் ஒன்று உலகின் மிகவும் அழகிய கார் என்ற பட்டத்தைச் சூடியிருக்கின்றது. இக்கார் பற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் காணலாம், வாங்க.

உலகின் மிகவும் அழகிய கார் பட்டத்தை தட்டி சென்ற ஆடி மின்சார கார்! அட இந்த மாடலுக்குதான் பட்டம் தந்திருக்காங்களா!!

மிகவும் நேர்த்தியான மெல்லிய ஏரோடைனமிக் தோற்றம், கவர்ச்சிகரமான க்ரில் மெல்லிய இழை போன்ற ஹெட்லைட் மற்றும் டர்பைன் போன்ற அலாய் வீல்கள் ஆகியவற்றைக் கொண்ட காராக ஆடி இ-ட்ரான் ஜிடி இருக்கின்றது. இது ஓர் மின்சார வாகனம் ஆகும். முன்னதாக நாம் பார்த்ததைப் போன்ற பன்முக சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்த கார் உலகின் மிகவும் அழகான கார் என்ற பட்டத்தைத் தற்போது தட்டிச் சென்றிருக்கின்றது.

உலகின் மிகவும் அழகிய கார் பட்டத்தை தட்டி சென்ற ஆடி மின்சார கார்! அட இந்த மாடலுக்குதான் பட்டம் தந்திருக்காங்களா!!

கோல்டன் ஸ்டியரிங் வீல் (Golden Steering Wheel) எனப்படும் ஜெர்மனியின் 2021 கோல்டன்ஸ் லென்க்ராட் (Goldenes Lenkrad)இன் 2021 ஆண்டிற்கான உலகின் அழகிய கார் என்ற பட்டத்தை ஆடி இ-ட்ரான் ஜிடி வென்றிருக்கின்றது. ஒட்டுமொத்தமாக 69 கார்களுக்கு எதிராக இந்த போட்டியில் களந்துக் கொண்டு ஆடி இ-ட்ரான் ஜிடி வெற்றியைக் கண்டிருக்கின்றது.

உலகின் மிகவும் அழகிய கார் பட்டத்தை தட்டி சென்ற ஆடி மின்சார கார்! அட இந்த மாடலுக்குதான் பட்டம் தந்திருக்காங்களா!!

வாக்களிப்பின் அடிப்படையிலேயே இந்த வெற்றி தீர்மானம் செய்யப்பட்டிருக்கின்றது. ஆடி இ ட்ரான் ஜிடி காருக்கு ஆட்டோ பிள்ட் (Auto Bild) இதழ் வாசகர்கள் அதிகளவு வாக்குகளை வழங்கியிருக்கின்றனர். அதன் அடிப்படையிலேயே மின்சார கார் இ-ட்ரான் ஜிடி உலகின் அழகிய காராக தேர்வு செய்யப்பட்டிருக்கின்றது.

உலகின் மிகவும் அழகிய கார் பட்டத்தை தட்டி சென்ற ஆடி மின்சார கார்! அட இந்த மாடலுக்குதான் பட்டம் தந்திருக்காங்களா!!

70 கார்களும் ஒட்டுமொத்தமாக 12 பிரிவுகளில் ஒன்றுக்கு ஒன்று எதிராக போட்டியிட்டன. இதில், அழகான கார் என்ற தலைப்பிற்கே வாசகர்கள் வாயிலாக நேரடியாக வாக்கு சேகரிக்கப்பட்டு அதற்கான பட்டம் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆகையால், இந்த தீரப்பு மக்கள் வழங்கி தீர்ப்பாக பார்க்கப்படுகின்றது.

உலகின் மிகவும் அழகிய கார் பட்டத்தை தட்டி சென்ற ஆடி மின்சார கார்! அட இந்த மாடலுக்குதான் பட்டம் தந்திருக்காங்களா!!

இதுமட்டுமின்றி 2022ம் ஆண்டிற்கான ஜெர்மனின் கார் ஆஃப் தி இயர் என்ற விருதையும் லக்சூரி கார் பிரிவில் ஆடி இ-ட்ரான் ஜிடி பெற்றிருக்கின்றது. ஆகையால், இந்த காரின் மீதான சற்றே அதிகரித்துள்ளது. எதிர்காலத்தில் சொகுசு உற்பத்தியாளரான ஆடி நிறுவனம் வெறும் மின்சார கார்களை மட்டுமே தயாரிக்க இருக்கின்றது.

உலகின் மிகவும் அழகிய கார் பட்டத்தை தட்டி சென்ற ஆடி மின்சார கார்! அட இந்த மாடலுக்குதான் பட்டம் தந்திருக்காங்களா!!

மிக சிறந்த விருதை பெற்றிருக்கும் இக்கார் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆமாங்க, ஆடி இ-ட்ரான் ஜிடி எலெக்ட்ரிக் கார் இந்திய மின் வாகன சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இக்காரை நிறுவனம் நடப்பாண்டு செப்டம்பர் மாத்திலேயே நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கியது.

உலகின் மிகவும் அழகிய கார் பட்டத்தை தட்டி சென்ற ஆடி மின்சார கார்! அட இந்த மாடலுக்குதான் பட்டம் தந்திருக்காங்களா!!

இக்கார் ரூ. 1.79 கோடி என்ற உச்சபட்ச விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இது மிக சிறந்த மற்றும் அதிக திறனை வெளிப்படுத்தக் கூடிய எலெக்ட்ரிக் கார் மாடலாகும். ஆடி இ-ட்ரான் ஜிடி நிறுவனத்தின் மூன்றாம் பூஜ்ஜிய உமிழ்வு வசதிக் கொண்ட காராகும்.

உலகின் மிகவும் அழகிய கார் பட்டத்தை தட்டி சென்ற ஆடி மின்சார கார்! அட இந்த மாடலுக்குதான் பட்டம் தந்திருக்காங்களா!!

முன்னதாக, நிறுவனம் இ-ட்ரான் எஸ்யூவி மற்றும் இ-ட்ரான் ஸ்போர்ட்பேக் ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் கார்களை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தகுந்தது. குவாட்ரோ (quattro) மற்றும் ஆர்எஸ் (RS) எனும் இரு விதமான தேர்வுகளில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கும்.

உலகின் மிகவும் அழகிய கார் பட்டத்தை தட்டி சென்ற ஆடி மின்சார கார்! அட இந்த மாடலுக்குதான் பட்டம் தந்திருக்காங்களா!!

இதில், ஆர்எஸ் தேர்வானது நிறுவனதின் மிக அதிக திறன் வெளிப்பாடுக் கொண்ட வெர்ஷனாகும். அதாவது குவாட்ரோ தேர்வைக் காட்டிலும் அதிக திறனை அது வெளிப்படுத்தும். இந்த மிகவும் கவர்ச்சிகரமான எலெக்ட்ரிக் காரில் மிக கவர்ச்சிகரமான அம்சங்கள் பல சேர்க்கப்பட்டிருக்கின்றன.

உலகின் மிகவும் அழகிய கார் பட்டத்தை தட்டி சென்ற ஆடி மின்சார கார்! அட இந்த மாடலுக்குதான் பட்டம் தந்திருக்காங்களா!!

அந்தவகையில், 20 இன்ச் அலாய் வீல், எல்இடி மின் விளக்கு, 3 ஸ்போக்குகள் கொம்ட ஸ்டியரிங் வீல், 3 ஸோன் ஏசி, எலெக்ட்ரிகல்லி ஆபரேட் செய்யக் கூடிய பூட் லிட், 12.3 இன்சிலான விர்சுவல் காக்பிட், 10.1 இன்சிலான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் தொடுதிரை உள்ளிட்ட அம்சங்கள் இடம் வழங்கப்பட்டுள்ளன.

உலகின் மிகவும் அழகிய கார் பட்டத்தை தட்டி சென்ற ஆடி மின்சார கார்! அட இந்த மாடலுக்குதான் பட்டம் தந்திருக்காங்களா!!

இத்துடன், ஜிடி ஆர்எஸ் வேரியண்டில் மேட்ரிக்ஸ் ரக எல்இடி ஹெட்லைட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து, ஸ்போர்ட்ஸ் சவுண்ட் சிஸ்டம், செராமிக் பிரேக், ஆடி லேசர் மின் விளக்கு, கார்பன்-ஃபைபர் ரூஃப், கருப்பு நிற தீம் ஆகியவற்றாலும் இக்கார் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது.

Most Read Articles

English summary
Audi e tron gt wins world s most beautiful car title at 2021 goldenes lenkrad in germany
Story first published: Thursday, November 11, 2021, 13:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X