ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் காரின் விலை அதிரடியாக ரூ.22 லட்சம் அதிகரிப்பு!! மற்ற ஆடி கார்களின் விலைகளும் உயர்ந்தன

ஆடி இந்தியா நிறுவனம் அதன் குறிப்பிட்ட சில மாடல்களின் விலைகளை இந்த 2021 நவம்பர் மாதத்தில் இருந்து அதிகரித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் காரின் விலை அதிரடியாக ரூ.22 லட்சம் அதிகரிப்பு!! மற்ற ஆடி கார்களின் விலைகளும் உயர்ந்தன

இந்திய சந்தையில் பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி அதன் சில கார்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை திருத்தியமைத்துள்ளது. இந்த ஆடி கார்களில் ஏ4, ஏ6, க்யூ8, ஆர்.எஸ்.க்யூ8, ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக், இ-ட்ரான், ஆர்எஸ்5 மற்றும் எஸ்5 ஸ்போர்ட்பேக் உள்ளிட்டவை அடங்குகின்றன.

ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் காரின் விலை அதிரடியாக ரூ.22 லட்சம் அதிகரிப்பு!! மற்ற ஆடி கார்களின் விலைகளும் உயர்ந்தன

மற்றப்படி ஆடி க்யூ2 எஸ்யூவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ரூ.34.99 லட்சமாகவே தொடர்கிறது. ஆடி ஏ4-இல் இருந்து ஆரம்பிப்போம். அப்டேட் செய்யப்பட்ட ஏ4 மாடல் இந்த ஆண்டு துவக்கத்தில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. ப்ரீமியம் ப்ளஸ் மற்றும் டெக்னாலஜி என்கிற இரு விதமான வேரியண்ட்களில் இந்த ஆடி செடான் கார் நம் நாட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் காரின் விலை அதிரடியாக ரூ.22 லட்சம் அதிகரிப்பு!! மற்ற ஆடி கார்களின் விலைகளும் உயர்ந்தன

இதில் பிரீமியம் ப்ளஸ் வேரியண்ட்டின் விலை தான் உயர்த்தப்பட்டுள்ளதே தவிர்த்து, டெக்னாலஜி வேரியண்ட்டின் விலையில் கை வைக்கப்படவில்லை. ஏ4 ப்ரீமியம் ப்ளஸின் விலை அதிரடியாக ரூ.50,000 உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு ஆடி ஏ4-இன் ஆரம்ப விலை ரூ.43.19 லட்சமாக இருந்தது. ஏ4 மாடலை காட்டிலும் அளவில் பெரிய ஆடி செடனான ஏ6 மாடலும் மேற்கூறப்பட்ட இரு வேரியண்ட்களில் தான் விற்பனை செய்யப்படுகிறது.

ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் காரின் விலை அதிரடியாக ரூ.22 லட்சம் அதிகரிப்பு!! மற்ற ஆடி கார்களின் விலைகளும் உயர்ந்தன

இதில் பிரீமியம் ப்ளஸ் வேரியண்ட்டின் விலை ரூ.70,000-மும், டெக்னாலஜி வேரியண்ட்டின் விலை ரூ.84,000-மும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலை அதிகரிப்பிற்கு முன்பு வரையில் ஆடி ஏ6 செடான் மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.57.04 லட்சத்தில் இருந்து ரூ.61.77 லட்சம் வரையில் இருந்தன. விற்பனையில் ஆடி ஏ6-க்கு மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஏ35 முக்கிய போட்டியாக விளங்குகிறது.

ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் காரின் விலை அதிரடியாக ரூ.22 லட்சம் அதிகரிப்பு!! மற்ற ஆடி கார்களின் விலைகளும் உயர்ந்தன

அப்படியே ஆடியின் எஸ்யூவி கார்கள் வரிசைக்கு வந்தால், க்யூ8 செலபிரேஷன் காரின் ஆரம்ப விலை ரூ.1.01 லட்சமும், இதன் 55 டி.எஃப்.எஸ்.ஐ ட்ரிம் நிலையின் விலை ரூ.1.35 லட்சமும் உயர்த்தப்பட்டுள்ளன. க்யூ6 செலபிரேஷன் காரின் விலை தற்சமயம் ஏறக்குறைய ரூ.1 கோடியாகவும், அதன் 55 டி.எஃப்.எஸ்.ஐ குவாட்ரோ வேரியண்ட்டின் விலை ரூ.1.36 கோடியாகவும் உள்ளன.

ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் காரின் விலை அதிரடியாக ரூ.22 லட்சம் அதிகரிப்பு!! மற்ற ஆடி கார்களின் விலைகளும் உயர்ந்தன

ஆனால் இதனை காட்டிலும் செயல்திறன்மிக்க ஆடி எஸ்யூவி மாடலான ஆர்.எஸ்.க்யூ8-இன் விலை இந்த விலை உயர்விற்கு முன்பு ரூ.2.07 கோடியாக இருந்தது. ஆனால் தற்போது முன்பை காட்டிலும் ரூ.2.05 லட்சம் விலைமிக்கதாக கொண்டுவரப்பட்டுள்ளதால், ஆடி ஆர்.எஸ் க்யூ8 காரின் விலை கிட்டத்தட்ட ரூ.21 மில்லியனை தொட்டுள்ளது.

ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் காரின் விலை அதிரடியாக ரூ.22 லட்சம் அதிகரிப்பு!! மற்ற ஆடி கார்களின் விலைகளும் உயர்ந்தன

ஆடி இந்தியாவில் விற்பனை செய்யும் மாடர்ன் கார்களுள் ஒன்றாக விளங்கும் எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் இந்தியாவில் கடந்த 2021 மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 3.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 349 பிஎச்பி மற்றும் 500 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜினை பெறும் எஸ்5 ஸ்போர்ட்பேக்கின் விலை அறிமுகத்திற்கு பிறகு முதல்முறையாக ரூ.80,000 உயர்த்தப்பட்டுள்ளது.

ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் காரின் விலை அதிரடியாக ரூ.22 லட்சம் அதிகரிப்பு!! மற்ற ஆடி கார்களின் விலைகளும் உயர்ந்தன

இதன் காரணமாக இந்த ஆடி ஸ்போர்ட்பேக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.81.29 லட்சமாக உயர்ந்துள்ளது. ஒரே ஒரு 3.0 டி.எஃப்.எஸ்.ஐ குவாட்ரோ வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படும் எஸ்5 ஸ்போர்ட்பேக் காருக்கு 8 நிறத்தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. சமீபத்தில் இதன் கூடுதல் செயல்திறன்மிக்க வெர்சனாக ஆர்எஸ்5 ஸ்போர்ட்பேக் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் காரின் விலை அதிரடியாக ரூ.22 லட்சம் அதிகரிப்பு!! மற்ற ஆடி கார்களின் விலைகளும் உயர்ந்தன

இதன் விலை ரூ.1.60 லட்சம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த 4-கதவு ஸ்போர்ட்ஸ் சலூன் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்போது ரூ.1.05 கோடியாக கொண்டுவரப்பட்டுள்ளது. எஸ்5 ஸ்போர்ட்பேக் காரை போன்று ஆர்எஸ்5 ஸ்போர்ட்பேக்கும் ஒரே ஒரு வேரியண்ட்டில், 8 விதமான நிறத்தேர்வுகளில் விற்பனைக்கு கிடைக்கிறது.

ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் காரின் விலை அதிரடியாக ரூ.22 லட்சம் அதிகரிப்பு!! மற்ற ஆடி கார்களின் விலைகளும் உயர்ந்தன

இவை எல்லாவற்றையும் விட ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் காரின் விலை ஒரேடியாக ரூ.22.12 லட்சம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விலை அதிகரிப்பிற்கு முன்பு வரையில் ரூ.1.94 கோடியில் எக்ஸ்-ஷோரூம் விலையினை கொண்டிருந்த இந்த காரின் விலை தற்போது ரூ.2.16 கோடியாக உயர்ந்துள்ளது.

ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் காரின் விலை அதிரடியாக ரூ.22 லட்சம் அதிகரிப்பு!! மற்ற ஆடி கார்களின் விலைகளும் உயர்ந்தன

இந்தியாவில் தற்போதைக்கு ஆடி பிராண்டின் ஒரே ஒரு எலக்ட்ரிக் காராக விளங்கும் இ-ட்ரான் எஸ்யூவி ஆனது இ-ட்ரான் 50 மற்றும் இ-ட்ரான் 55 என்ற இரு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இவை இரண்டின் விலைகள் முறையே ரூ.1 லட்சம் மற்றும் ரூ.1.15 லட்சம் உயர்த்தப்பட்டுள்ளன. ஆடி இ-ட்ரானுக்கு விற்பனையில் ஜாகுவார் ஐ-பேஸ் மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் இக்யூசி உள்ளிட்டவை போட்டியாக விளங்குகின்றன.

Most Read Articles

மேலும்... #ஆடி #audi
English summary
Audi India hikes prices of select models from November 2021
Story first published: Thursday, November 18, 2021, 7:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X