ரூ. 40 லட்சத்துக்கு Audi A4 சொகுசு கார்... புதியதாக ப்ரீமியம் வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்!

சொகுசு உற்பத்தி நிறுவனம் ஆடி (Audi) அதன் ஏ4 ( A4) கார் மாடலில் குறைந்த விலை தேர்வு ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வேரியண்டின் விலை மற்றும் பிற முக்கிய விபரங்கள இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ரூ. 40 லட்சத்துக்கு Audi A4 சொகுசு கார்... புதியதாக ப்ரீமியம் வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்!

பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான ஆடி (Audi), அதன் ஏ4 (A4) எனும் பிரபல சொகுசு கார் மாடலில் புதியதாக ஓர் தேர்வை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே இரு வேரியண்டுகளில் இது விற்பனைக்குக் கிடைத்து வரும் நிலையில் மூன்றாவதாக ஓர் தேர்வை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ரூ. 40 லட்சத்துக்கு Audi A4 சொகுசு கார்... புதியதாக ப்ரீமியம் வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்!

பிரீமியம் ( A4 premium) எனும் வேரியண்டையே நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே பிரீமியம் ப்ளஸ் (Premium Plus) மற்றும் டெக்னாலஜி (Technology) எனும் இரு வேரியண்டுகளில் ஆடி ஏ4 விற்பனைக்குக் கிடைத்து வந்தது குறிப்பிடத்தகுந்தது. இவற்றின் வரிசையிலேயே தற்போது புதிதாக ஏ4-இன் பிரீமியம் தேர்வு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரூ. 40 லட்சத்துக்கு Audi A4 சொகுசு கார்... புதியதாக ப்ரீமியம் வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த வேரியண்டிற்கு ரூ. 40 லட்சம் விலையை ஆடி நிர்ணயித்துள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆடி நிறுவனம் ஏ4 சொகுசு கார் மாடலை நடப்பு 2021ம் ஆண்டின் தொடக்கத்திலேயே விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

ரூ. 40 லட்சத்துக்கு Audi A4 சொகுசு கார்... புதியதாக ப்ரீமியம் வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்!

ஜனவரி 5ம் தேதி அன்றே இந்த கார் பல்வேறு மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் விற்பனைக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து இன்னும் பல்வேறு மாடல்களை நிறுவனம் தொடர்ச்சியாக நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அந்தவகையில், அண்மையில் மின்சார கார் மாடலான இ-ட்ரான் ஜிடி-யை இந்தியாவில் ஆடி அறிமுகம் செய்து வைத்தது.

ரூ. 40 லட்சத்துக்கு Audi A4 சொகுசு கார்... புதியதாக ப்ரீமியம் வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்!

இதனைத் தொடர்ந்து, கூடுதல் தேர்வை வழங்கும் வகையில் ஏ4-இல் ப்ரீமியம் வேரியண்ட் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது விற்பனையில் இருக்கும் மற்ற இரு வேரியண்டுகளைக் காட்டிலும் சற்றே குறைந்த விலை தேர்வாக இந்த பிரீமியம் வேரியண்ட் இருக்கின்றது. நடப்பு 2021ம் ஆண்டின் இறுதியைக் கொண்டாடும் விதமாக ஆடி நிறுவனம் இத்தேர்வை விற்பனைக்குக் கொண்டு வந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ரூ. 40 லட்சத்துக்கு Audi A4 சொகுசு கார்... புதியதாக ப்ரீமியம் வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்!

ஆடி ஏ4 பிரீமியம் வேரியண்ட் ஆரம்ப நிலை வேரியண்டாக விற்பனைக்கு வந்தாலும், அதில் சொகுசு மற்றும் பிரீமியம் அம்சங்களுக்கு எந்தவித குறைச்சலுமின்றி காட்சியளிக்கின்றது. டிஆர்எல்களுடன் கூடிய எல்இடி ஹெட்லைட், எல்இடி வால் பகுதி மின் விளக்கு, சன் ரூஃப், ஆடி சவுண்ட் சிஸ்டம்,ஆடி ஸ்மார்ட்போன் இணப்பு வசதி, ஒயர்லெஸ் சார்ஜர் வசதி உடன் ஆடி ஃபோன் பாக்ஸ் ஆகிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

ரூ. 40 லட்சத்துக்கு Audi A4 சொகுசு கார்... புதியதாக ப்ரீமியம் வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்!

இத்துடன், பார்க்கிங் எய்ட் ப்ளஸ், ரியர் வியூ கேமிரா, ஆடி டிரைவ் செலக்ட், ஆம்பிசியன்ட் மின் விளக்கு, ஆறு ஏர் பேக்குகள், 4-வே லூம்பார் சப்போர்க் முன்பக்க இருக்கைகள், 10 இன்சிலான இன்ஃபோடெயின்மென்ட் திரை உள்ளிட்ட அம்சங்களும் ஆடி ஏ4 பிரீமியம் வேரியண்டில் வழங்கப்பட்டுள்ளன.

ரூ. 40 லட்சத்துக்கு Audi A4 சொகுசு கார்... புதியதாக ப்ரீமியம் வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்!

எஞ்ஜினைப் பொருத்தவரை 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜினே இக்காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 190 எச்பி மற்றும் 320 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜின் மிக சிறந்த இயக்க அனுபவத்தை வழங்கும் என ஆடி நிறுவனம் வாக்குறுதி அளிக்கின்றது.

ரூ. 40 லட்சத்துக்கு Audi A4 சொகுசு கார்... புதியதாக ப்ரீமியம் வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்!

குறிப்பாக காரிம் இடம் பெற்றிருக்கும் சொகுசான இருக்கை அமைப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகள் ரைடுகளை பல மடங்கு சுவாரஷ்யமானதாக மாற்றும் வகையில் கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. ஆடி ஏ4-இன் பிற தேர்வுகளான பிரிமீயம் ப்ளஸ் வேரியண்ட்டிற்கு 42 லட்சத்து 34 ஆயிரம் ரூபாயும், டெக்னாலஜி வேரியண்ட்டிற்கு 46 லட்சத்து 67 ஆயிரம் ரூபாயும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரூ. 40 லட்சத்துக்கு Audi A4 சொகுசு கார்... புதியதாக ப்ரீமியம் வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்!

இவை இரண்டும் எக்ஸ்ஷோரூம் விலைகள் ஆகும். மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஆகிய கார்களுக்கு இந்த சொகுசு செடான் ஏ4 நேரடி போட்டியாக இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. புதிய ஆடி ஏ4 சொகுசு கார் நீலம், வெள்ளை, கருப்பு, சில்வர் மற்றும் சாம்பல் ஆகிய 5 வண்ணங்களில் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும்.

Most Read Articles

மேலும்... #ஆடி #audi
English summary
Audi introduces a4 premium to celebrate a successful 2021
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X