2 லட்ச ரூபாவாம்! Audi Q5 காருக்கு இந்தியாவில் முன் பதிவுகள் தொடக்கம்... உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டது!

ஆடி க்யூ5 எஸ்யூவி சொகுசு காருக்கான புக்கிங் பணிகள் இந்தியாவில் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம், வாங்க.

2 லட்ச ரூபாவாம்! Audi Q5 காருக்கு இந்தியாவில் முன் பதிவுகள் தொடக்கம்... உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டது!

பிரபல சொகுசு உற்பத்தி நிறுவனமான ஆடி, அண்மையில் அதன் புகழ்பெற்ற க்யூ5 சொகுசு கார் மாடலின் உற்பத்தியை இந்தியாவில் தொடங்கியது. அவரங்காபாத் உள்ள உற்பத்தி ஆலையில் வைத்தே இந்த காரின் தயாரிப்பு பணிகளை நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.

2 லட்ச ரூபாவாம்! Audi Q5 காருக்கு இந்தியாவில் முன் பதிவுகள் தொடக்கம்... உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டது!

மிக விரைவில் இந்த காரை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த காருக்கே தற்போது ஆடி நிறுவனம் இந்தியாவில் புக்கிங் தொடங்கியுள்ளது. ரூ. 2 லட்சம் முன் தொகையில் காருக்கான புக்கிங் ஏற்கப்பட்டு வருகின்றது. புதிய ஆடி க்யூ5 சொகுசு கார் பிரீமியம் ப்ளஸ் (Premium Plus) மற்றும் டெக்னாலஜி (Technology) எனும் இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.

2 லட்ச ரூபாவாம்! Audi Q5 காருக்கு இந்தியாவில் முன் பதிவுகள் தொடக்கம்... உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டது!

ஆடி க்யூ5 காருக்கு புக்கிங் தொடங்கியிருப்பதுகுறித்து நிறுவனத்தின் தலைவர் பல்பிர் சிங் தில்லோன் கூறியதாவது, "க்யூ5 காருக்கு புக்கிங்கை தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகின்றோம். க்யூ குடும்பத்தில் வெற்றிகரமான மாடலாக இது இருக்கின்றது. 2021ம் ஆண்டில் நாங்கள் விற்பனைக்குக் கொண்டு வரும் ஒன்பதாவது கார் மாடல் இது.

2 லட்ச ரூபாவாம்! Audi Q5 காருக்கு இந்தியாவில் முன் பதிவுகள் தொடக்கம்... உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டது!

ஆடி க்யூ5 மிக சிறந்த அம்சங்கள், சொகுசு மற்றும் இன்னும் பல அம்சங்களைக் கொண்டிருக்கின்றது. புதிய டிசைன் முதல் பார்வையிலேயே கவரும் வகையில் உள்ளது. இப்போது மட்டுமின்றி எதிர்காலத்திலும் இந்த கார் வாடிக்கையாளர்களைக் கவரும் என நம்புவதாக" தெரிவித்துள்ளார்.

2 லட்ச ரூபாவாம்! Audi Q5 காருக்கு இந்தியாவில் முன் பதிவுகள் தொடக்கம்... உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டது!

ஆடி க்யூ 5 சொகுசு காருக்கான விலை அறிவிக்கப்படவில்லை. இந்த கார் உள்ளூரிலேயே வைத்து தயாரிக்கப்பட்டு வருவதால் சற்று குறைவான விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது. ரூ. 55 லட்சத்திற்கும் குறைவான விலையிலேயே எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதே விலையில் நிச்சயம் இந்த கார் வரும் என கூறிவிட முடியாது.

2 லட்ச ரூபாவாம்! Audi Q5 காருக்கு இந்தியாவில் முன் பதிவுகள் தொடக்கம்... உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டது!

வரும் நவம்பர் மாதம் இந்த காரின் விலை மற்றும் இன்னும் பிற முக்கிய தகவல்கள் வெளியிடப்பட உள்ளன. ஆடி க்யூ5 சொகுசு கார் இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் பிஎம்டபிள்யூ எக்ஸ்3, லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனைக்கு வர இருக்கின்றது.

2 லட்ச ரூபாவாம்! Audi Q5 காருக்கு இந்தியாவில் முன் பதிவுகள் தொடக்கம்... உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டது!

ஆடி க்யூ 5 காரில் புதுப்பித்தலின் கீழ் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அந்தவகையில், முன் பக்கத்தில் தேன்கூடு வடிவிலான க்ரில், புதிய பம்பர், புதிய எல்இடி ஹெட்லேம்ப், பெரிய காற்று உள்வாங்கி துளைகள், டிஜிட்டல் ஓஎல்இடிதொழில்நுட்பம் அடங்கி பின் பக்க மின் விளக்குகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன.

2 லட்ச ரூபாவாம்! Audi Q5 காருக்கு இந்தியாவில் முன் பதிவுகள் தொடக்கம்... உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டது!

தொடர்ந்து, 19 இன்ச் அளவுள்ள 5 இரட்டோ ஸ்போக் நட்சத்திர ஸ்டைலிலான அலாய் வீல்கள், பார்க் அசிஸ்ட், அட்டகாசமான சாவி (சென்சார் வசதி உடன்) விர்சுவல் காக்பிட், 3டி சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்டவையும் ஆடி க்யூ5 காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

2 லட்ச ரூபாவாம்! Audi Q5 காருக்கு இந்தியாவில் முன் பதிவுகள் தொடக்கம்... உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டது!

இவற்றுடன், காரின் உட்பகுதியை மேலும் அலங்கரிக்கும் வகையில் பெரிய 10.1 இன்சிலான எம்எம்ஐ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டிருக்கின்றது. இது அமேசான் அலெக்ஸா வசதி மற்றும் கார் இணைப்பு வசதியைக் கொண்டது. இவற்றின் வாயிலாக இக்காரின் பயண அனுபவம் வேற லெவலுக்கு போக இருக்கின்றன.

2 லட்ச ரூபாவாம்! Audi Q5 காருக்கு இந்தியாவில் முன் பதிவுகள் தொடக்கம்... உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டது!

இத்துடன், கூடுதல் பாதுகாப்பை வழங்கும் வகையில் 8 ஏர்பேக்குகள், முன் மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் வழங்கப்பட்டிருக்கின்றது. இன்னும் பல அம்சங்கள் மேலும் பாதுகாப்பை வழங்கும் வகையில் ஆடி நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட க்யூ5 காரில் வழங்கியிருக்கின்றது.

2 லட்ச ரூபாவாம்! Audi Q5 காருக்கு இந்தியாவில் முன் பதிவுகள் தொடக்கம்... உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டது!

ஆடி க்யூ5 எஸ்யூவி காரில் பிஎஸ்-6 தர 2.0 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 249 பிஎச்பி மற்றும் 370 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜின் 7 ஸ்பீடு ட்யூவல் க்ளட்ச் தானியங்கி கியர்பாக்ஸில் இயங்கும்.

Most Read Articles

மேலும்... #ஆடி #audi
English summary
Audi opens booking for q5 suv in india launching soon
Story first published: Tuesday, October 19, 2021, 12:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X