இந்தியாவில் தொடங்கியது ஆடி இ-ட்ரான் மின்சார காருக்கான புக்கிங்! முன்பதிவு தொகையே ரூ. 5 லட்சம்!

ஆடி இ-ட்ரான் மின்சார காருக்கான முன்பதிவு இந்தியாவில் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் தொடங்கியது ஆடி இ-ட்ரான் மின்சார காருக்கான புக்கிங்! முன்பதிவு தொகையே ரூ. 5 லட்சம்!

சொகுசு கார் உற்பத்தியாளரான ஆடி, அதன் முதல் சொகுசு எலெக்ட்ரிக் காரான இ-ட்ரான் மாடலை மிக விரைவில் நாட்டில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் ரக காராகும். இந்த காரையே அடுத்த மாதம் 22ம் தேதி நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் தொடங்கியது ஆடி இ-ட்ரான் மின்சார காருக்கான புக்கிங்! முன்பதிவு தொகையே ரூ. 5 லட்சம்!

இதன் வருகையை முன்னிட்டு தற்போது இ-ட்ரான் சொகுசு மின்சார காருக்கான புக்கிங்கை நிறுவனம் இந்தியாவில் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை நிறுவனம் அதன் சமூக வலைதள பக்கங்களின் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் தொடங்கியது ஆடி இ-ட்ரான் மின்சார காருக்கான புக்கிங்! முன்பதிவு தொகையே ரூ. 5 லட்சம்!

ஆடி நிறுவனத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மின்சார காராக இ-ட்ரான் இருக்கின்றது. இந்த கார் இந்திய ஷோரூம்களுக்கு வருகைதந்துவிட்டன. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே இ-ட்ரானுக்கான புக்கிங் நாட்டில் தொடங்கப்பட்டிருக்கின்றது.

இந்தியாவில் தொடங்கியது ஆடி இ-ட்ரான் மின்சார காருக்கான புக்கிங்! முன்பதிவு தொகையே ரூ. 5 லட்சம்!

ஆடி இ-ட்ரான் இந்தியாவில் மிக விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் பென்ஸ் இக்யூசி மற்றும் ஜாகுவார் ஐ-பேஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாக முன்னரே களமிறங்க இருக்கின்றது. தற்போது புக்கிங்கானது ரூ. 5 லட்சம் என்ற உச்சபட்ச முன் தொகையில் செய்யப்பட்டு வருகின்றது.

இந்தியாவில் தொடங்கியது ஆடி இ-ட்ரான் மின்சார காருக்கான புக்கிங்! முன்பதிவு தொகையே ரூ. 5 லட்சம்!

காரின் விலைகுறித்த முழு விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை. அடுத்த மாதம் அறிமுக நிகழ்வின்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரானது இ-ட்ரான் மற்றும் இ-ட்ரான் ஸ்போர்ட்பேக் என இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.

இந்தியாவில் தொடங்கியது ஆடி இ-ட்ரான் மின்சார காருக்கான புக்கிங்! முன்பதிவு தொகையே ரூ. 5 லட்சம்!

இவ்விரு கார்களிலும் 95kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இத்தடுன், புராக்ரஸிவ் ஸ்டியரிங், அடாப்டீவ் ஏர் சஸ்பென்ஷன் மற்றும் அனைத்து வீல்களும் இயங்கும் வசதி என பல்வேறு சிறப்பு அம்சங்கள் இ-ட்ரானில் வழங்கப்பட்டிருக்கின்றது.

இந்தியாவில் தொடங்கியது ஆடி இ-ட்ரான் மின்சார காருக்கான புக்கிங்! முன்பதிவு தொகையே ரூ. 5 லட்சம்!

ஆடி இ-ட்ரான் ரேஞ்ஜ்:

ஆடி இ-ட்ரான் மின்சார காரானது 359 கிமீ முதல் 484 கிமீ வரையிலான ரேஞ்ஜ் திறனில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இந்த காரை முழுமையாக சார்ஜ் செய்ய 8.5 மணி நேரங்கள் தேவைப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அதிகபட்ச நேரமானது வழக்கமான 11கிலோவாட் ஏசி சார்ஜில் வைத்து சார்ஜ் செய்யும்போதே தேவைப்படுகிறது.

இந்தியாவில் தொடங்கியது ஆடி இ-ட்ரான் மின்சார காருக்கான புக்கிங்! முன்பதிவு தொகையே ரூ. 5 லட்சம்!

ஆடி இ-ட்ரான் எஸ்யூவி காரை கடந்த ஆண்டின் இறுதியில்தான் நிறுவனம் அப்டேட் செய்தது. புதுப்பித்தலின் அடிப்படையில் 71.2 kWh பேட்டரி காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மணிக்கு 190 கிமீ வேகத்தில் இயங்கக் கூடிய மின் மோட்டார் ஆகும். மேலும், வெறும் 6.8 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிமீ எனும் வேகத்தில் செல்லும் திறனை இது கொண்டிருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #ஆடி #audi
English summary
Audi Opens Bookings For e-Tron EV SUV In India. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X