இந்த ஆடி சொகுசு எஸ்யூவி காரின் தயாரிப்பு பணிகளும் இந்தியாவில் ஸ்டார்ட் ஆயிடுச்சா!! 2022 ஜனவரியில் அறிமுகம்!

2022 ஆடி க்யூ7 எஸ்யூவி கார்களின் தயாரிப்பு பணிகள் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள படத்தினையும், இந்த புதிய ஆடி காரினை பற்றியும் இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்த ஆடி சொகுசு எஸ்யூவி காரின் தயாரிப்பு பணிகளும் இந்தியாவில் ஸ்டார்ட் ஆயிடுச்சா!! 2022 ஜனவரியில் அறிமுகம்!

ஆடி இந்தியா நிறுவனத்தின் கார்கள் வரிசையில் க்யூ8 மாடலுக்கு கீழே நிலைநிறுத்தப்பட உள்ள புதிய க்யூ7 எஸ்யூவி அடுத்த ஜனவரி மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் தான் தற்போது 2022 ஆடி க்யூ7 எஸ்யூவி கார்களின் தயாரிப்பு பணிகள் அவ்ரங்காபாத்தில் உள்ள ஆடி நிறுவனத்தின் தொழிற்சாலையில் துவங்கப்பட்டுள்ளன.

இந்த ஆடி சொகுசு எஸ்யூவி காரின் தயாரிப்பு பணிகளும் இந்தியாவில் ஸ்டார்ட் ஆயிடுச்சா!! 2022 ஜனவரியில் அறிமுகம்!

2021ஆம் ஆண்டில் எலக்ட்ரிக்கில் அதிக முதலீடுகளை செய்துவந்துள்ள ஆடி நிறுவனம் இந்தியாவில் அதன் ‘க்யூ' வரிசை கார்களின் எண்ணிக்கையை தீவிரமாக விரிவுப்படுத்த ஆரம்பித்துள்ளது. அதேநேரம் இந்திய சந்தை போக்கை அறிந்து, கம்பீரமான எஸ்யூவி ரக உடலமைப்பை கொண்ட கார்களை அறிமுகப்படுத்தவும் ஆடி முனைப்புடன் உள்ளது.

இந்த ஆடி சொகுசு எஸ்யூவி காரின் தயாரிப்பு பணிகளும் இந்தியாவில் ஸ்டார்ட் ஆயிடுச்சா!! 2022 ஜனவரியில் அறிமுகம்!

ஏனெனில் இப்போதைக்கு நம் நாட்டு சந்தையில் ஆடி நிறுவனம் விற்பனை செய்யும் கார்களில் சுமார் 45% எஸ்யூவி கார்களென புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்தும் வகையில் அடுத்த 2022 ஜனவரி மாதத்தில் க்யூ7 எஸ்யூவி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது அவ்ரங்காபாத் தொழிற்சாலையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள படத்தில் 2022 க்யூ7 மாடலின் முன்பக்கத்தை பார்க்க முடிகிறது.

இந்த ஆடி சொகுசு எஸ்யூவி காரின் தயாரிப்பு பணிகளும் இந்தியாவில் ஸ்டார்ட் ஆயிடுச்சா!! 2022 ஜனவரியில் அறிமுகம்!

இந்த புதிய ஆடி எஸ்யூவி காரின் முன்பக்கத்தில் அறுக்கோண வடிவிலான க்ரில், மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்கள், பெரிய காற்று ஏற்பான்கள் வழங்கப்பட்டுள்ளன. பக்கவாட்டில் ஜன்னல் லைன்களில் க்ரோம் கார்னிஷ் மற்றும் கதவுகளில் க்ரோம் லைன், பின்பக்கத்தில் க்ரோம் அலங்கரிப்புடன் எல்இடி டெயில்லைட்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

இந்த ஆடி சொகுசு எஸ்யூவி காரின் தயாரிப்பு பணிகளும் இந்தியாவில் ஸ்டார்ட் ஆயிடுச்சா!! 2022 ஜனவரியில் அறிமுகம்!

2022 ஆடி க்யூ7 எஸ்யூவி காரின் நீளம் 5,063மிமீ, அகலம் 1,970மிமீ மற்றும் உயரம் 1,741மிமீ ஆகும். வீல்பேஸ் எனப்படும் முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் இந்த எஸ்யூவியில் 2,995மிமீ ஆகும். பின்பக்கத்தில் இந்த ஆடி கார் மிக பெரிய அளவில் 865 லிட்டர் கொள்ளளவில் பொருட்களை வைக்கும் பகுதியினை பெறுகிறது. பின் இருக்கை வரிசையினை மடக்குவதன் மூலம் இதனை 2,050 லிட்டர்களாக அதிகரித்து கொள்ள முடியும்.

இந்த ஆடி சொகுசு எஸ்யூவி காரின் தயாரிப்பு பணிகளும் இந்தியாவில் ஸ்டார்ட் ஆயிடுச்சா!! 2022 ஜனவரியில் அறிமுகம்!

சில வெளிநாட்டு சந்தைகளில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் க்யூ7 மாடலின் 2022ஆம் ஆண்டிற்கான வெர்சனில் பின் இருக்கை பயணிகளுக்கும் பக்கவாட்டு காற்றுப்பைகள், ஹீட்டட் ORVM-கள், அப்டேட் செய்யப்பட்ட டயரின் அழுத்தத்தை கண்காணிக்கும் அமைப்பு மற்றும் தகவமைத்து கொள்ளக்கூடிய க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

இந்த ஆடி சொகுசு எஸ்யூவி காரின் தயாரிப்பு பணிகளும் இந்தியாவில் ஸ்டார்ட் ஆயிடுச்சா!! 2022 ஜனவரியில் அறிமுகம்!

இந்த காரின் மற்ற அம்சங்களாக, கேபின் விளக்குகள், 12 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய முன்பக்க இருக்கைகள், எல்லா விதமான வானிலைக்குமான தரைப்பாய்கள் முதலியவற்றை சொல்லலாம். இவற்றுடன் நினைவக செயல்பாடு மற்றும் மடக்கு வசதி உடனான பின்பக்கத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகளை பெறும் க்யூ7-இல் வெளிப்புற தோற்றத்தில் பெரிய அளவில் எந்த வித்தியாசத்தையே எதிர்பார்க்காதீர்கள்.

இந்த ஆடி சொகுசு எஸ்யூவி காரின் தயாரிப்பு பணிகளும் இந்தியாவில் ஸ்டார்ட் ஆயிடுச்சா!! 2022 ஜனவரியில் அறிமுகம்!

அதாவது, ஆடி க்யூ எஸ்யூவி கார்களுக்கே உண்டான சிக்னெச்சர் தோற்றத்தை தான் சில வித்தியாசங்களுடன் க்யூ7 மாடலும் தொடர்ந்துள்ளது. சர்வதேச சந்தைகளில் 5 மற்றும் 7-இருக்கை தேர்வுகளில் இந்த லக்சரி ஆடி எஸ்யூவி கார் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், க்யூ7 மாடலில் மொத்தம் 6 விதமான வேரியண்ட் தேர்வுகளை ஆடி நிறுவனம் வழங்குகிறது. இந்திய சந்தையில் பெட்ரோல் & டீசல் என இரு விதமான என்ஜின் தேர்வுகளும் இந்த காருக்கு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த ஆடி சொகுசு எஸ்யூவி காரின் தயாரிப்பு பணிகளும் இந்தியாவில் ஸ்டார்ட் ஆயிடுச்சா!! 2022 ஜனவரியில் அறிமுகம்!

இவற்றுடன் டிரான்ஸ்மிஷன் பணியை கவனிக்க இந்த எஸ்யூவி காரில் 8-ஸ்பீடு டிப்ட்ரானிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம். இதனுடன் குவாட்ரோ அனைத்து-சக்கர-ட்ரைவ் தொழிற்நுட்பத்தையும் க்யூ7-இல் எதிர்பார்க்கிறோம். இந்தியாவில் இந்த புதிய ஆடி காருக்கு விற்பனையில் பிஎம்டபிள்யூ எக்ஸ்7, மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்எஸ் கிளாஸ் மற்றும் வால்வோ எக்ஸ்சி90 உள்ளிட்டவை போட்டியாக விளங்கவுள்ளன.

இந்த ஆடி சொகுசு எஸ்யூவி காரின் தயாரிப்பு பணிகளும் இந்தியாவில் ஸ்டார்ட் ஆயிடுச்சா!! 2022 ஜனவரியில் அறிமுகம்!

இந்தியாவில் கடந்த நவம்பர் மாத இறுதியில் புதிய க்யூ5 ஃபேஸ்லிஃப்ட் காரை ஆடி நிறுவனம் அறிமுகப்படுத்தியது. ரூ.58.93 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் தற்போதைக்கு மலிவான ஆடி கார்களுள் ஒன்றாக அறிமுகப்படுத்தப்பட்ட க்யூ5 மாடலை காட்டிலும் தோற்றத்தில் க்யூ7 எஸ்யூவி பெரியதாகும். இருப்பினும் இதனை காட்டிலும் அளவில் பெரிய க்யூ8 மற்றும் க்யூ9 எஸ்யூவி கார்களையும் ஆடி வெளிநாடுகளில் விற்பனை செய்து வருகிறது. எனவே ஆடியின் பிரதான க்யூ வரிசை எஸ்யூவி மாடல் க்யூ7 கிடையாது.

Most Read Articles
மேலும்... #ஆடி #audi
English summary
Audi India has begun local production of its LEGENDARY Audi Q7 at the SAVWIPL Plant in Aurangabad.
Story first published: Friday, December 10, 2021, 23:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X