நிச்சயம் இந்த பைக் டெலிவரி மேன்களுக்கு உதவும்... ஷோரூமில் முதல் முறையாக காட்சி தந்த பஜாஜின் விலை குறைவான பைக்!

பஜாஜ் நிறுவனம் சிடி110 எக்ஸ் எனும் பைக்கை விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிலையில், இப்பைக் அறிமுகத்திற்கு முன்னரே இணையத்தின் வாயிலாக வெளியுலகிற்கு காட்சிக் கொடுத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.

நிச்சயம் இந்த பைக் டெலிவரி மேன்களுக்கு உதவும்... ஷோரூமில் முதல் முறையாக காட்சி தந்த பஜாஜின் விலை குறைவான பைக்!!

பஜாஜ் நிறுவனத்தின் புகழ்வாய்ந்த இருசக்கர வாகன மாடல்களில் சிடி மாடலும் ஒன்று. இதில், 100 சிசி மற்றும் 110 சிசி என இரு விதமான சிசி திறன்கள் கொண்ட எஞ்ஜின் தேர்வுகளை நிறுவனம் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. தினசரி இருசக்கர வாகனத்தை பயன்படுத்துவோர் மற்றும் அதிக மைலேஜை தேடும் இளைஞர்களின் விருப்பமிகு டூ-வீலராக இது இருக்கின்றது.

நிச்சயம் இந்த பைக் டெலிவரி மேன்களுக்கு உதவும்... ஷோரூமில் முதல் முறையாக காட்சி தந்த பஜாஜின் விலை குறைவான பைக்!!

இந்த பைக் மாடலிலேயே புதிய 'சிடி 110எக்ஸ்' எனும் மாடலை நிறுவனம் இந்தியாவில் களமிறக்க திட்டமிட்டுள்ளது. 110சிசி பிரிவில் கூடுதல் தேர்வை வழங்கும் நோக்கில் இப்புதிய வேரியண்டை நிறுவனம் களமிறக்க இருக்கின்றது. இப்புதிய இருசக்கர வாகனமே தற்போது பஜாஜ் இருசக்கர வாகன விற்பனையாளர்களின் ஷோரூம்களுக்கு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிச்சயம் இந்த பைக் டெலிவரி மேன்களுக்கு உதவும்... ஷோரூமில் முதல் முறையாக காட்சி தந்த பஜாஜின் விலை குறைவான பைக்!!

இத்தகவலை உறுதிப்படுத்தும் வகையில் சிடி 110எக்ஸ் பைக் ஷோரூம்களில் நின்றுக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. வழக்கமான பஜாஜ் சிடி மாடலைக் காட்டிலும் இந்த புதுமுக சிடி110எக்ஸ் பைக் சற்று வித்தியாசமான தோற்றத்தைப் பெற்றிருக்கின்றது.

நிச்சயம் இந்த பைக் டெலிவரி மேன்களுக்கு உதவும்... ஷோரூமில் முதல் முறையாக காட்சி தந்த பஜாஜின் விலை குறைவான பைக்!!

பெட்ரோல் டேங்கில் ரப்பர் பேட், வட்ட வடிவ ஹெட்லைட்டிற்கு மேலே சிறிய விண்ட் ஸ்கிரீன், பின்பக்கத்தில் கேரியர் வசதி என பல்வேறு புதிய அம்சங்கள் இப்பைக்கில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இப்பைக்கில் இடம்பெற்றிருக்கும் கேரியர் அமைப்பை வைத்து பார்க்கையில், டெலிவரி மற்றும் பார்சல்களை கையாளும் நிறுவனங்களுக்கு பயன்படும் நோக்கில் இவ்வாகனத்தை பஜாஜ் கட்டமைத்திருப்பது தெரிய வருகின்றது.

நிச்சயம் இந்த பைக் டெலிவரி மேன்களுக்கு உதவும்... ஷோரூமில் முதல் முறையாக காட்சி தந்த பஜாஜின் விலை குறைவான பைக்!!

டெலிவரி சேவையில் ஈடுபட்டு வரும் பலர் தங்களின் சொந்த வாகனங்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டே இவ்வாகனம் விற்பனைக்குக் கொண்டு வரப்பட உள்ளது. பெரும்பாலான டெலிவரி மேன்கள் தங்களின் விலையுயர்ந்த அல்லது பெரியளவில் மைலேஜ் தராத வாகனங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

நிச்சயம் இந்த பைக் டெலிவரி மேன்களுக்கு உதவும்... ஷோரூமில் முதல் முறையாக காட்சி தந்த பஜாஜின் விலை குறைவான பைக்!!

இதனால், அவர்களுக்கு கிடைக்கும் லாபமானது பெரியளவில் அடிவாங்குவதாகக் கூறப்படுகின்றது. இவர்களுக்கே இந்த விலைக் குறைந்த பஜாஜ் சிடி110 எக்ஸ் உதவும் என நிறுவனம் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றது. குறைந்த பராமரிப்பு செலவு, அதிக மைலேஜ் மற்றும் நீடித்து உழைக்கும் திறன் ஆகியவற்றாலும் இப்பைக் அவர்களுக்கு உதவும் என நம்பிக்கைத் தெரிவித்திருக்கின்றது.

நிச்சயம் இந்த பைக் டெலிவரி மேன்களுக்கு உதவும்... ஷோரூமில் முதல் முறையாக காட்சி தந்த பஜாஜின் விலை குறைவான பைக்!!

இந்த பைக்கின் விலைகுறித்த தகவலை பஜாஜ் நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை. இருப்பினும், ரூ.55 ஆயிரம் தொடங்கி ரூ. 60 என்ற விலையிலேயே விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்துடன், ஹலோஜன் மின் விளக்கு மற்றும் டிஆர்எல் பகல்நேர மின்விளக்கு ஆகியவற்றுடன் இப்பைக் விற்பனைக்கு வர இருக்கின்றது.

நிச்சயம் இந்த பைக் டெலிவரி மேன்களுக்கு உதவும்... ஷோரூமில் முதல் முறையாக காட்சி தந்த பஜாஜின் விலை குறைவான பைக்!!

இதுமட்டுமின்றி, நீளம்-கருப்பு மற்றும் சாம்பல்/வெள்ளி, கருப்பு-சிவப்பு மற்றும் சாம்பல்/வெள்ளி ஆகிய கவர்ச்சியான நிற தேர்வில் இப்பைக் கிடைக்க உள்ளது. தொடர்ந்து, 17 இன்சிலான எம்ஆர்எஃப் டயர்கள் மற்றும் 5 ஸ்போக்குகள் கொண்ட அலாய் வீல்களே இப்பைக்கை அலங்கரிக்க இருக்கின்றன.

நிச்சயம் இந்த பைக் டெலிவரி மேன்களுக்கு உதவும்... ஷோரூமில் முதல் முறையாக காட்சி தந்த பஜாஜின் விலை குறைவான பைக்!!

மேலும், இப்பைக்கில் சிறந்த சஸ்பென்ஷன் அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதற்காக டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இத்துடன், பைக்கின் கூடுதல் சிறப்பு அமைப்பாக இப்பைக்கின் எஞ்ஜினில் எலெக்ட்ரானிக் ஃப்யூவல் இன்ஜெக்டர் (EFI) சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Image Courtesy: Jet wheels

இந்த எஞ்ஜின் 110சிசி திறன் கொண்டது. இது அதிகபட்சமாக 9.41 பிஎஸ் மற்றும் 8.45 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். இந்த பெட்ரோல் எஞ்ஜின் லிட்டர் ஒன்றிற்கு 90கிமீ வரை மைலேஜ் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், எந்த மாதிரியான ரைடர்களாக இருந்தாலும் இப்பைக்கின் வரவை நிச்சயம் வரவேற்பார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
மேலும்... #bajaj auto
English summary
Bajaj Soon To Launch CT 110 X Bike For e-Commerce Delivery Partners. Read In Tamil.
Story first published: Tuesday, April 13, 2021, 10:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X